Xiaomi நாளே கெத்து தானேப்பா.. கையடக்க Mijia எலெக்ட்ரிக் ஷேவர் S200 அறிமுகம்.. இவ்வளவு குறைந்த விலையிலா?
சியோமி (Xiaomi) நிறுவனம் அதன் கேட்ஜெட் சாதனங்களின் வரிசையில் புதிதாக மிஜியா எலக்ட்ரிக் ஷேவர் S200 என்ற சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது கையடக்க அளவில், மிகவும் சிறிய சைசில் அறிமுகம் செய்யப்பட்ட பவர்புல் ஷேவர் சாதனமாகும்.
சியோமி நிறுவனம் தொடர்ந்து பல புதிய சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், இப்போது நிறுவனம் அதன் பர்சனல் கேர் (Personal care) போர்ட்போலியோவின் கீழ் மிஜியா எலக்ட்ரிக் ஷேவர் S200 (Mijia Electric Shaver S200) என்ற புதிய ஷேவிங் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது நிறுவனத்தின் சொந்த சந்தையான சீனாவில் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மிஜியா எலக்ட்ரிக் ஷேவர் S200 (Mijia Electric Shaver S200):
இந்த மிஜியா எலக்ட்ரிக் ஷேவர் S200 சாதனம் மிகவும் லாவகமாக வகையில் கைக்கு அடக்கமாக இருக்கும் விதத்தில் பார்த்துப்பார்த்து வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது கண்கவர் டிஸைனுடன் (design), எளிதில் எடுத்து செல்ல அனுமதிக்கும் வகையில் மிகவும் காம்பெக்ட் (compact size) அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பார்க்க பிரீமியம் கேட்ஜெட் (premium gadgets) சாதனம் போல் காட்சியளித்தாலும், இதன் விலை பட்ஜெட்டில் உள்ளது என்பது கூடுதல் சிறப்பு.
சரி, இப்போது இந்த மிஜியா எலக்ட்ரிக் ஷேவர் S200 சாதனம் என்னென்ன அம்சங்களை வழங்குகிறது என்று பார்க்கலாம். இந்த எலக்ட்ரிக் ஷேவர் சாதனம் இன்டெலிஜெண்ட் சென்சிங் ஸ்டார்ட் டெக்னாலஜி (intelligent sensing start technology) அம்சத்துடன் வருகிறது. தற்போது சந்தையில் வாங்க கிடைக்கும் ஷேவர்கள் போல நீங்கள் பவர் பட்டனை அழுத்தி, பிறகு ஷேவ் செய்ய அனுமதிப்பது போல் இந்த புதிய எலக்ட்ரிக் ஷேவர் செயல்படப்போவதில்லை.
இதற்கு மாறாக, உங்கள் முகத்துடன் அல்லது உங்கள் முக தோலுக்கு அருகாமையில் வரும் பொழுது இந்த மிஜியா எலக்ட்ரிக் ஷேவர் S200 சாதனத்தில் உள்ள சென்சார்கள் (sensor) உங்கள் சருமத்தை கண்டறிந்தவுடன், எலக்ட்ரிக் ஷேவர் மோட்டரை தானாக ஆன் (ON) செய்கிறது. உங்களிடம் இருந்து ஷேவரை விளக்கும்பொழுது தானாக ஆஃப் (OFF) நிலைக்கு செல்கிறது. இந்த சாதனம் 8000 RPM கொண்ட மைக்ரோ மோட்டார் (micro motor) உடன் வருகிறது.

நேரடியாக தண்ணீரில் அலசலாம்.. டூயல் ஆர்க் மோட்டார் கொண்ட ஷேவர்:
இந்த மிஜியா எலக்ட்ரிக் ஷேவர் S200 எலக்ட்ரிக் ஷேவர் டூயல் ஆர்க் மோட்டார் (dual arc motor) உடன் வருகிறது. இதன் நெட் டிசைன் மிகவும் மெருதுவான ஷேவிங் அனுபவத்தை தருகிறது. சருமத்திற்கு எந்தவித சிராய்ப்பும், கீறல்களும் இல்லாமல் மிகவும் பாதுகாப்பான ஷேவிங்கை (safe shaving) வழங்குகிறது. கூடுதலாக இதனுள் இருக்கும் பிளொட்டிங் ஸ்ட்ரக்ச்சர் உங்கள் முகத்தின் அமைப்பிற்கு ஏற்றார் போல ப்ளேடுகளை நகர்த்துகிறது.
இந்த எலக்ட்ரிக் ஷேவர் உலர்ந்த மற்றும் ஈரமான ஷேவிங்கை ஆதரிப்பை ஆதரிக்கிறது. இதன் மூலம் தனிப்பட்ட விருப்பங்களில் உங்களால் பயன்படுத்த முடியும். இது IPX7 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Water resistance) வருகிறது. ஆகையால், நேரடியாக இதை தண்ணீரில் காண்பித்து சுத்தம் செய்துகொள்ளலாம். இந்த அம்சம் ஷேவிங் கிரீம் (shaving cream) அல்லது ஜெல்லைப் (shaving gel) பயன்படுத்தி இன்னும் வசதியான ஷேவிங்கிற்கான கதவைத் திறக்கிறது.
இது 60 நிமிடங்கள் நீடிக்கும் பேட்டரி (battery) ஆயுளை கொண்டுள்ளது. இது டைப்-C சார்ஜிங் போர்ட் உடன் பாஸ்ட் சார்ஜிங் அனுபவத்தை வழங்குகிறது. இதன் விலை மற்றும் விற்பனை விபரங்களை பற்றி இப்போது பார்க்கலாம். இது சீன சந்தையில் $26 டாலர் விலையில் (price) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது தோராயமாக ரூ.2000 விலை புள்ளியை பெறுகிறது.


Click it and Unblock the Notifications








