பட்ஜெட் விலையில் 32-இன்ச் சியோமி மி எல்டி 4ஏ ப்ரோ ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!
32-இன்ச் மி எல்டி 4ஏ ப்ரோ ஸ்மார்ட் டிவி 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
சியோமி நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது, அதன்படி இன்று சியோமி ரெட்மி நோட் 7, நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ததை, தொடர்ந்து 32-இன்ச் மி எல்டி 4ஏ ப்ரோ மற்றும் ப்ளூடூத் இயர்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.

குறிப்பாக இந்த சாதனங்கள் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும். இப்போது சியோமி ஸ்மார்ட் டிவியின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
சியோமி 32-இன்ச் மி எல்டி 4ஏ ப்ரோ மாடல் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1366 x 768 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செயலி:
புதிய சியோமி டிவி குவாட்-கோர் Amlogic கார்டெக்ஸ்- ஏ53 உடன் 750ஆர்ண மாலி-450 எம்பி ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்ட 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

மெமரி:
32-இன்ச் மி எல்டி 4ஏ ப்ரோ ஸ்மார்ட் டிவி 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கூகுள் பிளே
ஸ்டோரில் கிடைக்கும் பல்வேறு செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.'

ஆடியோ:
32-இன்ச் மி எல்டி 4ஏ ப்ரோ சாதனத்தில் 20-வாட் ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளது, அதேசமயம் இந்த சாதனம் பேட்ச்வால் தொழில்நுட்ப ஆதரவுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்-விலை:
புதிய சியோமி சாதனத்தில் வைஃபை 802.11, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈத்தர்நெட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் இவற்றுள் அடக்கம். பின்பு மி.காம், பிளிப்கார்ட் போன்ற வலைதளங்களில் இந்த ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியோமி 32-இன்ச் மி எல்டி 4ஏ ப்ரோ மாடலின் விலை ரூ.12,999-ஆக இருக்கிறது. சியோமி ப்ளூடூத் இயர்போன் விலை ரூ.1,499-ஆக இருக்கிறது.


Click it and Unblock the Notifications