4C,4S,4X என மூன்று வித மாடல்களில் மீ டிவிகளை வெளியிட்டு அசத்திய சியோமி.!

வன்பொருள் பகுதியை பொறுத்தவரை, இந்த டிவியில் 1GB ரேமுடன் 1.5GHz ஏ.ஆர்.எம் மேம்படுத்தப்பட்ட மல்டி கோர் சிப்செட், 4GB உள்ளார்ந்த சேமிப்புதிறனும் உள்ளது.

|

வரும் மே31ல் நடைபெறும் மெகா ஈவென்ட்-ஐ முன்னிட்டு புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை வெளியிட்டுள்ளது சியோமி. தனது மீ டிவி4 தொடர் தொகுப்பில் மூன்று புதிய தொலைக்காட்சிகளை சேர்த்துள்ளது இந்நிறுவனம். சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய மீ டிவி 4C,மீ டிவி 4X மற்றும் மீ டிவி 4S மாடல் தொலைக்காட்சிகள் 32இன்ச் முதல் 55இன்ச் அளவுடையதாக இருக்கின்றன.

4C,4S,4X என மூன்று வித மாடல்களில் மீ டிவிகளை வெளியிட்டுஅசத்திய சியோமி

சியோமி மீ டிவி 4S(55-இன்ச்)
தற்போது வெளியிடப்பட்ட 4 மாடல்களில் சியோமி மீ டிவி 4S 55-இன்ச் தொலைக்காட்சி மிகவும் விலையுயர்ந்த மாடலாக ரூ35,000 விலை மதிப்புடன் வெளியாகிறது. இந்த ஸ்மார்ட் டிவியானது சிறப்பான வளைந்த வடிவமைப்புடன், 4K டிஸ்ப்ளே திறன், 60Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 178டிகிரி பார்க்கும் கோணத்துடன் இருக்கிறது.

வன்பொருள் பகுதியை பொறுத்தவரை, இந்த டிவியில் 2GB ரேமுடன் 64பிட் குவாட்கோர் இயக்கியும், 8GB உள்ளார்ந்த சேமிப்புதிறனும் உள்ளது. மேலும் இதில் H.264/265 டிகோடிங் வசதியுடன் 2 டால்பி ஆடியோ 8W ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இணைப்புகளை பொறுத்தவரை, 3 எச்.டி.எம்.ஐ போர்ட்கள், 2 யூ.எஸ்.பி போர்ட்கள் மற்றும் ஒரு ஏ.வி, ஈதர்நெட், S/PDIF மற்றும் அனலாக் சிக்னல் DTMB போர்ட் உள்ளது.

4C,4S,4X என மூன்று வித மாடல்களில் மீ டிவிகளை வெளியிட்டுஅசத்திய சியோமி

சியோமி மீ டிவி 4X(55-இன்ச்)
சியோமி மீ டிவி 4X 55-இன்ச் தொலைக்காட்சி 4L HRD திரையுடன் வெளியாகிறது. இதன் பக்கவாட்டில் மிகவும் குறுகிய பேசில்களும், பியோனோ பெயிண்ட் வசதியும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியானது மீ டிவி 4X 55-இன்ச் தொலைக்காட்சியை சிறப்பான வளைந்த வடிவமைப்பை பெற்றிருக்கவில்லை.

வன்பொருள் பகுதியை பொறுத்தவரை, இந்த டிவியில் 2GB ரேமுடன் 64பிட் குவாட்கோர் இயக்கியும், 8GB உள்ளார்ந்த சேமிப்புதிறனும் உள்ளது. மேலும் இதில் 2 டால்பி ஆடியோ 8W ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.இந்த டிவியின் விலை ரூ30,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4C,4S,4X என மூன்று வித மாடல்களில் மீ டிவிகளை வெளியிட்டுஅசத்திய சியோமி

சியோமி மீ டிவி 4S(43-இன்ச்)
இந்த சியோமி மீ டிவி 4S 55-இன்ச் தொலைக்காட்சியானது 55இன்ச் டிவியை போல வளைந்த வடிவமைப்புடன் உள்ள திரையை பெற்றிருக்கவில்லை. இதன் காரணமாக விலையை மிகவும் குறைத்து ரூ19,100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்டிவியில் 8ms ரெஸ்பான்ஸ் நேரமுள்ள 4K அல்ட்ரா எச்.டி டிஸ்ப்ளே திறனுள்ள திரை, 60Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 178டிகிரி பார்க்கும் கோணத்துடன் இருக்கிறது.வன்பொருள் பகுதியை பொறுத்தவரை, இந்த டிவியில் 2GB ரேமுடன் குவாட்கோர் இயக்கியும், 8GB உள்ளார்ந்த சேமிப்புதிறனும் உள்ளது. இணைப்புகளை பொறுத்தவரை, 55இன்ச் மாடலில் உள்ள அனைத்து வசதிகளும் இதிலும் உள்ளன.

4C,4S,4X என மூன்று வித மாடல்களில் மீ டிவிகளை வெளியிட்டுஅசத்திய சியோமி

சியோமி மீ டிவி 4C(32-இன்ச்)
தற்போது வெளியிடப்பட்ட 4 மாடல்களில் ஜியோமி மீ டிவி 4C 32-இன்ச் தொலைக்காட்சி மிகவும் மலிவு விலை மாடலாக ரூ10,600 விலை மதிப்புடன் வெளியாகிறது. இதில் 6.5ms ரெஸ்பான்ஸ் நேரமுள்ள 1366×768 பிக்சல் எச்.டி டிஸ்ப்ளே திரை, 60Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 178டிகிரி பார்க்கும் கோணத்துடன் இருக்கிறது.

வன்பொருள் பகுதியை பொறுத்தவரை, இந்த டிவியில் 1GB ரேமுடன் 1.5GHz ஏ.ஆர்.எம் மேம்படுத்தப்பட்ட மல்டி கோர் சிப்செட், 4GB உள்ளார்ந்த சேமிப்புதிறனும் உள்ளது. இணைப்புகளை பொறுத்தவரை, 2 எச்.டி.எம்.ஐ போர்ட்கள், 1 யூ.எஸ்.பி போர்ட் மற்றும் ஒரு ஏ.வி, ஈதர்நெட், S/PDIF மற்றும் அனலாக் சிக்னல் DTMB போர்ட் உள்ளது.

How to check PF Balance in online (TAMIL)


இந்த அனைத்து மாடல்களுக்கும் சீனாவில் மட்டும் முன்பதிவு மேற்கொள்ளப்படுகிறது.இதன் விற்பனை மே31ல் துவங்கவுள்ள நிலையில் அதே நாளில் சியோமி மிகப்பெரிய ஆண்டுவிழாவை நடத்தவுள்ளது. மேலும் அந்த நிகழ்ச்சியில் மீ 8 ஸ்மாட்போன், மீ பேண்ட் 3 மற்றும் பலவற்றை சியோமி வெளியிடவுள்ளதாக தகவல்கள் கசிகின்றன.

Best Mobiles in India

English summary
Xiaomi launches Mi TV 4C, 4S, and 4X: Price, features, and more :Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X