Home
Gadgets

சியோமி மி 5 பேண்ட் 'லீக்': இந்த புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படுமா?

சியோமி நிறுவனத்தின் சியோமி மி பேண்ட் 4 இன் வெற்றியைத் தொடர்ந்து, அதன் அடுத்த மாடலான சியோமி மி 5 பிட்னெஸ் ட்ராக் பேண்ட் என்று அழைக்கப்படும் சாதனத்தின் தகவல்கள் தற்பொழுது வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது.

சியோமி மி 5 பேண்ட் 'லீக்': இந்த புதிய அம்சங்களுடன் அறிமுகமா?

சியோமி மி பேண்ட் 4 இன் வெற்றியைத் தொடர்ந்து, சியோமி மி 5 பிட்னெஸ் ட்ராக் பேண்ட் அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக சியோமி மி 5 பிட்னெஸ் ட்ராக் பேண்ட் மூலம் உலகம் முழுதும் NFC சேவையுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வலைத்தளத்தில் கசிந்துள்ளது.

குறிப்பாக சியோமி மி 4 பிட்னெஸ் ட்ராக் பேண்ட் இன் NFC சேவையுடனான வேரியண்ட் மாடல் சீன சந்தையில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்த மாடலான சியோமி மி 5 பேண்ட் இல் அனைத்து சந்தைகளிலும் இந்த சேவையுடன் களமிறக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பில்ட்-இன் மைக் உடன் இந்த சியோமி மி 5 பிட்னெஸ் ட்ராக் பேண்ட் அறிமுகம் செய்யப்படும் என்றும், கூடுதலாக சில அம்சங்களை சியோமி அறிமுகம் செய்யுமென்றும் தகவல்கள் கசிந்துள்ளது. தற்பொழுது சியோமி மி 4 பேண்ட் இந்தியச் சந்தையில் வெறும் ரூ.2,999 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Band 5 Will Be Launched With NFC Support Leak Informations : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X