Home
Gadgets

சியோமியின் 60-இன்ச், 75-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

சியோமி நிறுவனம் தனது புதிய 75-இன்ச் அளவிலான சியோமி புல் ஸ்க்ரீன் டிவி ப்ரோ மற்றும் 60-இன்ச் மி டிவி 4ஏ மாடல்களையும் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட் டிவி மாடல்கள்

இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் விரைவில் இந்திய உட்பட அனைத்து சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனங்களின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை உட்பட அனைத்து தகவல்களையும் பார்ப்போம்.

 75-இன்ச் சியோமி புல் ஸ்க்ரீன் டிவி ப்ரோ அம்சங்கள்

75-இன்ச் சியோமி புல் ஸ்க்ரீன் டிவி ப்ரோ அம்சங்கள்

சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 75-இன்ச் புல் ஸ்க்ரீன் டிவி ப்ரோ மாடல் 97 சதவீதம் என்கிற ஸ்க்ரீன் டூ பாடி விகிதத்தை கொண்டுள்ளது, பின்பு அலுமினிய அலாய் மற்றும் பூஜ்ஜிய பெசல் வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

75-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலில் 2ஜிபி ரேம்

இந்த 75-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,பின்பு குவாட்-கோர் 64-பிட் பிராசஸர் மூலம் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் இயக்கப்படுகிறது. மேலும் 12என்எம் ஃபின்ஃபெட் ப்ராஸஸ் சிப்செட் வசதி இவற்றுள் அடக்கம்.

75-இன்ச் புல் ஸ்க்ரீன் டிவி ப்ரோ

சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 75-இன்ச் புல் ஸ்க்ரீன் டிவி ப்ரோ மாடலில் டால்பி ஆடியோ வசதி,சியாஏஐ அசிஸ்டென்ட் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் வசதிகளும் உள்ளது. பின்பு இந்த டிவியை ஐஒடி சாதனங்களுடன் இணைக்க உங்களுக்கு ஒரு விருப்பமும் கிடைக்கும்.மேலும் இந்த 4கே டிவி பேட்ச்வால் ஒஎஸ் உடன் ஷிப்பிங் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

60-இன்ச் சியோமி மி டிவி 4ஏ அம்சங்கள்

60-இன்ச் சியோமி மி டிவி 4ஏ அம்சங்கள்

இந்தியாவில் ஏற்கனவே சியோமி மி டிவி 4ஏ 32-இன்ச் மற்றும் 43-இன்ச் சாதனங்கள் விற்பனை செய்யப்படுகிறது. தற்சமயம்அதே டிவியின் 60-இன்ச் மாடல் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த 60-இன்ச் மாடல் 4கே எல்சிடி பேனலை கொண்டுள்ளது, பின்பு மெல்லிய பெசல்கள் மற்றும் 64-பிட் அம்லோஜிக் ப்ராசஸர் வசதி இதில் உள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

16ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன்

வெளிவந்த சியோமியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் படி இந்த 60-இன்ச் மாடல் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்கமெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த டிவி மாடலில் பேட்ச்வால் ஓஎஸ்இ சியாஏஐ உள்ளமைக்கப்பட்ட வாய்ஸ் அசிஸ்டென்ட் உள்ளிட்ட ஆதரவுகளும் உள்ளது.

 60-இன்ச் ஸ்மார்ட் டிவி

இந்த 75-இன்ச் மற்றும் 60-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களில் எச்.டி.எம்.ஐ போர்ட்கள், யூ.எஸ்.பி போர்ட்கள் மற்றும் ஏ.வி இன்புட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது. பின்பு டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ்-எச்டி ஆகிய ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

சியோமி நிறுவனம்

சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 75 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.64,460-ஆகும். பின்பு 60-இன்ச்மி டிவி 4ஏ மாடலின் விலை ரூ.21,480-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi launches 75-inch 4K TV and 60-inch Mi TV 4A And More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X