வீட்டுக்குள்ள தியேட்டர்.. 55-இன்ச் TVகளை ஓரங்கட்டும் விலையில் புதிய 85-இன்ச் டிவி அறிமுகம்.. என்ன மாடல்?
43-இன்ச், 55-இன்ச் அளவிலான ஸ்மார்ட் டிவி மாடல்களை எல்லாம் ஓரங்கட்டும் விலையில் சீன நிறுவனமான ஷாவ்மீ, 85-இன்ச் அளவிலான ஸ்க்ரீன் சைஸ் கொண்ட புதிய ஸ்மார்ட் டிவியொன்றை அறிமுகம் செய்துள்ளது. அதென்ன மாடல்? அதன் விலை என்ன? என்னென்ன அம்சங்களை வழங்குகிறது? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ஷாவ்மீ டிவி ஏ ப்ரோ 85 (Xiaomi TV A Pro 85) மாடலை பற்றித்தான். ஷாவ்மீயின் லேட்டஸ்ட் பிக் ஸ்க்ரீன் ஸ்மார்ட் டிவியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மாடல் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 85-இன்ச் ஹை-பிரஷ் ஸ்க்ரீனை (85-inch High-brush Screen) கொண்டுள்ளது.

மேலும் இந்த ஷாவ்மீ ஸ்மார்ட் டிவி இஎம்எம்சி மோஷன் காம்பென்ஷேஷனையும் (EMMC motion compensation) வழங்குகிறது, இது கால்பந்து மற்றும் பிற விளையாட்டுகளுக்கான மென்மையான வீடியோ அவுட்புட்டை (Smooth Video Output) வழங்குகிறது. இந்த ஸ்மார்ட் டிவியின் 85-இன்ச் ஸ்கீன் ஒரு 4கே பேனலாகும் (4K Panel). அதாவது இதற்கு முன் வந்த மாடலை விட 10 இன்ச் பெரியதாக உள்ளது.
இதன் டிஸ்பிளே 3840 x 2160 பிக்சல்ஸ் ரெசல்யூஷனை கொண்டுள்ளது மற்றும் காம்ப்பெடிட்டிவ் மோட்-ஐ (Competitive mode) ஆக்டிவேட் செய்யும் போது இது அதிகபட்ச 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்-ஐ வழங்குகிறது. ஷாவ்மீ நிறுவனத்தின் கூற்றுப்படி, டிவி ஏ ப்ரோவின் ஸ்க்ரீன் ஆனது கடுமையான மற்றும் சிறந்த கலர் காலிப்ரேஷன் சோதனைக்கு (Color Calibration Test) உட்பட்டுள்ளது.
1.07 பில்லியன் கலர்களை ஆதரிக்கும் இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்பிளேவானது குறுகிய பெஸல்களுடன் வருவதால், இதையொரு ஃபுல்-ஸ்க்ரீன் டிசைன் (Full-screen design) என்றே கூறலாம். சவுண்ட் அவுட்புட்டை பொறுத்தவரை, இது டிடிஎஸ் சவுண்ட் என்கோட்டிங்கிற்கான ஆதரவு (DTS sound encoding) உடன் இரண்டு 10வாட் ஹை-பவர் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் (10W high-powered stereo speakers) வருகிறது.
இரண்டு எச்டிஎம்ஐ (HDMI) போர்ட்கள் உள்ளன, இரண்டு யூஎஸ்பி (USB) இன்டர்பேஸ், ஒரு நெட்வொர்க் போர்ட் (Network Port) மற்றும் ஒரு எஸ்/பிடிஐஎஃப் (PDIF) இன்டர்பேஸ் உடன் வரும் இந்த ஸ்மார்ட் டிவியில் சிங்கிள் ஏவி இன்டர்பேஸும் (Single AV Interface) உள்ளது. இந்த புதிய ஷாவ்மீ டிவி ஏ ப்ரோ 85-இன்ச் மாடல் ஆனது மேம்படுத்தப்பட்ட லோவர் ஃப்ரேம் சிஸ்டம் (Lower Frame System) உடனான 96.5% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோவை (Sceen- to body ratio) கொண்டுள்ளது.
குவாட்-கோர் கோர்டெக்ஸ்-ஏ55 சிபியு (Quad-core Cortex-A55 CPU) உடன் வரும் இந்த ஷாவ்மீ டிவியானது 3ஜிபி ரேம் / 32ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மேலும் இந்த மாடல் டூயல்-பேண்ட் வைஃபை (Dual-band WiFi) மற்றும் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களையும் ஆதரிக்கிறது.
என்ன விலை? சீன சந்தையில் ஷாவ்மீ டிவி ஏ ப்ரோ 85-இன்ச் ஸ்மார்ட் டிவியானது 5999 யுவான், அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.68,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஷாவ்மீ மால் வழியாக வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட் டிவியின் உலகளாவிய அறிமுகம் (Global Launch) குறித்து எந்த தகவல்களும் இல்லை. அதுகுறித்த தகவல் கிடைக்கும் போது, அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.
நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் ஷாவ்மீயின் மிகப்பெரிய டிவிக்களாக இரண்டு 65-இன்ச் மாடல்கள் மட்டுமே வாங்க கிடைக்கின்றன. ஒன்று - 2023 எடிஷன் ஷாவ்மீ ஸ்மார்ட் டிவி எக்ஸ் 65-இன்ச் மாடல் ரூ.61,999 க்கு வாங்க கிடைக்கிறது. இரண்டாவது - ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்65, இந்த மாடலின் விலை ரூ.55,999 ஆகும்.


Click it and Unblock the Notifications








