சியோமி மீ பேண்டு 3: பட்ஜெட்டில் அமைந்த சிறந்த பிட்னஸ் டிரெக்கர்.!
இதில் ஒரு வளைந்த OLED டிஸ்ப்ளே-யை கொண்டு, பிரிமியம் தோற்றத்தை பெற்றுள்ளது. 20 கிராம் எடையைக் கொண்டு, கையில் இருப்பதே தெரியவில்லை.
சியோமி மீ பேண்டு 3 இல் OLED டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே, தேறிய விழிப்பூட்டிகள் மற்றும் 50மீ நீர் தடுப்பு திறன் போன்றவற்றை பெற்று, ரூ.1,999 என்ற விலையில் கிடைக்கிறது.

இதில் ஒரு வளைந்த OLED டிஸ்ப்ளே-யை கொண்டு, பிரிமியம் தோற்றத்தை பெற்றுள்ளது. 20 கிராம் எடையைக் கொண்டு, கையில் இருப்பதே தெரியவில்லை. ரூ.1,999 என்ற விலை நிர்ணயத்தில் கிடைத்தால், இதில் பயன்படுத்தி உள்ள பொருட்கள் தரமாக உள்ளன. கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் மாற்றக் கூடிய ஸ்ட்ராப்களில் கிடைக்கிறது. இதை அணிந்து கொள்ள மிகவும் செளகரியமாக இருப்பதோடு, பரபரப்பாக இயங்கும் போது, நீச்சல், உடற்பயிற்சியின் போது என்று எல்லா சூழ்நிலைகளிலும் அணிய ஏற்றதாக உள்ளது. தண்ணீர் மற்றும் மாசு தடுப்பு திறன், 50 மீட்டர்கள் (5 ATM) வரை கொண்டுள்ளது. எனவே மழைச் சாறல் மற்றும் நீச்சல் குளத்தில் கூட கவலையின்றி அணியலாம்.

டிஸ்ப்ளே மற்றும் கட்டுப்பாடுகள்
புதிய வகை 0.78 இன்ச் மோனோகிராம் OLED டிஸ்ப்ளே கொண்டு முட்டை காப்சூல் வடிவில் அமைந்து, 2.5D வளைந்த உறுதியான கிளாஸை மேலே கொண்டு பாதுகாப்பை அளிக்கிறது. கீழ் பகுதியில் ஒரு தொடு நேவிகேஷன் பொத்தான் காணப்படுகிறது. இவ்வளவு விலை குறைவில் OLED டிஸ்ப்ளே அளித்துள்ளதை வரவேற்கலாம் என்றாலும் அது சிறப்பானது என்று கூற முடியாது. ஏனெனில் சூரிய ஒளியில் எதையும் காண முடிவதில்லை. அதேபோல ஸ்கிரீனை திறக்க அதற்கான சென்ஸார், ஒரு நொடியை எடுத்து கொள்கிறது.

பயன்கள்
இந்த ஸ்கிரீன் மூலம் நேரம், தேதி மற்றும் படிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை முக்கிய திரையிலேயே காணலாம். ஒரு தேய்ப்பில் ஏறிய படிகளின் எண்ணிக்கையும், மற்றொரு வலதுபுறம் நோக்கிய தேய்ப்பில் நீங்கள் நடந்த தூரம் மற்றும் அதில் எரிந்த கலோரிகளின் அளவு மற்றும் பேட்டரியின் சதவீதம் ஆகியவற்றை அறியலாம். மேலும் ஒரு பொத்தானை தொட்டு, உங்கள் இதய துடிப்பின் அளவை கண்காணிக்கலாம்.
மேலும் இந்த OLED திரையில் மூன்று நாட்களுக்கான காலநிலை அறிவிப்பு, இன்கம்மிங் கால் அறிவிப்பு, மெசேஜ்கள் மற்றும் மூன்றாம் தரப்பு அப்ளிகேஷன் தகவல்களான வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஜிமெயில், பேடிஎம், ஸ்லாக் ஆகியவற்றின் அறிவிப்புகளை அளிக்கிறது. இந்த பட்டியல் இன்னும் நீளுகிறது.
கீழ் நோக்கிய தேய்ப்பதன் மூலம் 'கூடுதல்' பிரிவை காணலாம். இங்கிருந்து இடதுபக்கம் தேய்த்தால், ஸ்டாப்வாட்ச், சைலண்டு மோடு, சாதனத்தை கண்டுபிடி போன்ற பிற அம்சங்களை அணுகலாம். ஹோம் ஸ்கிரீன் லேஅவுட்டையும் மாற்றலாம்.

செயல்பாட்டு இலக்குகளை அமைக்கலாம்
சியாமி மி பேண்டு 3 மூலம் செயல்பாட்டு இலக்குகளை அமைத்து கொள்ளலாம். இந்த அப்ளிகேஷன் மூலம் படி எண்ணிக்கை அளவுகள் அமைத்து, ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான ஒரு எடை இலக்கை நிர்ணயித்து கொள்ளலாம்.
தூக்கத்தை கண்காணிக்கலாம்
இதன்மூலம் தூக்க காலஅளவை கண்காணிக்கலாம். இதற்கான அப்ளிகேஷன் மூலம் ஆழ்ந்த தூக்கம், லேசான தூக்கம் ஆகியவற்றின் காலஅளவை அறியலாம்.
உடற்பயிற்சி சுயவிவரம்
உடற்பயிற்சி சுயவிவரம் குறித்து பார்க்கும் போது, மீ பேண்டு 3 அவ்வளவு சிறப்பான முடிவுகளை அளிக்க தவறுகிறது. உடற்பயிற்சி சுயவிவரத்தில் வெளி இடத்தில் ஓடுதல், டிரெட்மிலில் ஓடுதல், சைக்கிளிங் மற்றும் நடத்தல் ஆகிய 4 விதமான உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுக்கலாம். இதில் நீங்கள் செய்யும் உடற்பயிற்சியின் காலஅளவு மற்றும் அதில் எரிந்த கலோரியின் அளவு ஆகியவை மட்டுமே காட்டப்படுகிறது. உங்கள் அசைவுக்கு ஏற்ப, இதய துடிப்பின் அளவை மூன்று கோணங்களில் கண்காணிக்கிறது.

பேட்டரி பேக்அப்
இதய துடிப்பு கண்காணிப்பை தொடர்வதை முடக்கி வைத்தால், 2 வாரங்கள் வரை பேட்டரி திறன் நீடிக்கிறது. இதில் 110 mAh அடைக்கப்பட்ட பேட்டரியை பெற்று, ஒரு முறை சார்ஜ் செய்தால், 20 நாட்கள் வரை நீடிக்கிறது. உங்கள் பயன்பாட்டை பொறுத்து, இந்த முடிவுகள் மாறலாம். இந்த பேண்டை 0 சதவீதத்தில் இருந்து முழுவதுமாக சார்ஜ் செய்ய 2 மணிநேரம் சார்ஜிங் போட வேண்டியுள்ளது.

முடிவு
பல பயனுள்ள அம்சங்களை தாங்கி வரும் இந்த புதிய மீ பேண்டு, ரூ.1,999 என்ற விலைக்கு சியாமி நிறுவனம் அளிக்கிறது. உங்களின் நடக்கும் படிகளின் எண்ணிக்கை, தூங்கும் வகை, கலோரிகள் எரிந்த அளவு மற்றும் இதய துடிப்பு அளவு ஆகியவற்றை கண்காணிக்க நீங்கள் விரும்பினால், சியாமி மீ பேண்டு 3-யை விட சிறந்த ஒரு சாதனம் வேறு கிடைக்காது.


Click it and Unblock the Notifications