சியோமி: புதிய மி பேண்ட், ஏர் ப்யூரிஃபையர், செக்யூரிட்டி கேமரா, ஸ்மார்ட் டிவி, சூட்கேஸ் அறிமுகம்.!
செப்டம்பர் 27 ம் தேதி பெங்களூரு இல் நடைபெறவிருக்கும் சியோமி நிகழ்ச்சியில் சியோமி இன் புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
செப்டம்பர் 27 ம் தேதி பெங்களூரு இல் நடைபெறவிருக்கும் சியோமி நிகழ்ச்சியில் சியோமி இன் புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய ஸ்மார்ட் ஹோம் தயாரிப்புகளை, தீபாவளி கொண்டாட்டத்திற்கு முன்னதாக அறிமுகப்படுத்த உள்ளதாகவும் சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.

"ஸ்மார்ட்டர் லிவிங்"
சியோமி நிறுவனம் ஏற்கனவே "ஸ்மார்ட்டர் லிவிங்" என்ற தீம் இல் தனது சமர்ட் ஹோம் தயாரிப்புகளை தயாரிக்கத் துவங்கிவிட்டதினால், இந்த நிகழ்ச்சியில் தனது ஸ்மார்ட் லிவிங் ஹோம் தயாரிப்புகளை அறிமுகப் படுத்துமென்று உறுதிப்பட தெரிகிறது. சியோமி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் செப்டம்பர் 27,2018 சியோமி இன் ஸ்மார்ட் லிவிங் நிகழ்ச்சி பெங்களூரு இல் நடைபெறுமென்ற அறிவிப்பை அறிவித்திருக்கிறது.
மி பேண்ட் 3
இந்த நிகழ்ச்சியில் நிச்சயம் சியோமி இன் புதிய பிட்னெஸ் பேண்ட் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி நிறுவனத்தின் மி பேண்ட் 3 பற்றிய நிறைய லீக்ஸ்கள் வெளிவந்தாலும் அதன் விபரக்குறிப்புகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த விழாவில் நிச்சயம் மி பேண்ட் 3 வெளியிடப்படும் என்று மனு குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன் உடன் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து டிவீட் செய்திருக்கிறார். இந்த புதிய மி பேண்ட் 3 இதில் இதயத் துடிப்பு சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர் ப்யூரிஃபையர்
சியோமி நிறுவனம் ஏற்கனவே ஏர் ப்யூரிஃபையரை இந்தியாவில் அறிமுகம் செய்து நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்திய சந்தையில் "மி ஏர் ப்யூரிஃபையர்" என்ற பெயரில் இந்தச் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் தொடர்ந்து தனது அடுத்த புது ஏர் ப்யூரிஃபையர் "மி ஏர் ப்யூரிஃபையர் 2எஸ்" ஐ தீபாவளி முன்பு அறிமுகப்படுத்தவுள்ளது. இதனுடைய அறிமுகம் பற்றியும் சியோமி டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கேமரா
சியோமி இன் ஐஓடி(IOT) செயல்படுத்தப்பட்ட செக்யூரிட்டி கேமரா, இது 360 டிகிரி வீடியோக்களை கைப்பற்றும் திறன் கொண்டது. சியோமி மி முகப்பு ஸ்மார்ட் கேமராவாக இதனை சியோமி நிறுவனம் விழாவில் அறிமுகம் செய்யவுள்ளது. மோட்டாரைஸ்டு ஸ்விவேலிங் வசதி உடைய இந்த ஸ்மார்ட் கேமராகள் 360 டிகிரி இல் சுழன்று புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை 20fps உடைய 1080p வீடியோக்களாக பதிவு செய்யும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட் டிவி
சியோமி நிறுவனம் ஏற்கனவே மி டிவி 4 சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளை இந்திய சந்தையில் வெளியிட்டது, அதனைத் தொடர்ந்து தனது புதிய மி டிவி 4எஸ் ஸ்மார்ட் டிவியை இந்த அந்நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யுமென்று சியோமி நிறுவனம் டிவீட் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் டிவி 55 இன்ச் கொண்ட 4K எச்டிஆர் சேவை உடைய ஏ.ஐ வாய்ஸ் ரிமோட் உடன் அறிமுகம் செய்யப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி டிவிட்டர்
அண்மையில் சியோமி டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு புகைப்படத்தில் மறைந்திருக்கும் ஸ்மார்ட் சாதனைகளை கண்டுபிடிக்கும் படி சியோமி நிறுவனம் சொல்லி இருந்தது. அந்தப் புகை படத்தில் ட்ராவலிங் சூட்கேஸ் இருப்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சியோமி மி யின் சூட்கேஸ் இந்த நிகழ்ச்சியின் பொது அறிமுகம் செய்யப்படும் என்று ஏதிர்பார்க்கப்டுகிறது.
சியோமி நிகழ்ச்சி
இந்த அந்நிகழ்ச்சி பற்றிய விபரங்கள்மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கிறது, சியோமி இன் புதிய தயாரிப்புகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விலை பட்டியல் பற்றிய விபரங்கள் இன்னும் நமக்கு கிடைக்வில்லை. இருப்பினும் சியோமி இன் நிகழ்ச்சிக்கு வெறும் 6 நாட்களே உள்ள நிலையில், சியோமி யின் அடுத்த அறிவிப்பு வரும் வரை காத்திருக்கலாம்.


Click it and Unblock the Notifications