செப்டம்பர் 27: சியோமி மி பேண்ட் 3, ஸ்மார்ட் ஸ்பீக்கர், மி டிவி 4 அறிமுகம்.!

|

சியோமி நிறுவனம் வரும் செப்டம்பர் 27-ம் தேதி அன்று மிகவும் எதிர்பார்த்த சியோமி மி பேண்ட் 3, ஸ்மார்ட் ஸ்பீக்கர், மி டிவி 4 சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனங்கள் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி மி பேண்ட் 3, ஸ்மார்ட் ஸ்பீக்கர், மி டிவி 4 அறிமுகம்.!

இந்தியாவில் சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன் விற்பனையில் முதல் இடத்தில் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் ஒரு மாதத்திற்கு 4 அல்லது 5 ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக மலிவு விலையிலும் பின்பு சிறந்த தரம் கொண்ட ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது சியோமி நிறுவனம். மேலும் செப்டம்பர் 27-ம் தேதி அறிமுகம் செய்யும் சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சியோமி மி டிவி 4:

சியோமி மி டிவி 4:

இந்தியாவில் சியோமி மி டிவி மாடல்களுக்கு அதிக வரவேற்ப்பு கிடைத்துள்ளது என்று தான் கூறவேண்டும், பின்பு வரும் செப்டம்பர் 27-ம் தேதி அறிமுகம் செய்யும் மி டிவி 4 மாடல் பொறுத்தவரை 75-இன்ச் 4கே எச்டிஆர் அல்ட்ரா எச்டி டிஸ்பிளே
வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மி டிவி 4 முக்கிய அம்சங்கள்:

மி டிவி 4 முக்கிய அம்சங்கள்:

75-இன்ச் கொண்ட மி டிவி 4 மாடல் பொறுத்தவரை 64-பிட் ஏ53 குவாட்-கோர் செயலியைக் கொண்டுள்ளது, பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இதனுள் இடம்பெற்றுள்ளது. பின்பு டால்பி டிஜிட்டல் மற்றும் DTS சரவுண்ட் ஒலி மற்றும் வைஃபை மற்றும் ப்ளூடூத் வசிகளுடன் இந்த சாதனம் வெளிவரும்.

சியோமி மி பேன்ட் 3:

சியோமி மி பேன்ட் 3:

சியோமி மி பேன்ட் 3 சாதனம் 0.78 இன்ச் ழுடுநுனு 128x80 பிக்சல் டிஸ்ப்ளே அம்சத்துடன் வெளிவரும், குறிப்பாக கீறல் விழாத கிளாஸ், ஆன்டி-ஃபிங்கர்ப்ரின்ட் கோட்டிங், போட்டோப்லெதிஸ்மோகிராஃபி, இதய துடிப்பு சென்சார் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது இந்த மி பேன்ட் 3 சாதனம். மேலும் உறக்கத்தை டிராக் செய்து, உடற்திறனை மானிட்டர் செய்யும் வசதியும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு வாட்டர் ரெசிஸ்டன்ட், ப்ளூடூத் போன்ற பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. கருப்பு, நீலம், சிவப்பு, போன்ற நிறங்களில் கூட இந்த சாதனம் கிடைக்கும்.

 ஸ்மார்ட் ஸ்பீக்கர்:

ஸ்மார்ட் ஸ்பீக்கர்:

சியோமி அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அதிநவீன தொழில்நுட்ப அமசத்துடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,
பின்பு இதனுடன் சியோமி மி மேக்ஸ் 3 மாடல் அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi Mi Band 3, Mi TV 4, smart speaker and more to launch on September 27: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X