சியோமி அறிமுகம் செய்யும் மி-டிவி மற்றும் மி-ஆர்ட் டிவி.!

இந்தியாவில் முதல்முறையாக மி டிவி 4 என்ற மாடலை 55 இன்ச் மற்றும் 4K ஸ்க்ரீனில் ஸ்மார்ட் டிவி

|

இந்தியாவில் கடந்த ஆண்டு சியோமி நிறுவனம் மி-டிவியை அறிமுகம் செய்தது என்பதும் இந்த டிவிக்கள் இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்தியாவில் முதல்முறையாக மி டிவி 4 என்ற மாடலை 55 இன்ச் மற்றும் 4K ஸ்க்ரீனில் ஸ்மார்ட் டிவியாக அறிமுகம் செய்த சியாமி, தற்போது மேலும் சில புதிய மாடல்களை அறிமுகம் செய்கிறது. சியோமியின் லேட்டஸ்ட் தயாரிப்பான ஸ்லிம் பிரேம் டிவியாக டிசைன் செய்துள்ளது. இந்த புதிய ஈசீரீஸ் மற்றும் மி ஆர்ட் சீரிஸ் டிவிக்கள் 32 இன்ச்கள் முதல் 65 இன்ச் வரை உள்ளது.

 சியோமி அறிமுகம் செய்யும் மி-டிவி மற்றும் மி-ஆர்ட் டிவி.!

இந்த மி டிவி குறித்த தகவல்கள் சீனாவின் சமூக வலைத்தளம் ஒன்றில் கடந்த ஜூன் மாதமே சியோமியின் சி.இ.ஓ லீ ஜன் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த டிவியின் சிறப்பு என்னவெனில் ஸ்லிம் பிரேம் மற்றும் ஃபுல் ஸ்க்ரீன் டிசைன் தான். மற்ற டிசைன்களில் நடுவில் மட்டும் ஸ்க்ரீன் இருக்கும் வகையில் பிரேமின் ஓரங்களில் ஸ்க்ரீன் இல்லாமல் இருக்கும் என்பது நாம் தெரிந்ததே.

 சியோமி

சியோமி

மேலும் 32 இன்ச் மி E32A டிவி மாடல் இந்திய மதிப்பில் சுமார் ரூ.11400 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற மாடல்களான 43-இன்ச் Mi E43A டிவி ரூ.20700 ஆகவும், 55-இன்ச் மி E55C டிவி ரூ. 31,100 ஆகவும், 65-இன்ச் மி E65A டிவி ரூ.41,500 ஆகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 32-இன்ச் டிவியானது ஹெச் ரெசலூசன் தன்மையுடனும், 43-இன்ச் டிவியின் மாடல் ஃபுல் ஹெச்டி ரெசலூசனாகவும், 55-இன்ச் டிவி மாடல் மற்றும் 65-டிவி மாடல்கள் 4K ரெசலூசன் மற்றும் ஹெச்.டி.ஆர் சப்போர்ட் செய்யும் தன்மையுடனும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

ஓஎஸ்

ஓஎஸ்

அனைத்து ஈசீர்ஸ் மற்றும் ஸ்மார்ட் டிவிக்கள் அனைத்துமே சியோமியின் பாட்ச்வால் ஓஎஸ் கொண்டது என்பது கூடுதல் சிறப்பு. மேலும் டால்பி ஆடியோ, டிடிஎஸ் ஹெச்டி டியூனிங், 16 வோல்ட் சவுண்ட் அவுட்புட், 2ஜிபி ரேம், 8 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ், 1.5GHz பிராஸசர் மற்றும் வைபி ஈதர்நெட் ஆகிய அம்சங்களும் உண்டு. மேலும் இந்த மாடல் டிவிக்களில் புளூடூத் ரிமேட்டும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது

பிராஸசர்

பிராஸசர்

சியோமி நிறுவனம் மேலும் மி ஆர்ட் டிவிக்களையும், 65 இன்ச் ஸ்க்ரீன் அளவில் வெளியிட்டுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.72,700 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய 4K ஹெச்.டி.ஆர் டிவி, சாம்சங் தி பிரேம் டிவிக்கு இணையானது. மேலும் இந்த டிவியில் 1.8GHz பிராஸசர், 2 ஜிபி ரேம், 32 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 24 வோல்ட் சவுண்ட் அவுட்புட், பாட்ச்வால் ஓஎஸ் ஆகியவை கொண்டவை

விரைவில்

விரைவில்

சியோமி நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் புரோட் டிவிக்களை அறிமுகம் செய்தது என்பதும் அவற்றுடன் ரூ.4999 மதிப்புள்ள சியோமி மி சவுண்ட்பார் ஸ்பீக்கர்கள் இருந்தது என்பதும் தெரிந்ததே. இந்தியாவில் இந்த புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படுமா? என்பது உறுதியாக தெரியவில்லை என்றாலும் சியாமி நிறுவனம் விரைவில் ஈசீரீஸ் டிவிக்களை வரும் மாதங்களில் வெளியிடும் என தெரிகிறது

Best Mobiles in India

English summary
Xiaomi Launches New Slim-Frame E-Series Mi TVs and Mi Art TV in China : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X