Home
Gadgets

ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1.. வெறும் ரூ.11,749 க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

சியோமி நிறுவனத்தில் கியூஎல்இடி டிவி மாடல்கள் மலிவான விலைக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன. இதில் 32 இன்ச் டிவி பிரியர்களை மூக்கில் விரல் வைக்க செய்யும்படியான பட்ஜெட்டில் சியோமி ஜி சீரிஸ் 32 இன்ச் கியூஎல்இடி டிவி (XIAOMI G Series 32 inch QLED TV) வெளியாகியது. இப்போது, பாதிக்கு பாதி தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது.

பிளிப்கார்ட் தளத்தில் 52 சதவீத தள்ளுபடி விலைக்கு சியோமி ஜி சீரிஸ் 32 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (XIAOMI G Series 32 inch QLED Smart Google TV) கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.12,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்குகளின் கார்டுகளுக்கு ரூ.1,250 தள்ளுபடியும் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1.. வெறும் ரூ.11,749 க்கு QLED டிவி!

இதையும் பெற்றால் ரூ.11,749 விலைக்கு இந்த சியோமி ஜி சீரிஸ் 32 இன்ச் கியூஎல்இடி டிவியை வாங்கி கொள்ளலாம். 1 வருட வாரண்ட்டில் வாங்கி கொள்ளலாம். ஜி சிரீஸ் மற்றும் எல்32எம்பி-ஏபிஐஎன் (L32MB-APIN) மாடலின் கீழ் ஆர்டர் செய்து கொள்ளளாம். 2025 எடிஷனாக இருக்கிறது. ஆகவே, லேட்டஸ்ட் டிவி பீச்சர்களை எதிர்பார்க்கலாம்.

சியோமி ஜி சீரிஸ் 32 இன்ச் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (XIAOMI G Series 32 inch QLED TV Specifications): 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை இந்த சியோமி ஜி சீரிஸ் 32 இன்ச் கியூஎல்இடி டிவி கொண்டுள்ளது. ஏ35 குவாட் கோர் (A35 Quad Core) ப்ராசஸர் கொடுக்கப்பட்டு உள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் (Google Assitant) கிடைக்கிறது.

வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (YouTube) உள்ளிட்ட குயிக் அக்சஸ் கிடைக்கிறது. 20W ஆடியோ அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இந்த விலையிலும் டால்பி ஆடியோ (Dolby Audio) மற்றும் டிடிஎஸ் எக்ஸ் (dts X) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

லோவ் ப்ளூ லைட் மோட் (Low Blue Light Mode), டிசி டிம்மிங் (DC Dimming) கொண்ட ஐ கேர் மேட் (Eye Care Mode) கிடைக்கிறது. கிளாரிட்டி மற்றும் ரியாலிசம் கொடுக்க விவிட் பிக்சர் என்ஜின் 2 (Vivid Picture Engine 2) இந்த சியோமி ஜி சீரிஸ் 32 இன்ச் கியூஎல்இடி டிவிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) கியூஎல்இடி (QLED) டிஸ்பிளே கிடைக்கிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு எச்டி ரெடி (HD Ready) ரெசொலூஷன், 178 டிகிரி வியூ ஆங்கிள் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. குவாண்டம் கிளாரிட்டி கொண்ட மாடலாக இந்த சியோமி ஜி சீரிஸ் 32 இன்ச் கியூஎல்இடி டிவி இருக்கிறது. குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast built-in), கிட்ஸ் ப்ரொபைல் (Kids Profile) உள்ளிட்ட கூகுள் டிவி ஓஎஸ் பீச்சர்கள் உள்ளன.

எல்ஏஎன், 2 எச்டிஎம்ஐ போர், 2 யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5 எம்எம் இயர்போன் ஜேக்கை இந்த சியோமி ஜி சீரிஸ் 32 இன்ச் கியூஎல்இடி டிவி கொடுக்கிறது. மேலும், ஏவி இன்புட் உள்ளது. டூயல் பேண்ட் வை-பை மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டிகையும் கொடுத்துள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற மாடலாக இருப்பதால், விற்பனையில் பட்டையை கிளப்புகிறது.

Best Mobiles in India

English summary
XIAOMI G Series 32 inch QLED Smart Google TV with Dolby Audio Get 52 Percent Discount on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X