வாஷிங் மிஷின்களில் போட்டுத் துவைக்கும் புதிய தொழில்நுட்பத்துடன் சியோமி ஸ்மார்ட் ஷூ அறிமுகம்.!
ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென்ற ஒரு தனி இடத்தைப் பிடித்த சீனா நிறுவனமான சியோமி நிறுவனம் தற்பொழுது காலணி சந்தையிலும் களமிறங்கியுள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென்ற ஒரு தனி இடத்தைப் பிடித்த சீனா நிறுவனமான சியோமி நிறுவனம் தற்பொழுது காலணி சந்தையிலும் களமிறங்கியுள்ளது. இந்திய சந்தையில் தனது புதிய எம்.ஐ மென்ஸ் ஸ்போர்ட்ஸ் ஷூ 2 மாடலை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.

5 இன் 1 யுனி மோல்டிங் டெக்னாலஜி
5 இன் 1 யுனி மோல்டிங் டெக்னாலஜியை கொண்டு ஆண்களுக்காகப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த எம்.ஐ மென்ஸ் ஸ்போர்ட்ஸ் ஷூ 2 உருவாக்கப்பட்டுள்ளது. சியோமி நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் வெளியிட்ட மிஜியா ஸ்னிகர்ஸ் மாடலை தொடர்ந்து தற்பொழுது இந்த புதிய எம்.ஐ மென்ஸ் ஸ்போர்ட்ஸ் ஷூ 2 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எம்.ஐ மென்ஸ் ஸ்போர்ட்ஸ் ஷூ 2
எம்.ஐ மென்ஸ் ஸ்போர்ட்ஸ் ஷூ 2 வின் மேல் புறம் 3 டிமென்ஷ்ன் சீம்லெஸ் ஹை எலாஸ்டிக் கின்டிங் தொழில்நுட்பத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்தக் காலணிகளை வாஷிங் மிஷின்களில் போட்டுத் துவைக்கவும் முடியுமென்று சியோமி அறிவித்துள்ளது.

முதற்கட்ட விற்பனை
சியோமி தளத்தில் இந்த புதிய எம்.ஐ மென்ஸ் ஸ்போர்ட்ஸ் ஷூ 2 ஏற்கனவே முதற்கட்ட விற்பனையை ரூ.2,499 க்கு துவங்கியுள்ளது. எம்.ஐ மென்ஸ் ஸ்போர்ட்ஸ் ஷூ 2 கருப்பு, க்கிரே மற்றும் நீல நிறத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

சியோமி அறிவிப்பு
துவக்க விற்பனைக்குப் பின்னர் எம்.ஐ மென்ஸ் ஸ்போர்ட்ஸ் ஷூ தனது அசல் விற்பனை விலையில் ரூபாய் 2,999 க்கு விற்பனை செய்யப்படும் என்று சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

நல்ல வரவேற்பு
மேலும் இந்த புதிய எம்.ஐ மென்ஸ் ஸ்போர்ட்ஸ் ஷூ 2 வின் அசத்தலான டிசைன் மற்றும் சிறந்த தொழில்நுட்ப உருவாக்கம் கொண்டுள்ளதால் எம்ஐ வாடிக்கையாளர்கள் மத்தியில் எம்.ஐ மென்ஸ் ஸ்போர்ட்ஸ் ஷூ 2 நல்ல வரவேற்பை என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications