கொசு விரட்டி மற்றும் மினி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய சியோமி.!

|

பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி, தனது முதல் கொசு விரட்டியை 2016ல் அறிமுகப்படுத்தியது.தற்போது இந்நிறுவனம் இரண்டாம் தலைமுறை கொசு விரட்டிகளை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கொசு விரட்டி மற்றும் மினி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய சியோமி.!

முந்தைய ஒன்றை விட மிகவும் சக்திவாய்ந்த இந்த கருவி, புதுமையான வடிவமைப்பில் பவர் பேங்க் அல்லது நேரிடையாக ப்ளக் பாய்ண்டில் இருந்து மின்சாரத்தை பெறுவதற்கு பதிலாக ஏஏ பேட்டரிகளில் செயல்படுகிறது.மேலும் இந்நிறுவனம் குழந்தைகளுக்கான புதிய ஸ்கூட்டரை மீ மினி ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

சியோமி மீ ஹோம் கொசு விரட்டியின் அம்சங்கள்

சியோமி மீ ஹோம் கொசு விரட்டியின் அம்சங்கள்

இந்த கொசு விரட்டியானது 28 கன மீட்டர் பரப்பளவுள்ள அறையில் செயல்பட ஏதுவானது. ஏபிஎஸ் வெளிப்புறத்துடன் வரும் இக்கருவி மிகவும் பாதுகாப்பானது மற்றும் அடிப்பகுதியில் உள்ள ஆண்டி-சிலிப் மேட் நீடித்து நிலைக்கக்கூடியது. மேலும் இதில் உயர்தர ஆர்கானிக் சிலிக்கான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள ஆஸ்பின் பாராமெசிட்டிகல் என்னும் நிறுவனம் கொசுவிரட்டிக்கான மாத்திரைகளை தயாரிக்கிறது. இந்த மாத்திரையில் 500mg குயினோன் மற்றும் பென்சோகுயினோன் ஈஸ்டர் பயன்படுத்தப்படுகிறது. இந்த கொசு விரட்டி பயன்பாட்டை பொறுத்து 30 முதல் 45 நாட்கள் வரை செயல்படக்கூடியது.

90 நாட்கள் வரை

90 நாட்கள் வரை

இந்த கருவியானது 10 மணி நேரத்திற்கு பிறகு தானாகவே செயல்படுவதை நிறுத்திக்கொள்ளும் என இந்நிறுவனம் கூறுகிறது. எளிமையான வடிவமைப்பில் வரும் இந்த கருவியை பயன்படுத்துவது மிகவும் எளிது மற்றும் இதன் மேல் பகுதியை கழற்றுவதன் மூலம் எளிதில் பேட்டரி மற்றும் கொசுவிரட்டி மாத்திரைகளை மாற்றலாம்.


முக்கியமாக இது வெப்பத்தை வெளிப்படுத்தாது மற்றும் இது செயல்பட வெளிப்புற சக்தி எதுவும் தேவையில்லை. 2 ஏஏ பேட்டரியில் செயல்படும் இக்கருவியை நாளொன்றுக்கு சராசரியாக 8மணி நேரம் பயன்படுத்தினால் 90 நாட்கள் வரை நீடித்து நிலைக்கக்கூடியது.

 சியோமி மீ மினி ஸ்கூட்டரின் முக்கிய அம்சங்கள்

சியோமி மீ மினி ஸ்கூட்டரின் முக்கிய அம்சங்கள்

3 முதல் 6 வயதுள்ள குழந்தைகளுக்காகவே பிரத்யோகமான ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளது சியோமி. குழந்தைகள் எளிதாக ஸ்கூட்டரை புவியீர்ப்பு விசைக்கு ஏற்ப நிலைப்படுத்தும் வகையில் டூயல் ஸ்பிரிங் கிரேவிட்டி சிஸ்டம் இதில் உள்ளது. வலது புறமா இடது புறமா என்பதை பொருட்படுத்தாமல், முன்புறச் சக்கரம் தானாகவே நடுநிலைமைக்கு வந்துவிடும்.

ஸ்கூட்டரில் உள்ள விளக்கு, எலக்ட்ரோ மேக்னெட் இன்டெக்சன் மூலம் மின்சாரத்தை தயாரிப்பதால், இரவு நேரங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 50கிலோ எடையை தாக்கக்கூடியது.

விலை

விலை

வடிவமைப்பை பொறுத்தமட்டில், அரைவட்ட வளைவு வடிவில் மிகவும் இலகுவாக பயன்படுத்தக்கூடியது. கைப்பிடியின் உறைகள் மிகவும் மிருதுவாகவும், மற்றவை உலோகத்தாலும் செய்யப்பட்டவை. இந்த கைப்பிடிகள் ஒரு முறை தொட்டாலே கழன்று வரும் தொழில்நுட்பத்தை சார்ந்தவை. இந்த ஸ்கூட்டர்கள் இளஞ்சிவப்பு, நீலம் மற்றும் மஞ்சள் நிறங்களில் கிடைக்கின்றன.

சியோமி மீ கொசு விரட்டியின் விலை ரூ620 எனவும், மீ மினி ஸ்கூட்டரின் விலை ரூ2610 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு பொருட்களும் ஜூன் 8 முதல் சீனாவில் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் இவை வெளியாக இன்னும் சில காலம் ஆகலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi launches Mi Home mosquito repellent and Mi Mini Scooter for Kids : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X