வூட்டு வூட்டுக்கு 2 ஆர்டர்.. வெறும் ரூ.10,574 போதும்.. QLED டிவி.. டால்பி ஆடியோ.. Google TV ஓஎஸ்.. எந்த மாடல்?
இந்தியாவில் இருக்கும் ஸ்மார்ட் டிவி பிரியர்கள் வீட்டுக்கு 2 ஆர்டர் போடும்படியான தள்ளுபடி விலையில் சியோமி நிறுவனத்தின் பட்ஜெட் விலை மாடலான சியோமி ஜி சீரிஸ் 32 இன்ச் கியூஎல்இடி டிவி (XIAOMI G Series 32 inch QLED TV) கிடைக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் உடனடி தள்ளுபடி போக ஆர்டர் செய்து கொள்ளலாம். கியூஎல்இடி டிஸ்பிளே மட்டுமல்லாமல், டால்பி ஆடியோ, கூகுள் டிவி ஓஎஸ் போன்ற பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாத பீச்சர்களையும் கொடுத்து இருக்கிறது.
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2025 (Flipkart Big Billion Days 2025) விற்பனையில் பல்வேறு டிவி மாடல்களுக்கு தள்ளுபடி கிடைக்க இருக்கிறது. செப்டம்பர் 22ஆம் தேதி இந்த விற்பனை தொடங்கி இருக்கிறது. ஆனால், அதற்கு முன்னதாகவே எர்லி டீல்களில் (Early Deals) சியோமி டிவி மாடல்கள் மலிவான விலைக்கு கிடைக்க தொடங்கிவிட்டன.

சியோமி ஜி சீரிஸ் 32 இன்ச் கியூஎல்இடி டிவியின் விலையானது, 55 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.12,499ஆக இருக்கிறது. இந்த விலையில் கூடுதலாக ரூ.1,925 பேங்க் தள்ளுபடி பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.10,574 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த தள்ளுபடியை ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு அல்லது ஆக்சிஸ் கிரெடிட் கார்டு மூலம் பெறலாம்.
இதுபோக ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கும் பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,890 தள்ளுபடி வருகிறது. அதேபோல ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கும் ரூ.1,890 தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், பழைய டிவிகளை எக்ஸ்சேஞ்ச் செய்தால், ரூ.1,099 போனஸ் கொடுக்கப்படுகிறது.
சியோமி 32 இன்ச் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (XIAOMI 32 inch QLED TV Specifications): இந்த டிவி ஜி சீரிஸ் கீழ் L32MB-APIN மாடலாக கிடைக்கிறது. 2025ஆம் ஆண்டு மாடலாக இருப்பதால், ஓஎஸ் உள்ளிட்ட பீச்சர்கள் அப்டேட்டில் கிடைக்கின்றன. பெசல்-லெஸ் டிசைனில் (Bezel-less Design) பிரீமியம் அவுட்புட் கொடுக்கும்படி இருக்கிறது.
32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டி ரெடி (HD Ready) ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் விவிட் பிக்சர் என்ஜின் 2 (Vivid Picture Engine 2) கிடைக்கிறது. மேலும், ஐ கேர் மோட் (Eye Care Mode), டிசிஐ பி3 (DCI P3) வைடு கலர் காமட் கிடைக்கிறது. மேலும், 16.7 மில்லியன் கலர் டெப்த் உள்ளது.
ஆகவே, இந்த பட்ஜெட்டிலும் மிட்-ரேஞ்ச் மாடல்களுக்கு டிஸ்பிளே அவுட்புட் கிடைக்கும். மேலும், குவாண்டம் டாட் டெக்னாலஜி (Quantum Dot Technology) கொடுக்கப்பட்டுள்ளது. டிஸ்பிளே பீச்சர்கள் பக்காவாக இருப்பதால், அதற்கு ஏற்ப ஆடியோ பீச்சர்களை கொடுக்க டால்பி ஆடியோ (Dolby Audio) மற்றும் டிடிஎஸ்: எக்ஸ் (DTS: X) கிடைக்கிறது.
மேலும், டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual X) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சியோமி ஜி சீரிஸ் 32 இன்ச் கியூஎல்இடி டிவில் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி கிடைக்கிறது. கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) மற்றும் பிளே ஸ்டோர் (Play Store) கிடைக்கும்படி கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், ஏ35 குவாட் கோர் (A35 Quad Core) பிராசஸர் மற்றும் பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi) கிடைக்கிறது. பேட்ச்வால் (PatchWall) கிடைக்கிறது. எச்டிஎம்ஐ, யுஎஸ்பி, ஆடியோ ஜாக் மற்றும் ப்ளூடூத் போன்ற வழக்கமாக கிடைக்கும் கனெக்டிவிட்டிகள் கிடைக்கிறது. லோவ் ப்ளூ லைட் மற்றும் டிசி டிம்மிங் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








