Home
Gadgets

அறிமுகம்: பட்ஜெட் விலையில் மி செல்பீ ஸ்டிக் ட்ரைபாட் & மி புளூடூத் ஆடியோ ரிசீவர்.!

அதன் ஒரு பகுதியாக சியோமி நிறுவனம், இன்று அதன் இரண்டு புதிய அக்கசசெரீஸ்களை அறிவித்துள்ளது.

By Muthuraj

மலிவான விலையில் ஸ்மார்ட்போன்களை களமிறக்கி இந்திய மக்களின் மனதில் நன்கு பதிந்த சியோமி நிறுவனம், மெல்ல மெல்ல அதன் மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் மறுகையில், அதன் அக்கசசெரீஸ்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.

அறிமுகம்: மி செல்பீ ஸ்டிக் ட்ரைபாட் & மி புளூடூத் ஆடியோ ரிசீவர்.!

அதன் ஒரு பகுதியாக சியோமி நிறுவனம், இன்று அதன் இரண்டு புதிய அக்கசசெரீஸ்களை அறிவித்துள்ளது. ஒன்று - மி புளூடூத் ஆடியோ ரிசீவர், மற்றொன்று மி ஸ்லேபீ ஸ்டிக் ட்ரைபாட். அதன் விலை நிர்ணயம் என்ன.? எங்கு வாங்க கிடைக்கும்.? அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை விரிவாக காண்போம்.

இதுதான் சியோமியின் பெஸ்ட்.!

இதுதான் சியோமியின் பெஸ்ட்.!

ப்ளூடூத் ஆடியோ ரிசீவர் ஆனது ரூ.999/- என்கிற விலைக்கும், மறுகையில் உள்ள செல்பீ ஸ்டிக் ட்ரைபாட் ஆனது ரூ.1,099/-க்கும் வாங்க கிடைக்கிறது. இந்த இரண்டு தயாரிப்புகளுமே, மி.காம் தளம் வழியாக வாங்க கிடைக்கிறது. இதுவரை பலவகையான அக்கசசெரீஸ்கள், சியோமி தளத்தில் இணைக்கப்பட்டு இருந்தாலும் கூட, இந்த இரண்டு சாதனைகளும் தான், இதுநாள் வரையிலாக இணைக்கப்பெற்ற சிறந்த சாதனங்களாக உள்ளன என்பது வெளிப்படை.

ப்ளூடூத் ஷட்டர் ரிமோட் ஆதரவு.!

ப்ளூடூத் ஷட்டர் ரிமோட் ஆதரவு.!

மி செல்பீ ஸ்டிக் ட்ரைபாட்டின் அம்சங்களை பொறுத்தவரை, இதை ஒரு செல்பீ ஸ்டிக் ஆகவும் பயன்படுத்தலாம் மற்றும் ட்ரைபாட் ஆகவும் பயன்படுத்தலாம். இதன் சிறந்த பகுதி என்னவெனில், இதில் ப்ளூடூத் ஷட்டர் ரிமோட் ஆதரவு உள்ளது. ஒரு அலுமினிய அலாய் கம்பியுடன் இந்த இணைப்பு கிடைக்கிறது. மேலும் பயனரின் தேவைக்கேற்ப இதன் நீளம் சரிசெய்யப்படும் ஆதரவும் கொண்டுள்ளது.

செல்பீ பிரியர்களை இலக்காக கொள்ளும் என்பதும் வெளிப்படை.!

செல்பீ பிரியர்களை இலக்காக கொள்ளும் என்பதும் வெளிப்படை.!

தொலைவிலிருந்தும் கூட கட்டுப்பாடுகளை நிகழ்த்த உதவும் ப்ளூடூத் ஷட்டர்ப் ரிமோட் ஆனதை, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களுடன் இணைக்க முடியும். நிறுவனத்தின், சியோமி மி மேக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் மிக எளிமையாக பொருந்தும் இந்த செல்பீ ஸ்டிக் ஆனது, பயணக்கட்டுரைகள் அல்லது வலைப்பதிவுர்கள் மற்றும் செல்பீ பிரியர்களை இலக்காக கொள்ளும் என்பதும் வெளிப்படை.

வயர்லெஸ் ஹெட்போன்களாக மாற்றும்.!

வயர்லெஸ் ஹெட்போன்களாக மாற்றும்.!

மறுகையில் உள்ள சியோமி மி ப்ளூடூத் ஆடியோ ரீசிவர் ஆனது, ப்ளூடூத் 4.2 தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இதன் சிறந்த பகுதி என்னவெனில், இது வயர்டு ஹெட்போன்கல் அல்லது இயர்போன்களை, வயர்லெஸ் ஹெட்போன்களாக மாற்றும். மேலும், இந்த சிறிய சப்போர்ட் சாதனம் ஆனது, ஒரு அனலாக் கார் மியூசிக் சிஸ்டத்தை, வயர்லெஸ் மியூசிக் சிஸ்டமாகவும் மாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
பேட்டரி ஆயுள்.!

பேட்டரி ஆயுள்.!

இந்த சியோமி மி ப்ளூடூத் ஆடியோ ரீசிவரின், பேட்டரி ஆயுள் ஆனது, சுமார் நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை நீடிக்கிறது. அதாவது ஒரு பில்ட்-இந்த ஆம்ப் உடனாக 97mAh பேட்டரி உடன் இணைக்கப்பட்டுள்ளது. பிற சாதனங்களுடன் இணைக்கப்படுவதற்கான மற்றும் ஆன் / ஆஃப் செயல்முறைகளுக்கான ஒற்றை பட்டனை மட்டும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Launches Mi Bluetooth Audio Receiver and Mi Selfie Stick Tripod Accessories in India. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X