Home
Gadgets

யாரு விடுவா? 8ஜிபி ஸ்டோரேஜ்.. 24W ஸ்பீக்கர்கள்.. கம்மி விலையில் சியோமி டிவி.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை (Amazon Great Indian Festival Sale) ஆனது கடைசி கட்டத்தில் உள்ளது. அதாவது இந்த சிறப்பு விற்பனை இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது சியோமியின் எம்ஐ 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவிக்கு அமேசான் தளத்தில் 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி முன்பு ரூ.35,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் ரூ.21,499 விலையில் வாங்க முடியும்.

24W ஸ்பீக்கர்கள்.. கம்மி விலையில் சியோமி டிவி.. எந்த மாடல்?

இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ விருப்பத்தில் இந்த டிவியை வாங்க நினைக்கும் பயனர்களுக்கு ரூ.1500 வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும் இந்த சியோமி ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

சியோமி எம்ஐ 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த சியோமி ஸ்மார்ட் டிவி ஆனது ஃபுல் எச்டி டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர் (Quad core Cortex A55) உடன் இந்த அசத்தலான எம்ஐ 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனேவ இந்த ஸ்மார்ட்டிவி மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

சாப்ட்வேரை பொறுத்தவரை, இது Android 11 TV OS அடிப்படையிலான Xiaomi நிறுவனத்தின் சொந்த PatchWall UI உடன் வருகிறது, இது IMDb இன்டக்ரேஷன், யுனிவர்சல் சேர்ச், 300+ லைவ் சேனல்கள், 'பேரண்ட் லாக்' உடனான கிட்ஸ் மோட் மற்றும் 'யூசர் சென்டர்' போன்ற அம்சங்களைக் கொண்டு வருகிறது.

1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது சியோமி எம்ஐ எம்ஐ 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு செயலிகளை இந்த சியோமி ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சியோமி எம்ஐ 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த சியோமி ஸ்மார்ட் டிவியில் விவிட் பிக்சர் என்ஜின் ஆதரவு உள்ளது. அதேபோல் பிரீமியம் மெட்டல் பெசல்-லெஸ் டிசைன் உடன் இந்த அட்டகாசமான எம்ஐ 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

24W ஸ்பீக்கர்கள்.. கம்மி விலையில் சியோமி டிவி.. எந்த மாடல்?

டால்பி ஆடியோ ( Dolby Audio), டிடிஎஸ்:எக்ஸ் (DTS:X) மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல்: எக்ஸ் (DTS Virtual: X) ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது எம்ஐ 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி. எனவே இந்த சியோமி ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி.

டூயல் பேண்ட் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், புளூடூத் 5.௦, ஈதர்நெட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த எம்ஐ 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த சியோமி 43-இன்ச் ஸ்மார்ட் டிவி தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 43 inch 5A Series Full HD Smart TV is available at 40 percent off on Amazon: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X