Home
Gadgets

ஜிஎஸ்டி எதிரொலி: சியோமி சாதனங்களுக்கு அதிரடி விலைக்குறைப்பு.!

இந்தியாவில் அதன் மூன்றாவது உற்பத்தி ஆலையை அறிவித்த இரண்டு நாட்களுக்குள் இந்த விலைகுறைப்பு தகவல் வெளியாகியுள்ளது.

By Muthuraj

இந்த மாத ஆரம்பத்தில், ஜிஎஸ்டி (சரக்குகள் மற்றும் சேவைகள்) வரியானது தேர்ந்தெடுக்கப்பட்ட வரம்புகளின் தயாரிப்புகளுக்கு திருத்தப்பட்டது. அதன் அடிப்படையில், இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் சாதன பாகங்களின் விலை தற்போது குறைந்துள்ளது.

குறிப்பாக, சியோமி மி பவர் பேங்க், மி சார்ஜர், 2-இன் 1 யூஎஸ்பி ஃபேன், மி பிஸ்னஸ் பேக்பாக் மற்றும் பல ஸ்மார்ட்போன் கேஸ்களின் விலை குறைப்பு சியோமி பொருட்களின் மீது நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் அதன் மூன்றாவது உற்பத்தி ஆலையை அறிவித்த இரண்டு நாட்களுக்குள் இந்த விலைகுறைப்பு தகவல் வெளியாகியுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி மி பவர் பேங்க்

சியோமி மி பவர் பேங்க்

சரி, என்னென்ன சாதனங்களுக்கு என்னென்ன விலைக்குறைப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதென்பதை விரிவாக காண்போம். விலைக்குறைப்புக்குப் பிறகு, சியோமி மி பவர் பேங்க் ரூ.100/- குறைக்கப்பட்டு தற்போது ரூ.1,199/-க்கு கிடைக்கிறது.

20000எம்ஏஎச் மி பவர் பேங்க் 2

20000எம்ஏஎச் மி பவர் பேங்க் 2

மறுகையில் சியோமியின் 10000எம்ஏஎச் மி பவர் பேங்க் ப்ரோ ஆனதிற்கும் ரூ.100/- விலை குறைக்கப்பட்டு தற்போது ரூ.1,599/-க்கு கிடைக்கும். ரூ..2,199/-க்கு அறிமுகம் செய்யபட்ட சியோமி நிறுவனத்தின் 20000எம்ஏஎச் மி பவர் பேங்க் 2 ஆனது இப்போது ரூ.1,999/-க்கு வாங்க கிடைக்கிறது.

மி சார்ஜர்

மி சார்ஜர்

ரூ.1,499/-க்கு அறிமுகமான மி பிஸ்னஸ் பேக்பாக் ஆனது தற்போது ரூ.1,499/-க்கு கிடைக்கிறது. மேலும் 5வி / 2ஏ வெளியீட்டைக் கொண்ட மி சார்ஜர் ஆனது ரூ.399/-க்கு பதிலாக ரூ.349/-க்கு விற்கப்படுகிறது. ரூ.799/-க்கு அறிமுகமான மி கார் சார்ஜர் தற்போது ரூ.699/-க்கு கிடைக்கிறது.

யூஎஸ்பி கேபிள்

யூஎஸ்பி கேபிள்

மேலும் நிறுவனத்திலிருந்து கிடைக்கும் யூஎஸ்பி கேபிள் ரூ.199/-க்கு பதிலாக இப்பொழுது ரூ.179/-க்கு கிடைக்கிறது மற்றும் யூஎஸ்பி ஃபேன் ஆனது ரூ.299/-க்கு பதிலாக ரூ.229/-க்கு கிடைக்கிறது. பாகங்கள் தவிர, சியோமி அதன் ஸ்மார்ட்போன்களின் பரவலான கேஸ்கள் மற்றும் ஸ்க்ரீன் கார்ட்களின் விலையையும் குறைத்துள்ளது.

