Home
Gadgets

விரைவில் வெளிவரும் அட்டகாசமான சியோமி மி பேண்டு 3.!

சியோமியின் 2ம் தலைமுறை ஃபிட்னஸ் பேண்டை 2016ன் மத்தியில் சீனாவில் அறிமுகப்படுத்தியதன் தொடர்ச்சியாக,அடுத்ததை இவ்வருடமே வெளியிடவுள்ளது.

By Vivek Sivanandam

2017 ஆண்டு, ஃபிட்பிட் (Fitbit) மற்றும் ஆப்பிள் என இரு பெரும் நிறுவனங்களையும் கடந்து மிண்ணனு அணிகலன் சந்தையின் முடிசூடா மன்னனாக திகழ்கிறது சியோமி. தனது ப்ரீமியம் அணிகலன் பிராண்டின் கீழ் குறைந்த பட்ஜெட் ஃபிட்னஸ் டிரேக்கர்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது சியோமி. இதன் மி பேண்டு மற்றும் மி பேண்டு2 ஃபிட்னஸ் டிரேக்கர்கள் பட்ஜெட் வகையில் மிக பிரபலமாக இருக்கின்றன. லெனோவா மற்றும் ஹுவாய் நிறுவனங்கள் மிக குறைந்த விலையில் ஃபிட்னஸ் டிரேக்கர்களை தந்தாலும், சியோமி தான் முதலிடத்தில் இருக்கிறது.

 விரைவில் வெளிவரும் அட்டகாசமான சியோமி மி பேண்டு 3.!

சியோமியின் 2ம் தலைமுறை ஃபிட்னஸ் பேண்டை 2016ன் மத்தியில் சீனாவில் அறிமுகப்படுத்தியதன் தொடர்ச்சியாக,அடுத்ததை இவ்வருடமே
வெளியிடவுள்ளது. 2017 லேயே வெளியாகியிருக்க வேண்டிய மி பேண்டு3, சற்று தாமதமாக 2018ல் வெளியாகிறது.

ப்ளூடூத் சான்றிதழ் பெற்ற மி பேண்டு 3 க்கு மாடல் எண் XMSH05HM என்று போன்ரேடாரின் சீனா பதிப்பு கூறியுள்ளது. ஸ்மார்ட்போனுடன்
இணைக்கும் வகையில் ப்ளூடூத் 4.2 எல்.ஈ வசதியை கொண்டுள்ளது. மற்ற இரண்டு தலைமுறை கருவிகளை போல, பேண்டு3-ம் ஆண்ராய்டு மற்றும்
ஐபோன்களில் பயன்படுத்தும் வசதியை கொண்டிருக்கும் என நம்பப்படுகிறது.

நேரம், இதய துடிப்பின் அளவு, அறிவிப்புகள், நடந்த அடி கணக்கு, எரிந்த கலோரி போன்றவற்றை காட்ட ஓ.எல்.ஈ.டி திரையை கொண்டுள்ளது. இதயதுடிப்பு சென்சாரை கூடுதலாக கொண்ட இதன் விலை, முந்தயவற்றின் விலையை ஒத்து இருக்கும். மலிவு விலை ஃபிட்னஸ் டிரேக்கராக இருப்பதால், ஜிபிஎஸ் மற்றும் தொடர் இதயதுடிப்பு கண்காணிப்பு வசதிகள் மி பேண்டு3 ல் இருக்காது.

இதன் பேட்டரி 2முதல் 3 வாரங்கள் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மி பேண்ட் 3. இதல் உள்ள புதிய வசதிகளை பற்றி முழுமையாக தெரியாத நிலையில், சில மாதங்களில் மி பேண்டு3 வெளியானவுடன், மற்றவற்றிலிருந்து எப்படி இது வேறுபடுகிறது என பார்க்கலாம். அதுவரை மி பேண்டு3 க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ஆவலோடு காத்திருப்போம்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Band 3 with OLED display to be launched this year ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X