சிங்கிள் சார்ஜில் 10 மணிநேர பேட்டரி; நியாமான விலை; சியோமியை அடிச்சுக்க முடியுமா.?!

சியோமி நிறுவனம், அதன் பரந்த அளவிலான ஆடியோ தயாரிப்புகளின் பட்டியலில் மற்றொரு ப்ளூடூத் ஹெட்செட்டை சேர்த்துள்ளது.

|

சியோமி நிறுவனம், அதன் பரந்த அளவிலான ஆடியோ தயாரிப்புகளின் பட்டியலில் மற்றொரு ப்ளூடூத் ஹெட்செட்டை சேர்த்துள்ளது. இந்த சமீபத்திய அறிமுகமானது ஒரு ஓவர்-தி-இயர் மி ப்ளூடூத் ஹெட்செட் ஆகும்.

சிங்கிள் சார்ஜில் சுமார் பத்து மணி நேரம் வரையிலான ஆடியோ பிளேபேக்கை வழங்குவதே இதன் சிறப்பம்சம் ஆகும். இந்த மி ப்ளூடூத் ஹெட்செட்டின் சிறப்பம்சம் அதன் பேட்டரி ஆயுள் மட்டுமல்லாமல், இன்னும் நிறையா இருக்கிறது. அவைகள் என்ன.? என்பதையும், இதன் விலை நிர்யணம் என்ன.? என்பதையும் விரிவாக காண்போம்.

விலை நிர்ணயம் என்ன.?

விலை நிர்ணயம் என்ன.?

கூறப்படும் ஓவர்-தி-இயர் மி ப்ளூடூத் ஹெட்செட் ஆனது 299 யுவான் என்கிற விலைக்கு சீனாவில் அறிமுகமாகியுள்ளது. இந்திய விலையின் படி சுமார் ரூ.3,150/- ஆகும். விலைக்கு ஏற்ற சிறந்த அம்சங்களுடன் வருகிறதா என்று கேட்டால், ஆம் என்றே கூறலாம். முக்கியமாக, இந்த ஹெட்செட் சிலிகான் பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது என்பதால் நிறுவனத்தின் விலை நிர்ணயம் நியாமானதாகவே உள்ளது.

வேறென்ன சிறப்பம்சங்கள்.?

வேறென்ன சிறப்பம்சங்கள்.?

சியோமி நிறுவனத்தின் இந்த புதிய ஹெட்செட் ஆனது ப்ளூடூத் வி4.1 தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆடியோ அனுபவத்தை வழங்க 40மிமீ டைனமிக் ட்ரைவரை கொண்டுள்ளது. இந்த சியோமி மி ப்ளுடூத் ஹெட்செட், ஒரு பொதுவான வடிவமைப்பையே பெற்றுள்ளது. அதன் குஷன்கள் பியூ சாப்ட் மெடீரியல்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.

உள்ளமைக்கப்பட்ட வாய்ஸ் அசிஸ்டென்ட்.!

உள்ளமைக்கப்பட்ட வாய்ஸ் அசிஸ்டென்ட்.!

இந்த ஹெட்செட், அதன் இயர்பேடில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுள்ளது. அதன்வழியாக, ஒரு பயனர் குரல் அழைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும், துண்டிக்கவும் முடியும் மற்றும் இசை பின்னணிகளின் மீதான கட்டுப்பாடுகளை நிகழ்த்த முடியும். எல்லாவற்றிக்கும் மேலாக, சியோமி அதன் உள்ளமைக்கப்பட்ட வாய்ஸ் அசிஸ்டென்ட்டை செயல்படுத்தக்கூடிய செயல்பாட்டையும் சேர்த்துள்ளது.

வால்யூம் கண்ட்ரோல் மற்றும் ஸ்விட்ச் பட்டன்.!

வால்யூம் கண்ட்ரோல் மற்றும் ஸ்விட்ச் பட்டன்.!

உடன் வால்யூம் கண்ட்ரோலை நிகழ்த்த உதவும் சிறிய பட்டன்களும் ஹெட்செட்டில் பொதிக்கப்பட்டுள்ளது. மற்றும் ஒரு குறிப்பிட்ட பாடலில் இருந்து மற்ற பாடலுக்கு மாற உதவும் ஸ்விட்ச் பட்டன் ஒன்றும் அணுக கிடைக்கும், இந்த பட்டன் ஹெட்செட் உடன் இணைக்கப் பெற்றுள்ள ஸ்மார்ட்போனை அடிக்கடி எடுக்க வேண்டிய வேலையை கணிசமான குறைக்கும்.

நாய்ஸ்-டிடெக்ஷனுக்கான  சியோமியின் டூயல் மைக்.!

நாய்ஸ்-டிடெக்ஷனுக்கான சியோமியின் டூயல் மைக்.!

தொழில்நுட்ப அம்சங்களை பொறுத்தவரை, இந்த புதிய மி ப்ளூடூத் ஹெட்செட் ஆனது ஒரு 400mAh பேட்டரி மூலம் சகதியூட்டப்படுகின்றது மேலும் குறிப்பிட்டபடி, சிங்கிள் சார்ஜ் செய்ய 10 மணி பேட்டரி ஆயுளை பெறலாம். ஹெட்செட்டின் ப்ரெக்வென்சி வரம்பு 20Hz மற்றும் 20kHz-க்கு இடையே உள்ளது. ஹெட்செட்டில் 40mm டைனமிக் டிரைவர் மற்றும் நாய்ஸ்-டிடெக்ஷனுக்கான சியோமியின் டூயல் மைக் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்திய விற்பனை.?

இந்திய விற்பனை.?

ரூ.3150/- என்கிற அறிமுக விலையை கொண்டுள்ள இந்த ஹெட்செட் ஆனது சியோமி மி மால் வழியாக கருப்பு நிற மாறுபாட்டில் மட்டுமே வாங்க கிடைக்கிறது. ஹெட்ஸ்ட்டிற்கான ப்ரீ-ஆர்டர் ஏற்கனவே திறந்துவிடப்பட்டுள்ளன மற்றும் அதன் ஷிப்பிங் வருகிற ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்திய அறிமுகத்தை பொறுத்தவரை, கூடிய விரைவில் நடக்கும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Launches Mi Bluetooth Headset, Claims 10 Hours of Playback on Single Charge. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X