மலிவு விலையில் அட்டகாசமான 2 சியோமி பவர் பேங்குகள் அறிமுகம்.!

|

சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளராணா சியோமி இந்தியாவில் அதன் இரண்டு பவர் பேங்குகளை அறிமுகம் செய்துள்ளது. 20000எம்ஏஎச் மி பவர்பேங்க் 2ஐ மற்றும் 10000எம்ஏஎச் மி பவர்பேங்க் 2ஐ என்ற எந்த இரண்டு பவர் பேங்குகளும்,நிறுவனத்தின் நொய்டா ஆலையில் மேட் இந்தியா திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

10000எம்ஏஎச் மி பவர்பேங்க் 2ஐ ஆனது ரூ.799/- என்றும், 20000எம்ஏஎச் மி பவர்பேங்க் 2ஐ ஆனது ரூ.1,499/- என்ற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளன. டிசம்பர் முதல் நாட்டின் அமேசான், ஃப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும் மற்றும் நவம்பர் 23-ஆம் தேதி தொடங்கி இந்த சாதனம் மி.காம் வலைத்தளத்தில் வாங்க கிடைக்கும்.

நிமிடத்திற்கு 7 பவர் பேங்குகள்

நிமிடத்திற்கு 7 பவர் பேங்குகள்

இந்த பவர் பேங்குகளின் உற்பத்திப் பணிகளின் 9 நிலைகள் மற்றும் ஆய்வு 3 நிலைகள் வழியாக செல்கிறது என்று நிறுவனம் கூறுகிறது. மேலும் தயாரிப்பாளரின்படி, ஒரு நிமிடத்திற்கு 7 பவர் பேங்குகள் தயாரிக்கப்படுகின்றது.

இரட்டை யூஎஸ்பி அவுட்புட்

இரட்டை யூஎஸ்பி அவுட்புட்

10000எம்ஏஎச் மி பவர்பேங்க் 2ஐ ஆனது இரட்டை யூஎஸ்பி அவுட்புட் மற்றும் இரண்டு வழியிலான பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்டுள்ளது. இதன் பொருள், ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும். மேலும் இந்த சாதனம் அல்ட்ரா மெல்லிய, இலகுரக வடிவமைப்பை கொண்டுள்ளது ஆகையால் இதை சுலபமாக எங்கும் கொண்டு செல்ல முடியும்.

90% க்கும் அதிகமான மாற்று விகிதம்

90% க்கும் அதிகமான மாற்று விகிதம்

இந்த 10000எம்ஏஎச் மி பவர்பேங்க் 2ஐ ஆனது 6500எம்ஏஎச் என்கிற உண்மையான வெளியீட்டு திறனை கொண்டுள்ளது மற்றும் 90% க்கும் அதிகமான மாற்று விகிதத்தையும் வழங்குகிறது. இதனை மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்ளெட்களை இணைக்கவும் மற்றும் சார்ஜ் செய்யவும் முடியும்

பாஸ்ட் சார்ஜ் 3.0

பாஸ்ட் சார்ஜ் 3.0

மறுகையில் உள்ள 20000எம்ஏஎச் மி பவர்பேங்க் 2ஐ ஆனதும் இரட்டை யூஎஸ்பி வெளியீட்டை ஆதரிக்கிறது மேலும் இதுவும் ஸ்மார்ட்போன்கள், டாப்ளெகள் மற்றும் மடிக்கணினிகளை சார்ஜ் செய்யும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒற்றை போர்ட் ஆனது பாஸ்ட் சார்ஜ் 3.0-ஐ ஆதரிக்கிறது என்று நிறுவனம் கூறுகிறது.

மி எக்ஸ்சேன்ஜ் திட்டம்

மி எக்ஸ்சேன்ஜ் திட்டம்

சமீபத்தில் சியோமி நிறுவனமானது, கேஷிப்பை உடன் இணைந்து ஒரு பரிமாற்றத் திட்டத்தை தொடங்கியதும் இங்கு குறிப்பிடத்தக்கது, இந்த பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, பழைய கருவிகளை எக்ஸ்சேன்ஜ் செய்து சியோமி ஸ்மார்ட்போன்களை நாட்டில் உள்ள எந்தவொரு மி ஹோம் ஸ்டோரிலும் வாங்கிக்கொள்ள முடியும்

Best Mobiles in India

English summary
Xiaomi launches 10000mAh and 20000mAh Mi Powerbank 2i in India, price starts at Rs 799. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X