பிளிப்கார்ட்: பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் சியோமி பேண்ட் 3-ஐ.!
சியோமி நிறுவனத்தின் ஃபிட்னஸ் எம்ஐ பேண்ட் 3ஐ இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது, குறிப்பாக இந்த சாதனம் M Iஅதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் வரும் டிசம்பர் 16-ம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்திலும் விற்பனைக்கு வருகிறது.

குறிப்பாக இந்த எம்ஐ பேண்ட் 3ஐ சாதனத்தின் விலை ரூ.1,299-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறுசிறப்பம்சங்களையும் பார்ப்போம்.

எம்ஐ பேண்ட் 3 ஐ மாடலானது கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பேண்ட் 3 பிட்னெஸ் பேண்டின் அடிப்படை அம்சங்களோடு அறிமுகம் படுத்தப்பட உள்ளது. ஆனால் இந்த மாடல் கடந்த எம்.ஐ 3-ன் விலையை விட குறைவானது. அதேபோல் எம்.ஐ பேண்ட் 3 ஐ ஆனது இதயதுடிப்பை கண்காணிக்கவும் உதவுகிறது.

எம்.ஐ ஸ்மார்ட் பேண்ட் 3 ஐ இந்தியாவில் ரூ.1,299-க்கு விற்பனைக்கு வர உள்ளது. இது கருப்பு நிறத்தில் அறிமுகப்படுத்த உள்ளது. எம்.ஐ 3கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தும் போது அதன் விலை ரூ.1,999 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

எம்.ஐ பேண்ட் 3 ஐ அம்சங்கள்:
எம்.ஐ பேண்ட் 3ஐ பேண்டானது, 0.78-இன்ச் (128x80 பிக்சல்கள்), மோனோக்ரோம் ஒயிட் எல்இடி டிஸ்ப்ளே 300 நைட் டிஸ்பிளே மற்றும் டச் பேனலுடன் கொண்டது. 110 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியானது 20 நாட்கள் வரை நீடிக்கும். மேலும் இந்த எம்.ஐ பேண்டை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் இரண்டரை மணி நேரம் ஆகும் என்று சியோமி கூறுகிறது. இது ஆண்ட்ராய்டு 4.4 இல்
இருந்து ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு 9 வரை இயங்கும். இது 3 ஏடிஎம் வாட்டர் ப்ரூஃப் அம்சம் கொண்டுள்ளது.

எம்.ஐ 4 பேண்ட்டின் விலை
அதேபோல் எம்.ஐ.காம்மில் கிடைக்கும் எம்.ஐ பேண்ட் 4 ரூ. 2,999 ஆக கடந்த செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவும் எல்இடி டிஸ்ப்ளே மற்றும் 20 நாட்கள் வரை பேட்டரி ஆயுள் கொண்டது.


Click it and Unblock the Notifications