இந்தியர்களுக்கு விபூதி அடித்த சியோமி; தான் சீனா கம்பெனி என்பதை நிரூபித்தது.!
ஸ்மார்ட்போன்களை மட்டுமின்றி பேண்ட் முதல் பேக்பாக் வரை, அதன் அனைத்து தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
சூப்பர் பட்ஜெட் விலை நிர்ணயம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் தொடங்கி, பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் வரை, அனைத்து வகையான மக்களுக்கும், அனைத்து வகையான ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு, இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை மிகவும் வெளிப்படையாக ஆட்சி புரியும் ஒரு சீன நிறுவனம் தான் - சியோமி.
ஸ்மார்ட்போன்களை மட்டுமின்றி பேண்ட் முதல் பேக்பாக் வரை, அதன் அனைத்து தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலைப்பாட்டில், சியோமி நிறுவனம் அதன் இந்திய சந்தையில் சத்தமில்லாமல் ஒரு வேலையை பார்த்துள்ளது.

முன்னர் ரூ.799/-க்கு விற்பனை செய்யப்பட்டது.!
அதாவது, இந்தியாவில் விற்பனையாகும் சியோமி நிறுவனத்தின் 'மேக் இன் இந்தியா' பவர் பேங்குகளின் விலை திடீர்ரென உயர்த்தப்பட்டுள்ளது. முன்னர் ரூ.799/-க்கு விற்பனை செய்யப்பட்ட சியோமி நிறுவனத்தின் 10000mAh Mi Power Bank 2i ஆனது, ரூ.100/- உயர்த்தப்பட்டு, இப்போது ரூ.899/-க்கு விற்பனையாகிறது.

திடீர் விலை உயர்வுக்கான காரணம் தெரியவில்லை.!
மேலும் ரூ.1499/-க்கு விற்பனை செய்யப்பட்ட சியோமி நிறுவனத்தின் 20000mAh Mi Power Bank 2i ஆனது தற்போது ரூ.1599/-க்கு வாங்க கிடைக்கிறது. இப்போது வரையிலாக, இந்த திடீர் விலை உயர்வுக்கான காரணம் தெரியவில்லை. இது இந்திய அரசின் வரிவடிவத்தில் நிகழ்ந்த சமீபத்திய மாற்றங்களின் ஒரு விளைவாக இருக்கக்கூடும் என்று நாங்கள் கருதுகிறோம்.


மலிவான மற்றும் சக்தி வாய்ந்த பவர் பேங்குகளாக இருக்கின்றன.!
வரவிருக்கும் நாட்களில், இது சார்ந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு நிகழலாம். மொத்தத்தில், சியோமி அதன் பவர் பேங்குகளின் விலையை சுமார் ரூ.100/- என்கிற விகிதத்தில் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு பிறகும் கூட, Mi Power Bank 2i பவர் பேங்குகள் தான், சந்தையில் கிடைக்கக்கூடிய மலிவான மற்றும் சக்தி வாய்ந்த பவர் பேங்குகளாக இருக்கின்றன.

நிமிடத்திற்கு 7 பவர் பேங்குகள்
245 கிராம் மற்றும் 358 கிராம் எடை கொண்டுள்ள இந்த பவர் பேங்குகளின் உற்பத்திப் பணிகளின் கீழ், ஒரு நிமிடத்திற்கு 7 பவர் பேங்குகள் தயாரிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. டூயல் யூஎஸ்பி அவுட்புட் 10000எம்ஏஎச் மி பவர்பேங்க் 2ஐ ஆனது டூயல் யூஎஸ்பி அவுட்புட் மற்றும் இரண்டு வழியிலான பாஸ்ட் சார்ஜ் ஆதரவை கொண்டுள்ளது. இதன் பொருள், ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும். மேலும் இந்த சாதனம் அல்ட்ரா மெல்லிய, இலகுரக வடிவமைப்பை கொண்டுள்ளது ஆகையால் இதை சுலபமாக எங்கும் கொண்டு செல்ல முடியும்.

6500எம்ஏஎச் என்கிற உண்மையான வெளியீட்டு திறன்
இந்த 10000எம்ஏஎச் மி பவர்பேங்க் 2ஐ ஆனது 6500எம்ஏஎச் என்கிற உண்மையான வெளியீட்டு திறனை கொண்டுள்ளது மற்றும் 90% க்கும் அதிகமான மாற்று விகிதத்தையும் வழங்குகிறது. இதனை மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்ளெட்களை இணைக்கவும் மற்றும் சார்ஜ் செய்யவும் முடியும் பாஸ்ட் சார்ஜ் 3.0 மறுகையில் உள்ள 20000எம்ஏஎச் மி பவர்பேங்க் 2ஐ ஆனதும் இரட்டை யூஎஸ்பி வெளியீட்டை ஆதரிக்கிறது. உடன் இதுவும் ஸ்மார்ட்போன்கள், டாப்ளெகள் மற்றும் மடிக்கணினிகளை சார்ஜ் செய்யும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றின் படி, இதன் ஒற்றை போர்ட் ஆனது பாஸ்ட் சார்ஜ் 3.0-ஐ ஆதரிக்கிறது.


Click it and Unblock the Notifications