மிகவும் எதிர்பார்த்த சியோமி மி வயர்லெஸ் சார்ஜர் அறிமுகம்.!

இந்த சியோமி மி வயர்லெஸ் சார்ஜரில் இருக்கம் எல்இடி இன்டிகேட்டரை பார்த்தே பயனர்கள் தங்களது சாதனத்தின் சார்ஜிங்விவரத்தை மிக எளிமையாக தெரிந்துகொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

|

சியோமி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன புதிய சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். அந்த வரிசையில் சியோமி நிறுவனத்தின் மி வயர்லெஸ் சார்ஜர் மாடலை அறிமகம் செய்துள்ளது அந்நிறுவனம். குறிப்பாக அதிக பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த வயர்லெஸ் சார்ஜர்.

மிகவும் எதிர்பார்த்த சியோமி மி வயர்லெஸ் சார்ஜர் அறிமுகம்.!

இந்த வயர்லெஸ் சார்ஜர் பொறுத்தவரை 10வாட் வரை ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பல்வேறு சியோமி ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் தான் இந்த அட்டகாசமான சார்ஜர்
வெளிவந்துள்ளது.

அலுமினியம் அலாய்

அலுமினியம் அலாய்

மேலும் Qi தரத்தை சப்போர்ட் செய்யும் புதிய சியோமி வயர்லெஸ் சார்ஜரில் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மி வயர்லெஸ் சார்ஜர் அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் மேல் பகுதியில் சிலிகான் பொருத்தப்பட்டுள்ளது.

 டெம்ப்பரேச்சர் ப்ரோடெக்ஷன்

டெம்ப்பரேச்சர் ப்ரோடெக்ஷன்

இந்த மி வயர்லெஸ் சார்ஜரில் டெம்ப்பரேச்சர் ப்ரோடெக்ஷன், ஓவர்-வோல்ட் ப்ரோடெக்ஷன், ஷார்ட் சர்கியுட் ப்ரோடெக்ஷன், பவர் ப்ரோடெக்ஷன், போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது. குறிப்பாக பயன்படுத்த மிக அருமையாக இருக்கும் மி சார்ஜர்.

7.5 வாட்ஸ் அவுட்புட்

7.5 வாட்ஸ் அவுட்புட்

சியோமி மி வயர்லெஸ் சார்ஜர் பொறுத்தவரை சியோமி மி மேக்ஸ் 2எஸ், ஐபோன் 8,ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் எக்ஸ் போன்ற மாடல்களுக்கு அதிகபட்சம் 7.5 வாட்ஸ் அவுட்புட் பின்பு சாம்சங் கேலக்ஸி எஸ்9, கேலக்ஸி நோட் 9 மற்றும் இதர மாடல்களுக்கு அதிகபட்சம் 10 வாட் வரையிலான அவுட்புட் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வயர்லெஸ் சார்ஜிங் தூரம்

வயர்லெஸ் சார்ஜிங் தூரம்

இந்த சியோமி மி வயர்லெஸ் சார்ஜரில் இருக்கம் எல்இடி இன்டிகேட்டரை பார்த்தே பயனர்கள் தங்களது சாதனத்தின் சார்ஜிங் விவரத்தை மிக எளிமையாக தெரிந்துகொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் வயர்லெஸ் சார்ஜிங் தூரம் 4எம்எம் வரை இருக்கிறது, இதனால் ஸ்மார்ட்போன் கேசில் இருந்து எடுத்தாலும் சார்ஜ் ஆகும்.

விலை

விலை

மி வயர்லெஸ் குவிக் சார்ஜ் 2.0 அல்லது க்விக் சார்ஜ் 3.0 அடாப்டர் பயன்படுத்தும் போது அதிகபட்சம் 7.5 வாட் அல்லது 10 வாட் திறன் வழங்குகிறது. இந்த சார்ஜரை வழக்கமான 5V/ 2A அல்லது 5V/ 2.4A உடன் இணைக்கும் போது 5வாட் திறன் வழங்கும் என்று கூறப்படுகிறது. தற்சமயம் சீனாவில் இந்த சாதனம் விற்பனைக்கு வந்துள்ளது, விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை ரூ.721-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Xiaomi Launches Its First Wireless Charger With 10W Fast Charging Support in China: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X