Xiaomi அறிமுகம் செய்த புது MIJIA Vacuum cleaner 2 சாதனம்.! விலை என்ன?

|

Xiaomi நிறுவனம் கடந்த நவம்பர் 2020 இல் MIJIA Vacuum cleaner எனப் பெயரிடப்பட்ட அதன் முதல் கார்டட் வாக்யூம் கிளீனரை அறிமுகப்படுத்தியது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சீன தொழில்நுட்ப நிறுவனமான சியோமி, இப்போது புதிதாக Xiaomi MIJIA Vacuum Cleaner 2 எனப்படும் ஒரு சூப்பர் வேக்யூம் கிளீனர் மாடலை இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வேக்யூம் கிளீனர் மாடலின் விலை என்ன? இதில் என்ன ஸ்பெஷலாக இருக்கிறது என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

எக்ஸ்ட்ரா பவர் உடன் MIJIA Vacuum Cleaner 2 அறிமுகம்

எக்ஸ்ட்ரா பவர் உடன் MIJIA Vacuum Cleaner 2 அறிமுகம்

முந்தைய மாடலைப் போலவே, புதிய வாக்யூம் கிளீனரும் 16kPa உயர் உறிஞ்சும் ஆற்றலுடன் வருகிறது. இருப்பினும், Vacuum Cleaner 2, மேம்படுத்தப்பட்ட துப்பாக்கி போன்ற தோற்றத்துடன் வருகிறது.

இது ஒரு விஷுவல் டஸ்ட் கப் (visual dust cup) மற்றும் மேம்படுத்தப்பட்ட சைக்லோன் ஏர் டக்ட் (upgraded cyclone air duct) உடன் வருகிறது.

முந்தைய மாடலில் மூன்று ஃபில்டர்கள் வழங்கப்பட்டிருந்தது. இதில் அதற்குப் பதிலாக, புதிய மாடல் ஐந்து ஃபில்டகளை கொண்டுள்ளது.

சைக்ளோன் சக்ஷன் டியூப் உடன் MIJIA Vacuum Cleaner 2

சைக்ளோன் சக்ஷன் டியூப் உடன் MIJIA Vacuum Cleaner 2

இந்த புதிய வேக்யூம் கிளீனர் பல விதங்களில் அதன் முன்னோடி மாடலை விட மேம்படுத்தப்பட்டுள்ளது.

MIJIA Vacuum Cleaner 2 ஆனது 600W உயர் செயல்திறன் கொண்ட மோட்டார் உடன் இயங்குகிறது.

இத்துடன் இது MIJIA Vacuum Cleaner 2 உடன் பொருத்தப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட சைக்ளோன் சக்ஷன் டியூப் உடன் வருகிறது.

இது 16kPa வரை உறிஞ்சும் அழுத்தத்தைக் கொண்டுள்ளது. இதன் பிரத்தியேகமான சைக்லோன் டியூப் வடிவமைப்பு இந்த MIJIA Vacuum Cleaner 2 கொண்டுள்ளது.

இப்படி செஞ்சா ரூ.8000 விலையில் 32இப்படி செஞ்சா ரூ.8000 விலையில் 32" இன்ச் Smart TV வாங்கலாம்.! இது தான் லாஸ்ட் சான்ஸ்.!

5 அடுக்கு பில்டர்-ஆ.! அடேங்கப்பா.!

5 அடுக்கு பில்டர்-ஆ.! அடேங்கப்பா.!

இந்த புதிய MIJIA Vacuum Cleaner 2 தயாரிப்பு டீப் பில்டரேஷன் அம்சத்தை ஆதரிக்கக் கூடிய 5 அடுக்குகளுடன் கூடிய பில்டர்கள் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

சைக்லோன் ஏர் சிஸ்டம் ஒரு வலுவான மையவிலக்கு விசையை இந்த வேக்யூம் கிளீனரில் உருவாக்குகிறது. இதனால், தூசி மற்றும் காற்று உடனடியாக பிரிக்கப்படுகின்றன.

பின்னர், தூசி மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் பின்ஹோல் ஸ்டீல் மெஷ் மூலம் பில்டர் செய்யப்படுகிறது.

MIJIA Vacuum Cleaner 2 எப்படி முந்தைய மாடலில் இருந்து வேறுபடுகிறது?

MIJIA Vacuum Cleaner 2 எப்படி முந்தைய மாடலில் இருந்து வேறுபடுகிறது?

அதனைத் தொடர்ந்து இதில் பில்டர் காட்டன், மற்றும் வடிகட்டி எலெமென்ட் லேயர் அடுக்கு மூலம் பில்டெரேஷன் நடக்கிறது.

இதன் மூலம் வேக்யூம் கிளீனர் காற்று சுத்தம் செய்யப்படுகிறது. இந்த வடிவமைப்பு பின்னடைவு மற்றும் இரண்டாம் நிலை மாசுபாட்டை திறம்படத் தடுக்கிறது என்பது இந்த வேக்யூம் கிளீனரின் சிறப்பம்சமாகும்.

கூடுதலாக, MIJIA Vacuum Cleaner 2 ஆனது முந்தைய தலைமுறை ஆர்க் கிடைமட்ட பார் கைப்பிடியை ஒரு புதிய துப்பாக்கி-பாணியில் மேம்படுத்தியுள்ளது.

4G வேணுமா.! இல்ல 5G வேணுமா? ரூ.6000 முதல் பெஸ்ட் Redmi போன்கள் வாங்கலாம் பாஸ்.!4G வேணுமா.! இல்ல 5G வேணுமா? ரூ.6000 முதல் பெஸ்ட் Redmi போன்கள் வாங்கலாம் பாஸ்.!

4cm ப்ளோர் பிரஷ் உடன் MIJIA Vaccum Cleaner 2

4cm ப்ளோர் பிரஷ் உடன் MIJIA Vaccum Cleaner 2

இது தீவிரமான உழைப்பைச் சேமிக்கும் புதிய வடிவத்தை வழங்குகிறது.

இது பயன்பாட்டின் போது கையில் எடையைக் குறைக்கிறது. இந்த சாதனம் ஒரு மெல்லிய 4cm ப்ளோர் பிரஷ் -ஐப் பயன்படுத்துகிறது.

இது பர்னிச்சர் கீழ் தூசியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஊடுருவி, பர்னிச்சரை நகர்த்த வேண்டிய தேவையை நீக்குகிறது.

240 மிமீ நேராக பெரிய உறிஞ்சும் போர்ட் மூலம், இது பெரிய பகுதியை மிக வேகமாக சுத்தம் செய்கிறது.

MIJIA Vacuum Cleaner 2 விலை என்ன?

MIJIA Vacuum Cleaner 2 விலை என்ன?

சிறிய முடுக்குகளைச் சுத்தம் செய்வதில் உள்ள சிக்கலை எளிதில் தீர்க்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.15000 முதல் ரூ.20,000 திற்குள் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இந்த MIJIA Vacuum Cleaner 2 மிக விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ரோபோ வேக்யூம் மற்றும் சாதாரண வேக்யூம் கிளீனர்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளதால், சியோமி இந்த MIJIA Vacuum Cleaner 2 சாதனத்தை விரைவில் அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Xiaomi Launches New Corded MIJIA Vacuum Cleaner 2 With 5 Filters and 16KPa Suction Power

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X