இந்தியாவில் சியோமி நிறுவனம் அறிமுகம் செய்யும் அசெம்பிள் டிவி.!

கடந்த பிப்ரவரி மாதம் சியோமி நிறுவனம் பிளிப்கார்டு மூலம் அறிமுகம் செய்த ஸ்மார்ட் எல்.இ.டி தொலைக்காட்சியான 55 இன்ச் மி டிவி4 விலை ரூ.39999 என்பது அறிந்ததே.

By GizBot Bureau
|

இந்தியாவில் ஸ்மர்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக் மார்க்கெட்டில் அசைக்க முடியாத இடத்தை பெற்றுள்ள சீன நிறுவனத்தின் சியோமி தற்போது அடுத்தாகாட்டமாக அசெம்பிள் தொலைக்காட்சிகளை இந்தியாவில் அடுத்த காலாண்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் சியோமி நிறுவனம் அறிமுகம் செய்யும் அசெம்பிள் டிவி.!

இதற்காக ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடான் வரும் ஜூலை மாதம் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சியோமி நிறுவனம் எப்போதுமே குறைந்த லாபத்தில் அதிக விற்பனை செய்யும் கொள்கையுடையது என்பதால் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் தொலைக்காட்சிகளும் குறைந்த விலையில் இருக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் தொலைக்காட்சி தயாரித்து அதனை மிகப்பெரிய அளவில் ஆன்லைனில் விற்பனை செய்யும் திட்டமிருந்தாலும் அதற்கு முன்னர் அதிக அளவில் ஷோரூம்களையும் திறக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த தொலைக்காட்சிகளை இந்தியாவிலேயே தயார் செய்வதன் மூலம் வரிகள் சலுகை பெறுவது மட்டுமின்றி எவ்வளவு தேவையிருந்தாலும், அந்த தேவையை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.

சியோமி நிறுவனத்தின் இந்திய செய்தி தொடர்பாளர் இதுகுறித்து கூறியபோது, 'இந்தியாவில் சியாமி நிறுவனத்தின் தொலைக்காட்சி தயாரிப்பு தொழிற்சாலை விரைவில் தொடங்கப்பாடும் என்று கூறினார்.

கடந்த பிப்ரவரி மாதம் சியாமி நிறுவனம் பிளிப்கார்டு மூலம் அறிமுகம் செய்த ஸ்மார்ட் எல்.இ.டி தொலைக்காட்சியான 55 இன்ச் மி டிவி4 விலை ரூ.39999 என்பது அறிந்ததே.

சியோமியின் இந்த 55 இன்ச் ஸ்மார்ட் தொலைக்காட்சி ஆண்ட்ராய்டு தன்மை உடையது என்பதும் டூயல் ஸ்பீக்கருடன் டால்பி மற்றும் டிடிஎஸ் செட்டப் ஆடியோ உள்ளது என்பதும், இந்த தொலைக்காட்சியில் ஒரு திரைப்படம் பார்த்தால் திரையரங்கில் பார்ப்பதை விட அனுபவம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் சியோமி நிறுவனம் அறிமுகம் செய்யும் அசெம்பிள் டிவி.!

இந்த ஸ்மார்ட் தொலைக்காட்சியில் மூன்று ஹெச்.டி.எம்.ஐ போர்ட்டுக்கள் உண்டு. மேலும் இரண்டு யு.எஸ்.பி போர்ட்டுக்கள் மற்றும் டூயல் பேண்டி வைபை, புளூடூத் 4.0 மற்றும் வயர்லெஸ் ஹெட்போன்கள் ஆகிய சிறப்பு அம்சங்கள் உண்டு.

மேலும் சியோமி நிறுவனம் ஹங்மா, வூட், ஏ.எல்.டி பாலாஜி, ஜீ5 மற்றும் சோனி லைவ் ஆகியவற்றுடன் பார்ட்னராக இருப்பதால் 5 லட்சம் மணி நேரம் பார்க்கும் வகையிலான ஒரு வீடியோ நூலகமே இதில் அடங்கியுள்ளது. இவற்றில் சுமார் 80% வீடியோக்கள் இலவசமாக பார்க்கும் வகையில் உள்ளது கூடுதல் சிறப்பு. மேலும் இந்த தொலைக்காட்சியில் 12 இந்திய மொழிகள் உள்பட மொத்தம் 13 மொழிகளில் சப்போர்ட் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Xiaomi may assemble TV sets in India from next quarter: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X