Home
Gadgets

இது ஆண்களின் சமாச்சாரம்.. சியோமி அறிமுகம் புது டிவைஸ்.. விலை என்ன? விற்பனை எப்போது?

சீன ஸ்மார்ட்போன் பிராண்டான சியோமி (Xiaomi) இந்தியாவில் ஒரு புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்த உள்ளது. புதிய சாதனம் என்றதும், நீங்கள் உடனே ஏதோ புது ஸ்மார்ட்போன் வருகிறது என்று நினைத்துவிடாதீர்கள். சமாச்சாரமே வேற.. இது ஆண்களுக்கான ஒரு அத்தியாவசிய சாதனமாகும்.

சியோமி நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் சாதனம் ஒரு ஸ்மார்ட் போன் அல்ல, லேப்டாப் கருவியும் கூட அல்ல, உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு சியோமி அறிமுகம் செய்யும் அந்த புதிய டிவைஸ் ஒரு டிரிம்மர் சாதனமாகும். இதை சியோமி நிறுவனம் சியோமி யுனிபிலேடு டிரிம்மர் (Xiaomi UniBlade Trimmer) என்று அழைக்கிறது. இந்த புதிய டிரம்மர் சாதனத்தை நிறுவனம் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்று நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இது ஆண்களின் சமாச்சாரம்.. சியோமி அறிமுகம் புது டிவைஸ்.. விலை என்ன?

வரவிருக்கும் சியோமி யுனிபிலேடு டிரிம்மர் (Xiaomi UniBlade Trimmer) இன் வெளியீட்டு விவரங்கள் மற்றும் அம்சங்களின் தகவல் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதை பற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.
சியோமி யுனிபிலேடு டிரிம்மர் சாதனத்தின் இந்திய வெளியீட்டு தேதி விபரங்களை சியோமி நிறுவனம் உறுதி செய்துள்ளது. சியோமி நிறுவனத்தின் தகவல் படி, இந்தியாவில் செப்டம்பர் 4 ஆம் தேதி இந்த சாதனம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதன் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் வெளியீட்டு விழாவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி யுனிபிலேடு டிரிம்மர் டிவைஸ் உடன் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் பற்றி பேசுகையில்,
வரவிருக்கும் டிரிம்மர் சீர்ப்படுத்தும் வழக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய அம்சங்களின் வரிசையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறுகிறது.

அம்சங்களைப் பொறுத்த வரையில், Xiaomi UniBlade Trimmer ஆனது மேட் ஃபினிஷ் கொண்ட புதிய வடிவமைப்புடன் வரும். சமீபத்திய அறிக்கைகளின் படி, புதிய சியோமி யுனிபிலெடு டிரிம்மர் தோராயமாக 235 கிராம் எடையைக் கொண்டுள்ளது. இது 360 டிகிரி ஓம்னிடிரெக்ஷனல் ஃப்ளோட்டிங் ஷேவர் ஹெட்களைக் கொண்டுள்ளது.

டிரிம்மர் ஒரு தனித்துவமான ஒருங்கிணைந்த ஐந்து-பிளேடு தலை வடிவமைப்பைக் கொண்டிருக்கும் மற்றும் ஒரு நிமிடத்திற்கு 15,000 முறை குறிப்பிடத்தக்க அதிர்வெண்ணில் அதிர்வுறும் மேம்பட்ட நேரியல் காந்த லெவிடேஷன் மோட்டாரைக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது 30 டிகிரி ரோட்டரி டயல் டிரிம்மர் தலையை இணைக்கும் அம்சத்துடன் வருகிறது.

Xiaomi UniBlade Trimmer ஆனது 2,000mAh பேட்டரியைக் கொண்டு பேக் செய்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது யூஎஸ்பி டைப் சி (USB Type-C) சார்ஜிங் இடைமுகத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Xiaomi UniBlade Trimmer ஆனது ஒருமுறை சார்ஜ் செய்தால் 90 நிமிடங்களுக்கு மேல் செயல்படும் திறனுடன் வெளியிடப்படும் என்று சியோமி நிறுவனம் கூறியுள்ளது.

இது ஆண்களின் சமாச்சாரம்.. சியோமி அறிமுகம் புது டிவைஸ்.. விலை என்ன?

இதற்கிடையில், ஏப்ரலில், சியோமி நிறுவனம் (Xiaomi India) இந்தியாவில் டிரிம்மர் 2சி (Trimmer 2C) என்ற மாடலை அறிமுகம் செய்தது. இதன் அறிமுக விலை ரூ.1,199 ஆக இருந்தது. இத்துடன் நிறுவனம் ஸ்மார்ட் ஏர் பியூரிபையர் 4 (Smart Air Purifier 4) மற்றும் ரோபோட் வேக்யும் மாப் 2i (Robot Vacuum-mop 2i) உள்ளிட்ட பிற தயாரிப்புகளையும் அறிமுகம் செய்திருந்தது. அடுத்து வரவிருக்கும் டிரிம்மர் சாதனம் ரூ. 2000 விலை புள்ளியில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Xiaomi Beard Trimmer 2C ஆனது நேர்த்தியான மற்றும் சமகால வடிவமைப்பைக் காட்டுகிறது, இது வசதியான சார்ஜிங்கிற்காக வகை C போர்ட்டைக் கொண்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 90 நிமிடங்கள் வரை செயல்படும் திறன் கொண்டது. இந்த சாதனத்தின் கூடுதல் அம்சங்கள் இன்னும் சில நாளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு சாதனமாக டிரிம்மர் இருப்பதனால், இதன் விற்பனை இந்தியாவில் சூடுபிடிக்கும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi launching new Xiaomi UniBlade Trimmer device in India on September 4th check details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X