கேஸ்

கேஸ்

ரெட்மி நோட் 4 மற்றும் மிக் மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன்களின் ஸ்மார்ட் வியூ கேஸ் மாடல்களுக்கு கணிசமான விலைக்குறைப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த அனைத்து சியோமி பாகங்கள், ஸ்க்ரீன் கார்ட் மற்றும் கேஸ்களும், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான மி.காம்-ல் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.

இரண்டு பவர் பேங்க் அறிமுகம்

இரண்டு பவர் பேங்க் அறிமுகம்

சமீபத்தில், சியோமி இந்தியாவில் அதன் இரண்டு பவர் பேங்குகளை அறிமுகம் செய்ததும் குறிப்பிடத்தக்கது. 20000எம்ஏஎச் மி பவர்பேங்க் 2ஐ மற்றும் 10000எம்ஏஎச் மி பவர்பேங்க் 2ஐ என்ற எந்த இரண்டு பவர் பேங்குகளும்,நிறுவனத்தின் நொய்டா ஆலையில் மேட் இந்தியா திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

10000எம்ஏஎச்; 20000எம்ஏஎச்

10000எம்ஏஎச்; 20000எம்ஏஎச்

10000எம்ஏஎச் மி பவர்பேங்க் 2ஐ ஆனது ரூ.799/- என்றும், 20000எம்ஏஎச் மி பவர்பேங்க் 2ஐ ஆனது ரூ.1,499/- என்ற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளன. டிசம்பர் முதல் நாட்டின் அமேசான், ஃப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும் மற்றும் நவம்பர் 23-ஆம் தேதி தொடங்கி இந்த சாதனம் மி.காம் வலைத்தளத்தில் வாங்க கிடைக்கும்.

நிமிடத்திற்கு 7 பவர் பேங்குகள்

நிமிடத்திற்கு 7 பவர் பேங்குகள்

இந்த பவர் பேங்குகளின் உற்பத்திப் பணிகளின் 9 நிலைகள் மற்றும் ஆய்வு 3 நிலைகள் வழியாக செல்கிறது என்று நிறுவனம் கூறுகிறது. மேலும் தயாரிப்பாளரின்படி, ஒரு நிமிடத்திற்கு 7 பவர் பேங்குகள் தயாரிக்கப்படுகின்றது. 10000எம்ஏஎச் மி பவர்பேங்க் 2ஐ ஆனது இரட்டை யூஎஸ்பி அவுட்புட் மற்றும் இரண்டு வழியிலான பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்டுள்ளது. இதன் பொருள், ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும். மேலும் இந்த சாதனம் அல்ட்ரா மெல்லிய, இலகுரக வடிவமைப்பை கொண்டுள்ளது ஆகையால் இதை சுலபமாக எங்கும் கொண்டு செல்ல முடியும்.

90% க்கும் அதிகமான மாற்று விகிதம்

90% க்கும் அதிகமான மாற்று விகிதம்

இந்த 10000எம்ஏஎச் மி பவர்பேங்க் 2ஐ ஆனது 6500எம்ஏஎச் என்கிற உண்மையான வெளியீட்டு திறனை கொண்டுள்ளது மற்றும் 90% க்கும் அதிகமான மாற்று விகிதத்தையும் வழங்குகிறது. இதனை மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்ளெட்களை இணைக்கவும் மற்றும் சார்ஜ் செய்யவும் முடியும்

பாஸ்ட் சார்ஜ் 3.0

பாஸ்ட் சார்ஜ் 3.0

மறுகையில் உள்ள 20000எம்ஏஎச் மி பவர்பேங்க் 2ஐ ஆனதும் இரட்டை யூஎஸ்பி வெளியீட்டை ஆதரிக்கிறது மேலும் இதுவும் ஸ்மார்ட்போன்கள், டாப்ளெகள் மற்றும் மடிக்கணினிகளை சார்ஜ் செய்யும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒற்றை போர்ட் ஆனது பாஸ்ட் சார்ஜ் 3.0-ஐ ஆதரிக்கிறது என்று நிறுவனம் கூறுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi accessories receive a price cut in India. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X