Home
Gadgets

Xiaomi களமிறங்கிடுச்சே.! இந்தியாவில் 3 புதிய சாதனங்கள் அறிமுகம்.. விற்பனை அமோகமா இருக்க போகுது.. என்ன வருது?

சியோமி (Xiaomi) நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக மூன்று அட்டகாசமான சாதனங்களை (3 New Products From Xiaomi To Indian Market) அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மூன்று புதிய தயாரிப்பு சாதனங்களில் இரண்டு ரெட்மி டேப்லெட் (Redmi Tablet) சாதனங்களும் ஒரு சியோமி ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் (Xiaomi Special Edition Smartphone) சாதனமும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சியோமி நிறுவனம் என்ன புதிய சாதனங்களை அறிமுகம் செய்கிறது என்ற முழு விபரம் இதோ.

பிரபல சீன தொழில்நுட்ப நிறுவனமான சியோமி, இந்திய சந்தையில் மூன்று புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த வரவிருக்கும் சாதனங்களில் ரெட்மி பேட் ப்ரோ 5ஜி (Redmi Pad Pro 5G), ரெட்மி பேட் எஸ்இ 4ஜி (Redmi Pad SE 4G) மற்றும் சியோமி 14 சிவி லிமிடெட் எடிஷன் பாண்டா டிசைன் (Xiaomi 14 Civi Limited Edition Panda Design) போன்றவை அடங்கும்.

Xiaomi களமிறங்கிடுச்சே.! இந்தியாவில் 3 புதிய சாதனங்கள் அறிமுகம்..

சியோமி அறிமுகம் செய்யும் மூன்று புதிய சாதனங்கள் (Xiaomi Launching New 3 Products In India) :

இந்த புதிய ரெட்மி பேட் ப்ரோ 5ஜி டேப்லெட் சாதனம் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமான ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2) சந்தானத்துடன் நேரடியாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஒன்பிளஸ் பேட் 2 சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் உடன் வெளிவருகிறது.

ஆனால், Redmi Pad Pro 5G ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 2 சிப்செட் (Qualcomm Snapdragon 7 Gen 2) கொண்டுள்ளது. செயலாக்க சக்தியில் இந்த வேறுபாடு இருந்தபோதிலும், ரெட்மி பேட் ப்ரோ 5ஜி (Redmi Pad Pro 5G) இன்னும் பல அம்சங்களை கொண்டுள்ளது. Redmi Pad Pro 5G சாதனம் 10000mAh பேட்டரி உடன் வருகிறது.

இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் எதிர்ப்பிற்கான IP53 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. இது கூடுதலாக டேப்லெட்டை லேப்டாப் போல இயக்க அனுமதிக்கும் கீபோர்ட் லேஅவுட் கருவியையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தபடியாக, ரெட்மி பேட் எஸ்ஏ 4ஜி (Redmi Pad SE 4G) பற்றி பேசுகையில், இது ஆனது 8.7" இன்ச் அளவு கொண்ட LCD டிஸ்பிளேவை 90Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் கொண்டுள்ளது.

ரெட்மி பேட் ப்ரோ 5ஜி (Redmi Pad Pro 5G) மற்றும் ரெட்மி பேட் எஸ்ஏ 4ஜி (Redmi Pad SE 4G):

இது மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் (MediaTek Helio G85 Chipset) உடன் வருகிறது. இது 4ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்டுள்ளது. இது 128ஜிபி வரை ஸ்டோரேஜ்ஜை கொண்டுள்ளது. இது எஸ்டி கார்டு வழியாக அதிகபட்சம் 2TB வரையிலான மெமரி கார்டு ஸ்டோரேஜ்ஜை வழங்குகிறது. இந்த டேப்லெட்டில் டூயல் சிம் ஸ்லாட் உள்ளது. இது 6650எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது டூயல் 4ஜி இணைப்பை ஆதரிக்கிறது.

இந்த டேப்லெட்டுகளுக்கு கூடுதலாக, சியோமி 14 சிவி லிமிடெட் எடிஷன் பாண்டா டிசைனையும் சியோமி அறிமுகப்படுத்துகிறது. இந்த சாதனம் லைகா சம்மிலக்ஸ் லென்ஸ் மற்றும் சைவ தோல் டீட்டைல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இந்த தனித்துவமான பதிப்பைப் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Launching 3 New Products In Indian Market Namely Xiaomi 14 Civi Panda Redmi Pad Pro 5G Redmi Pad SE 4G
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X