Xiaomi டபுள் ஆக்டிங்.. புது Mijia Fan Light சாதனம்.. ஒரே சாதனத்தில் 2 டிவைஸ்.. இனி மின்சார செலவு ரொம்ப கம்மி..
சியோமி (Xiaomi) நிறுவனம் புதிதாக சியோமி மிஜியா ஃபேன் லைட் (Xiaomi Mijia Fan Light) என்ற 2-இன்-1 ஸ்மார்ட் கேட்ஜெட்ஸ் சாதனத்தை சீனாவில் உருவாக்கத் துவங்கியுள்ளது. இதன் சிறப்பம்சம் என்ன? இதன் விலை என்ன? இதன் முழு விபரம் இதோ.
சியோமி கிரௌட்ஃபண்டிங் மூலம் உருவாக்கும் புதிய ஸ்மார்ட் கேட்ஜெட்ஸ் (Smart Gadgets) சாதனம் தான் இந்த சியோமி மிஜியா ஃபேன் லைட் (Xiaomi Mijia Fan Light) டிவைஸ். இதன் பெயர் குறிப்பிடுவது போல, இந்த புதிய மிஜியா ஃபேன் லைட் சாதனம் ஒரே சாதனத்தில் சீலிங் லைட் (ceiling light) மற்றும் சீலிங் ஃபேன் (ceiling fan) பயன்பாட்டை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி மிஜியா ஃபேன் லைட் (Xiaomi Mijia Fan Light):
எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல ஒரு முழுமையான சாதனத்தில் வெவ்வேறு விதமான 2 பயன்பாட்டை இந்த மிஜியா ஃபேன் லைட் (Mijia Fan Light) சாதனம் வழங்குகிறது. இந்த மிஜியா ஃபேன் லைட் சாதனத்தில் உள்ள லைட் முழு ஸ்பெக்ட்ரம் வெளிச்சத்தை இயற்கையான சூரிய வெளிச்சம் போன்று வழங்குகிறது. இதனால், உங்கள் கண்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று சியோமி கூறியுள்ளது.
அடுத்தபடியாக, இந்த சியோமி மிஜியா ஃபேன் லைட் சாதனத்தில் உள்ள சீலிங் ஃபேன் அமைப்பை நீங்கள் உற்று கவனித்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். காரணம், இந்த ஃபேன் இறக்கைகள் டிரான்ஸ்பரென்ட் பிளேடுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஃபேனின் சிறப்பம்சம் என்னவென்றால், இது இயற்கையான காற்றை வழங்கும்படி டிசைன் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஃபேன் பிளேடுகள் போல் இல்லாமல், இது தனித்துவமான வடிவமைப்பை பெற்றுள்ளது.
இந்த மிஜியா ஃபேன் லைட் சாதனம் இயற்கை காற்றின் உணர்வை (natural wind sensation) வழங்குகிறது. இது யாரும் எதிர்பார்த்திடாத மூன்று வகை ப்ரீ-செட் மோட்களை கொண்டுள்ளது. இதில் லேக்சைட் (lakesides), ஆர்ச்சர்ட்ஸ் (orchards) மற்றும் கேம்ப்கிரௌண்ட் (campgrounds) போன்ற அவுட்டோர் என்விரான்மெண்ட் காற்று மோட்கள் கிடைக்கிறது. ஒவ்வொரு மோடிற்கும் ஏற்றார் போன்ற காற்று விசிறி அனுபவத்தை இந்த சாதனம் வழங்குகிறது.

மிகவும் குறைவான மின்சார கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
இது பயனர்களை பல விதமான காற்றோட்டத்தை அனுபவிக்க செய்து, சாந்தம் அடைய செய்கிறது. இந்த மிஜியா ஃபேன் லைட் சாதனம் பிரத்தியேகமான ஸ்லீப் மோட் அம்சத்தையும் ஆதரிக்கிறது. இந்த அம்சம் பயனர்களின் உடல் உஷ்ணத்திற்கு ஏற்றார் போல காற்றை வழங்கும் படி ஸ்மார்ட்டாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஃபேன் மிகவும் அமைதியாக செயல்படுகிறது. இது வெறும் 32 டெசிபெல் சத்தத்தை மட்டுமே உருவாக்குகிறது என்று சியோமி தெரிவித்துள்ளது.
இந்த சியோமியின் Mi Home app மூலம் இயக்க அனுமதிக்கும் ஸ்மார்ட் கனெக்டிவிட்டி அம்சத்தையும் கொண்டுள்ளது. இது சியோமியின் ஹைப்பர் ஓஎஸ் கனெக்ட் (Xiaomi's HyperOS Connect) அம்சத்தையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனம் புதிய தொழில்நுட்ப DC மோட்டார் உடன் இயங்குகிறது. இதை 8 மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தினாலும் வெறும் 93 பைசா தான் செலவாகும் என்று கூறியுள்ளது.
இந்த சியோமி மிஜியா ஃபேன் லைட் சாதனத்தின் விலை பற்றி பேசுகையில், இது இந்திய மதிப்பில் வெறும் ரூ. 6329 விலையை நெருங்குகிறது. இந்த சாதனத்தை மே 9, 2024 ஆம் தேதி முதல் சியோமி சீனாவில் விற்பனைக்கு வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு இந்த சாதனம் இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








