புதிய எம்ஐ ஃப்ளெக்ஸ் போன் கிரிப் அறிமுகம் செய்த சியோமி! விலை என்ன தெரியுமா?
சியோமி நிறுவனம் புதிய எம்ஐ ஃப்ளெக்ஸ் போன் கிரிப்(Mi Flex Phone Grip) என்ற போன் கிரிப்பர் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

தற்பொழுது இந்த போன் கிரிப்பர் சாதனம் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த கிரப்பரின் விலை மற்றும் முழு விபரத்தை மேற்கொண்டு பார்க்கலாம்.

இனி ஒரு கையில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தலாம்
தற்போதைக்கு காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் பெரிய ஸ்கிரீன் உடன் பெரிய தோற்றத்தில் வருகின்றது, ஒரு கையில் பிடித்துப் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இல்லாமல் போய்விட்டது. போன்களை கையிலிருந்து தவறவிடாமல் இருப்பதற்காகவும், ஒரு கையில் எளிதாகப் பிடித்து பயன்படுத்துவதற்காகவும் சியோமி நிறுவனம் இந்த புதிய கிரிப்பரை அறிமுகம் செய்துள்ளது.

உறுதியான 3M அட்ஹெசிவ் ஸ்டர்டி TPU
இந்த எம்ஐ ஃப்ளெக்ஸ் போன் கிரிப்பர் உறுதியான 3M அட்ஹெசிவ் ஸ்டர்டி TPU(strong adhesive sturdy TPU) பொருளைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கிரிப்பர் 3 அட்ஜஸ்ட் லெவல் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

3 அட்ஜஸ்ட் லெவல்ஸ்
இந்த எம்ஐ ஃப்ளெக்ஸ் போன் கிரிப்பரை போனின் பின்பக்கத்தில் ஒட்டி பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் 3 அட்ஜஸ்ட் லெவல் கொடுக்கப்பட்டுள்ளதால் பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் கையிலிருந்து போன் தவறிவிடும் என்ற பயம் இல்லாமல் ஒரு கையில் இனி ஈஸியா மொபைல் பயன்படுத்தலாம்.

விலை
இந்த கிரிப்பர், பிளாக், ப்ளூ மற்றும் ரெட் என 3 நிறத்தில் மேட் பினிஷ் உடன் சியோமியின் அதிகாரப்பூர்வ Mi.com வலைத்தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த எம்ஐ ஃப்ளெக்ஸ் போன் கிரிப்பர் வெறும் ரூ.149 என்ற விலையில் விற்பனையாகு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications