Home
Gadgets

பிளிப்கார்ட் அதிரும்.. 12499 பட்ஜெட்ல டால்பி ஆடியோ.. கூகுள் டிவி OS.. ஆஃபரில் QLED டிவி.. எந்த மாடல்?

சியோமி நிறுவனத்தின் சியோமி ஜி சீரிஸ் 32 இன்ச் கியூஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 (XIAOMI G Series 32 inch QLED HD Ready Smart Google TV 2025 Edition) மாடல் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் வாங்கக் கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

தற்போது சியோமி ஜி சீரிஸ் 32 இன்ச் கியூஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடலுக்கு 48 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் கிடைக்கும். எனவே இந்த டிவியை ரூ.12,499 விலையில் வாங்கிவிட முடியும்.

பிளிப்கார்ட் அதிரும்.. ஆஃபரில் QLED டிவி.. எந்த மாடல்?

சியோமி ஜி சீரிஸ் 32 இன்ச் கியூஎல்இடி டிவி 2025 அம்சங்கள் (Xiaomi G Series 32 inch QLED Smart Google TV 2025 Specifications): எச்டி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய சியோமி ஜி சீரிஸ் 32 இன்ச் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1366 x 768 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle)உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இதில் உள்ளன.

அதேபோல் விவிட் கலர்ஸ் (vivid colors), குவாண்டம் கிளாரிட்டி (quantum clarity), வைடு கலர் காமட் (Wide Color Gamut) போன்ற தனித்துவமான அம்சங்கள் இந்த சியோமி டிவியில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ஆனது சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவிட் பிக்சர் என்ஜின் 2 (Vivid Picture Engine 2) ஆதரவும் இந்த டிவியில் உள்ளது.

சக்திவாய்ந்த ஏ3 குவாட் கோர்(A35 Quad Core) பிராசஸர் வசதி இந்த புதிய சியோமி டிவியில் உள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது சியோமி ஜி சீரிஸ் 32 இன்ச் கியூஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடல்.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த சியோமி டிவி வெளிவந்துள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) போன்ற ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.

பிளிப்கார்ட் அதிரும்.. ஆஃபரில் QLED டிவி.. எந்த மாடல்?

டால்பி ஆடியோ (Dolby Audio) மற்றும் டிடிஎஸ் (DTS)ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் உடன் இந்த சியோமி ஜி சீரிஸ் 32 இன்ச் கியூஎல்இடி டிவி 2025 மாடல் வெளிவந்தது. மேலும் வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் உடன் இந்த சியோமி டிவி அறிமுகம் செய்யப்பட்டது.

வைஃபை, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், ஏவி இன்புட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சியோமி டிவியில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய சியோமி டிவி கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi G Series 32 inch QLED Smart Google TV 2025 price slashed on Flipkart: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X