பிளாக் ஷார்க் 10000எம்ஏஎச் பவர் பேங்க் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

|

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான பிளாக் ஷார்க் நிறுவனம் இந்த மாதம் துவகத்தில் கேம்பேட் 2.0 மற்றும் ஹோல்ட்ர் மற்றும் கேம்பேட் Rookie Kit பாகங்களை அறிமுகம் செய்தது, குறிப்பாக இந்த சாதனங்களுக்கு நல்ல வரவேற்ப்பு இருந்தது.

பிளாக் ஷார்க் 10000எம்ஏஎச் பவர் பேங்க் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா

அதனை தொடர்ந்து இப்போது சீனாவில் அதன் புதிய 10000எம்ஏஎச் திறன் கொண்ட பவர் பேங்க் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த சாதனம் இரண்டு யுஎஸ்பி ஏ மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த பவர் பேங்க் சாதனம் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்குகிறது. பின்பு இதன் யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆனது தழைனீம் திறனுக்கு இணக்கமானது என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாக் ஷார்க் 10000எம்ஏஎச் பவர் பேங்க் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா

பிளாக் ஷார்க் 10000எம்ஏஎச் பவர் பேங்க் சாதனம் 30நிமிடங்களில் பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போனை 43சதவீதம் வரை சார்ஜ் செய்யும் அளவினான திறனை கொண்டுள்ளது, மற்ற பவர் பேங்க் சாதனங்கள் 30நிமிடங்களில் 23சதவீதம் சார்ஜை மட்டுமே வழங்கும்.

இந்த பிளாக் ஷார்க் பவர் பேங்க் சாதனத்;தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், கேம்பேட், ஹெட்போன், போன்ற ஆக்சஸெரீஸ்களை சார்ஜ் செய்யும் போது சார்ஜ் வேகத்தை குறைக்கக்கூடிய ஒரு பொத்தானும் இதில் இடம்பெற்றுள்ளது. பின்பு இந்த பிளாக் ஷார்க் பவர் பேங்க் அதிக வெப்பம், ஷார்ட் சர்க்யூட், அல்லது ஓவர் கரண்ட் போன்ற பிரச்சணைகளில் இருந்து தடுக்க பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவருகிறது.

பிளாக் ஷார்க் 10000எம்ஏஎச் பவர் பேங்க் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா

இந்த புதிய பிளாக்; ஷார்க் பவர் பேங்க் சாதனம் ரூ.1,188-விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi launches the Black Shark 10000mAh Power bank and more details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X