ஈலைட் வாய்ஸ் அசிஸ்டெண்ட் ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்கிறது சியோமி

|

சியோமியின் துணை நிறுவனமான ஈலைட் என்ற ஸ்மார்ட் வீட்டுச் சாதனங்களின் தயாரிப்பு நிறுவனம், வாய்ஸ் அசிஸ்டெண்ட் அடிப்படையில் அமைந்த ஒரு ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. ஈலைட் வாய்ஸ் அசிஸ்டெண்ட் என்று பெயரிடப்பட்டுள்ள இது, இந்நிறுவன தயாரிப்புகளில் இந்த வரிசையில் இடம்பெறும் முதல் தயாரிப்பாகும்.

ஈலைட் வாய்ஸ் அசிஸ்டெண்ட் ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்கிறது சியோமி

ஈலைட் வாய்ஸ் அசிஸ்டெண்ட்டைப் பார்த்த உடனேயே, அதன் வடிவமைப்பானது அமேசானின் எக்கோ டாட் ஸ்பீக்கர் உடன் ஒத்திருப்பது தான் நமக்கு முதலில் நினைவிற்கு வருகிறது. எக்கோ டாட் போல, ஈலைட் ஸ்மார்ட் ஸ்பீக்கரின் மேற்பகுதியிலும், ஒரு ஆக்ஷன் பொத்தான், மைக்ரோபோன் ஆன் / ஆஃப் பொத்தான், ஒலி அதிகரிக்கும் பொத்தான் மற்றும் ஒலி குறைக்கும் பொத்தான் என்று மொத்தம் நான்கு பொத்தான்கள் காணப்படுகின்றன.

இது தவிர ஈலைட் ஸ்பீக்கரின் நடுவே காணப்படும் மற்றொரு பொத்தான் மூலம், ஸ்பீக்கரை ஒலியடக்கு (மியூட்) செய்ய முடியும்.

இந்த அம்சம், எக்கோ டாட்டில் இல்லை என்றாலும், அமேசான் எக்கோவின் பெரிய பதிப்பில் காணப்படுகிறது. இந்த ஈலைட் ஸ்மார்ட் ஸ்பீக்கர், மைக்ரோசாஃப்ட்டின் கார்டானா வாய்ஸ் அசிஸ்டெண்ட் மூலம் இயக்கப்படுவதாக நம்பப்படுகிறது. மேலும் இதற்கு 6 மைக்ரோபோன்களும் ஒரு 2 வாட் ஸ்பீக்கரும் கொண்டுள்ளது.

இந்தச் சாதனத்தில் காணப்படும் ஒரு மேம்பட்ட விழிப்புணர்வு வழிமுறையின் மூலம் 5 மீட்டர்கள் தொலைவிற்குள் இருந்தவாறு, சாதனத்தை ஆன் செய்ய முடியும். மேலும் இதில் ஒலியியல் சார்ந்த எக்கோ ரத்தாக்கி (ஏஇசி) மற்றும் பீம்ஃபார்மிங் தொழில்நுட்பம் மூலம் எக்கோ ஒலி குறைக்கப்படுகிறது.

வாட்ஸ்ஆப் உடன் வேற லெவல் மொபைலாக நோக்கியா 3310 4ஜி மாடல்.!வாட்ஸ்ஆப் உடன் வேற லெவல் மொபைலாக நோக்கியா 3310 4ஜி மாடல்.!

இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர், 1.2ஜிஹெச்இசட் கொண்ட ஒரு 64-பிட் கார்டெக்ஸ் ஏ53 க்வாட் கோர் செயலியில் இயக்கப்பட்டு, அதனுடன் 256எம்பி ராம் மற்றும் 256எம்பி சேமிப்பு கொள்ளவையும் கொண்டுள்ளது. இணைப்பைப் பொறுத்த வரை, இந்தச் சாதனத்தில் 2.4ஜிஹெச்இசட் மற்றும் 5ஜிஹெச்இசட் என்ற இரட்டை பேண்டு வைஃபை மற்றும் ப்ளூடூத் லோ எனர்ஜி (என்ஜி) ஆகியவற்றை பெற்றுள்ளது.

இரட்டை ஏஐ சிஸ்டங்களைக் கொண்ட இந்த ஈலைட் வாய்ஸ் அசிஸ்டெண்ட், சியோமியின் ஸ்மார்ட் எல்இடி பல்புஸ், டேபிள் லைம்ஸ், பேட்சைடு லைட்ஸ், சீலிங் லைட்ஸ் போன்ற மற்ற ஸ்மார்ட் வீட்டுத் தயாரிப்புகளைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாகும்.

இந்நிறுவனத்தின் பரபரப்பான இணையதளத்தில் இந்த ஸ்பீக்கரை 199 யென் (ஏறக்குறைய ரூ.1,950) என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தயாரிப்புகளின் சர்வதேச விலை மற்றும் கிடைக்கும் நிலை குறித்து இப்போதைக்கு எந்தத் தகவலும் இல்லை. எனவே இந்தத் தயாரிப்பைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்பதை கீழே உள்ள கமெண்ட்ஸில் எழுதுங்கள்.

Best Mobiles in India

Read more about:
English summary
In terms of design, Yeelight Voice Assistant looks pretty similar to Amazon's Echo Dot speaker.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X