இனி 100 இன்ச் டிவி தேவையில்லை.. டால்பி ஆடியோ.. 120 இன்ச்.. 64ஜிபி மெமரி.. புதிய Xiaomi ப்ரொஜெக்டர் அறிமுகம்..
சியோமி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட்டில் விலையில் தரமான அம்சங்களுடன் சாதனங்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சியோமி நிறுவனம் புதிய சியோமி லேசர் ப்ரொஜெக்டர் 3 (Xiaomi Laser Projector 3) மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
சியோமி லேசர் ப்ரொஜெக்டர் 3 அம்சங்கள் (Xiaomi Laser Projector 3 Specifications): இந்த புதிய ப்ரொஜெக்டர் ஆனது நேட்டிவ் 4கே ரெசல்யூஷன் (native 4K resolution) ஆதரவுடன் இந்த புதிய சியோமி ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் 0.47-இன்ச் DMD சிப் கொண்ட உயர்-டிரான்ஸ்மிட்டன்ஸ் லென்ஸைப் பயன்படுத்துகிறது.

குறிப்பாக இந்த சியோமி லேசர் ப்ரொஜெக்டர் 3 ஆனது 120 இன்ச் ஸ்க்ரீன் சைஸ் (120 inch Screen Size) கொடுக்கும். எனவே 85 இன்ச், 120 இன்ச் ஸ்மார்ட் டிவிகளை வாங்க அவசியம் இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடலே பெரிய திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
1000 CVIA லுமன்ஸ் பிரைடன்ஸ் வசதியைக் கொண்டுள்ளது இந்த சியோமி லேசர் ப்ரொஜெக்டர் 3 மாடல். மேலும் இது BT.2020 கலர் காமட் (Color Gamut) ஆதரவைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த புதிய சியோமி ப்ரொஜெக்டர் ஆனது ப்யூர் ட்ரை கலர் லேசர் லைட் (tri-color laser light) அம்சத்தை பயன்படுத்துகிறது. எனவே இதன் அவுட்புட் தரமாக இருக்கும் என்றே கூறலாம்.
1600:1 கான்ட்ராஸ்ட் ரேசியோ (1600:1 contrast ratio) மற்றும் எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஆதரவுகளுடன் இந்த புதிய சியோமி லேசர் ப்ரொஜெக்டர் 3 மாடல் வெளிவந்துள்ளது. பின்பு எச்டிஆர் 10 (HDR10) மற்றும் எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+) ஆதரவுகளையும் கொண்டுள்ளது இந்த அட்காசமான ப்ரொஜெக்டர் மாடல்.
அதேபோல் சியோமி லேசர் ப்ரொஜெக்டர் 3 மாடலில் 130 டிகிரி வரை ஆங்கிள் ப்ரொஜெக்ஷன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய முடியும். மேலும் கிம்பல் அமைப்புடன் இந்த சியோமி சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
மீடியாடெக் எம்டி9667 குவாட்-கோர் சிப்செட் வசதியுடன் சியோமி லேசர் ப்ரொஜெக்டர் 3 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியுடன் சியோமி லேசர் ப்ரொஜெக்டர் 3 மாடல் வெளிவந்தது. ஹைப்பர் ஓஎஸ் கனெக்ட் (HyperOS Connect) மற்றும் Xiao AI அசிஸ்டண்ட் ஆதரவுகளும் இந்த புதிய ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட 4கே அல்ட்ரா-ஹை-டெஃபனிஷன் வீடியோ பிளேபேக்கையும் ஆதரிக்கிறது இந்த புதிய ப்ரொஜெக்டர் மாடல். எனவே திரைப்படங்கள் மற்றும் கேமிங் இரண்டிற்கும் ஏற்றது இந்த புதிய சாதனம். SGS லோவ் ப்ளூ லைட் சர்டிஃபிகேஷன் பெற்றுள்ளது சியோமி லேசர் ப்ரொஜெக்டர் 3 மாடல்.

ஆடியோவைப் பொறுத்தவரை, இந்த ப்ரொஜெக்டர் டூயல் 8W ஸ்பீக்கர்கள் உடன் வெளிவந்துள்ளது. மேலும் டால்பி ஆடியோ மற்றும் டிஜிட்டல் ஹை-ஃபை ட்யூனிங் உள்ளிட்ட ஆடியோ அம்சங்களும் இந்த சாதனத்தில் உள்ளன. எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் சியோமி லேசர் ப்ரொஜெக்டர் 3 மாடலில் உள்ளன.
ஆனால் தற்போது சியோமி லேசர் ப்ரொஜெக்டர் 3 மாடல் சீனாவில் JD.com தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ப்ரொஜெக்டர் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த புதிய சியோமி ப்ரொஜெக்டரின் விலை 4399 yuan (இந்திய மதிப்பில் ரூ.52,391) ஆகும்.


Click it and Unblock the Notifications








