Home
Gadgets

சியோமி அறிமுகம் செய்யும் அசத்தலான இயர்போன்கள்.!

ஆப்பிள் ஏர்பாட்ஸ் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த இயர்போனை சார்ஜ் செய்ய யூஎஸ்பி டைப் சி கனெக்டர் ஒன்றும் இணைக்கப்படும்.

உலகம் முழுவதும் மொபைல் போன் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் சியாமி நிறுவனம் விரைவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட் போன்றே வயர்லெஸ் இயர்போன் மாடல் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. மீ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த இயர்போன் மாடல் FCCயில் அறிமுகம் செய்ய பட்டியல் இடப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி அறிமுகம் செய்யும் அசத்தலான இயர்போன்கள்.!

ஆப்பிள் ஏர்பாட்ஸ் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த இயர்போனை சார்ஜ் செய்ய யூஎஸ்பி டைப் சி கனெக்டர் ஒன்றும் இணைக்கப்படும். இந்த சாதனம் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்றாலும் மிக விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த சில மாதங்களில் சாம்சங் நிறுவனம் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் ஆப்பிள் ஏர்பாட் வடிவில் இயர்போன்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக சாம்சங் நிறுவனம் கியர் ஐகான் எக்ஸ் என்ற சாதனத்தையும், சீன நிறுவனமான ஓப்போ 'ஓ ஃப்ரீ இயர்போன்' மாடலையும் ரிலீஸ் செய்துள்ளன. இந்தியாவில் சாம்சங் கியர் ஐகான் எக்ஸ் என்ற சாதனம் ரூ.13990 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்டேண்ட்லோன் மியுசிக் சிஸ்டத்தில் உருவாகியுள்ள இந்த இயர்போன் 4ஜிபி ஸ்டோரேஜை கொண்டது.

இந்த சாதனைத்தை மொபைல் போனில் இணைக்காமலேயே நமது விருப்பத்திற்குரிய பாடல்களை கேட்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாடல்களை வயர்லெஸ் மூலமோ அல்லது யூஎஸ்பி கேபிள் மூலம் கனெக்ட் செய்து மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டர் மூலமோ கேட்கலாம். மேலும் இந்த சாதனத்தில் ப்ளே, பாஸ், ஸ்கிப், போன்ற வசதிகள் உண்டு.

சியோமி அறிமுகம் செய்யும் அசத்தலான இயர்போன்கள்.!

மேலும் இந்த கியர் ஐகான் எக்ஸ் இயர்போன் மிக வேகமாக சார்ஜ் ஏற்றும் வகையில் உறுதியான பேட்டரிகளை கொண்டது. இந்த பேட்டரி தொடர்ச்சியாக ஐந்து முதல் ஏழு மணி நேரம் இசையை ரசிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி தேவைப்படும் சமயத்தில் இந்த கியர் ஐகான் எக்ஸ், பவர்பேங்க் ஆகவும் உதவுகிறது.

சியோமி அறிமுகம் செய்யும் அசத்தலான இயர்போன்கள்.!


அதேபோல் ஓப்போவின் 'ஓ ப்ரீ' இயர்போனும் வயர்லெஸ் தன்மையுடன் குவால்கோம் QCC3026 சிப்செட்டை கொண்டது. இந்த சாதனத்திலும் தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் இசையை ரசிக்கலாம். 12 மணி நேரம் பேட்டரியின் லைப் இருக்கும் என்பதால் இந்த சாதனத்திற்காக சார்ஜரை கையுடன் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இதில் இருக்கும் இன்னொரு சிறப்பு வசதி என்னவெனில் கூகுள் பிக்சல் பட்ஸை போலவே வாய்ஸ் டிரான்ஸ்லேஷன் வசதியும் இதில் உண்டு. அதேபோல் வாய்ஸ் அசிஸ்டெண்ட் மற்றும் மியூசிக் கண்ட்ரோல் வசதிகளும் இதில் உண்டு

Best Mobiles in India

English summary
Xiaomi to launch Apple AirPod-like earphones soon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X