Home
Gadgets

சியோமி நிறுவனத்தின் Mi பேண்ட் 6 அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

சியோமி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனமும் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் மி பேண்ட் 6 சாதனத்ததை அறிமுகம் செய்துள்ள சியோமி நிறுவனம்.

மி பேண்ட் 6 சாதனம்

மி பேண்ட் 6 சாதனம்

தற்சமயம் இந்த மி பேண்ட் 6 சாதனம் ஆனது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும். இப்போது இந்த சாதனத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட தகவல்களை சற்றுவிரிவாகப் பார்ப்போம்.

1.56-இன்ச் AMOLED டச் ஸ்க்ரீன் டிஸ்பிளே

1.56-இன்ச் AMOLED டச் ஸ்க்ரீன் டிஸ்பிளே

சியோமி மி பேண்ட் 6 மாடல் 1.56-இன்ச் AMOLED டச் ஸ்க்ரீன் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 152 x 486பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்ட வெளிவந்துள்ளது. குறிப்பாக மி பேண்ட் 5 மாடலை விட பெரிய டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த மி பேண்ட் 6 சாதனம்.

50 மீட்டர் வரை நீர்ப்புகாத டிஸ்பிளே

மி பேண்ட் 6 மாடலில் மிகவும் எதிர்பார்த்த 326ppi பிக்சல் அடர்த்தி, 450 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 50 மீட்டர் வரை நீர்ப்புகாத டிஸ்பிளே ஆதரவு இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் சிறந்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய சாதனம்.

125 எம்ஏஎச் பேட்டரி

125 எம்ஏஎச் பேட்டரி

மி பேண்ட் 6 சாதனம் ஆனது 125 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இது 14 நாட்கள் வரை காத்திருப்பு நேரத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த பேண்ட் முழுமையாக சார்ஜ் ஆக இரண்டு மணி நேரம் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளூடூத் 5.0

இந்த புதிய சாதனம் ப்ளூடூத் 5.0 ஐ ஆதரிக்கிறது. பின்பு 30 விளையாட்டு மாடல்களுடன் வருகிறது மி பேண்ட் 6 மாடல். அதிலும் ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி, உட்புற டிரெட்மில், உள்ள ஆறு செயல்பாடுகளை பேண்ட் தானாகவே கண்டறியும் திறனை கொண்டுள்ளது இந்த மி பேண்ட் 6 சாதனம்.

பேண்ட் சாதனத்தை

அதேபோல் இந்த மி பேண்ட் 6 சாதனம் இதய துடிப்பு கண்காணிப்பு, 24/7 இரத்த அழுத்தம், இரத்த ஆக்ஸிஜன்(SPO2) போன்ற பல திறன்களையும் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனம் தூக்க கண்காணிப்பையும் ஆதரிக்கிறது. அதாவது ரியல்மி நிறுவனமும் இதேபோன்ற அம்சங்ளுடன் ஒரு பேண்ட் சாதனத்தை அண்மையில் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பழுப்பு, பச்சை, ஆரஞ்சு, வெள்ளி,

கருப்பு, நீலம், பழுப்பு, பச்சை, ஆரஞ்சு, வெள்ளி, வெள்ளை மற்றும் மஞ்சள் போன்ற நிறங்களில் சியோமி மி பேண்ட் 6 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.2500-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Band 6 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X