இந்தியா: கூகுள் குரல் தேடல் வசதியுடன் சியோமி மி டிவி ப்ரோ மாடல்கள் அறிமுகம்.!
இந்த டிவி மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பரைம், சியோமி, ஜியோ சார்பில் பல சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
இந்திய சந்தையில் சியோமி மி டிவி 4 ப்ரோ, மி டிவி 4ஏ ப்ரோ, மி டிவி 4சி ப்ரோ போன்ற மாடல்களை அறிமுகம் செயத்துள்ளது சியோமி நிறுவனம். குறிப்பாக இந்த மூன்று ஸ்மார்ட் டிவி மாடல்கள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வரும் அக்டோபர் முதல் இந்த மூன்று ஸ்மார்ட் டிவி மாடல்கள் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு பிளிப்கார்ட் மற்றும் மி.காம் வலைதளங்களில் மட்டுமே இந்த ஸ்மார்ட் டிவிகள் கிடைக்கும் என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்ச்வால் யுஐ
சியோமி மி டிவி 4 ப்ரோ, மி டிவி 4ஏ ப்ரோ, மி டிவி 4சி ப்ரோ மாடல்கள், புதிய பேட்ச்வால் யுஐ தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் க்ரோம்காஸ்ட் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் 3300 செயலிகளை இந்த புதிய சியோமி டிவி மாடல்களில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் சியோமி டிவி மாடல்கள்.

கூகுள் குரல் தேடல்
புதிய சியோமி டிவி மாடல்களில் க்ரோம் காஸ்ட் ஆதரவு உள்ளதால் கூகுள் குரல் தேடல் வசதியைப் பயன்படுத்த முடியும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 11-பொத்தானை கொண்ட ரிமோட் உடன் இந்த சியோமி டிவி மாடல்கள் வெளிவந்துள்ளது.

சியோமி மி எல்இடி டிவி 4 ப்ரோ(55)
இந்த டிவி மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பரைம், சியோமி, ஜியோ சார்பில் பல சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. மேலும் சியோமி மி எல்இடி டிவி 4 ப்ரோ மாடல் பொறுத்தவரை 55-இன்ச் 4கே எச்டிஆர் frameless டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. அதன்பின்பு 3எச்டிஎம் போர்ட், 2யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 7 வது ஜென் 64-பிட் குவாட்-கோர் செயலி மற்றும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம்.'

சியோமி மி எல்இடி டிவி 4ஏ ப்ரோ:
அடுத்து சியோமி மி எல்இடி டிவி 4ஏ ப்ரோ மாடல் பொறுத்தவரை 49-இன்ச் முழு எச்டி பிளஸ் எச்டிஆர் டிஸ்பிளே மற்றும் 20வாட் ஸ்பீக்கர் அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. பின்பு அதேபோல் மி எல்இடி டிவி 4சி ப்ரோ 32-இன்ச் மாடல் எச்டி ரெடி டிஸ்பிளே
வடிவமைப்பு மற்றும் 20வாட் ஸ்பீக்கர் அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை:
சியோமி மி எல்இடி டிவி 4 ப்ரோ(55) மாடலின் விலை ரூ.49,999-ஆக உள்ளது.
சியோமி மி எல்இடி டிவி 4ஏ ப்ரோ(49) மாடலின் விலை ரூ.29,999-ஆக உள்ளது.
சியோமி மி எல்இடி டிவி 4சி ப்ரோ(32) மாடலின் விலை ரூ.14,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications