சியோமி 4K டிவியை தள்ளுபடி விலையில் வாங்க சரியான நேரம் வந்தாச்சு.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?
சியோமி நிறுவனத்தின் சியோமி 43-இன்ச் எப்எக்ஸ் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி (Xiaomi 43 inch FX Ultra HD 4K Smart LED Fire TV) ஆனது அமேசானில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
தற்போது அமேசான் தளத்தில் சியோமி 43-இன்ச் எப்எக்ஸ் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி மாடலுக்கு 43 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.21,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார் டிவியை ரூ.19999 விலையில் வாங்கிவிட முடியும்.

சியோமி 43-இன்ச் எப்எக்ஸ் 4கே ஸ்மார்ட ஃபயர் டிவி அம்சங்கள் (Xiaomi FX Ultra HD 4K Smart LED Fire TV Specifications): அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே வசதியுடன் சியோமி 43-இன்ச் எப்எக்ஸ் 4கே ஸ்மார்ட ஃபயர் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், எச்டிஅர் 10, (178-degree viewing angle), 1.07 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
பெசல்-லெஸ் டிசைன் (Bezel-Less Design) கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி. அதுவும் இந்த டிவியில்விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine), எம்ஈஎம்சி (MEMC), எச்எல்ஜி (HLG) உள்ளிட்ட தனித்துவமான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ஆனது சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் எச்டி (DTS HD), டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual:X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்கள் இந்த சியோமி ஸ்மார்ட் டிவியில் உள்ளன. மேலும் 24W ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளது. இதுதவிர பல ஆடியோ அம்சங்கள் இந்த சியோமி டிவியில் உள்ளன.
பிக்சர்-இன்-பிக்சர் (Picture-in-Picture) மோட், ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode) உள்ளிட்ட வசதிகளும் இந்த சியோமி 43-இன்ச் எப்எக்ஸ் 4கே ஸ்மார்ட ஃபயர் டிவி மாடலில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசத இந்த சியோமி டிவியில் உள்ளது. குறிப்பாக ஃபயர் டிவி ஓஎஸ் மூலம் இந்த சியோமி டிவி இயங்குகிறது. ஃபயர் டிவி ஓஎஸ் இருந்தாலும், பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட அனைத்து ஓடிடி ஆப்களையும் இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.
வைஃபை, ஏர்பிளே, மிராகாஸ்ட், புளூடூத், எச்டிஎம்ஐ, யுஎஸ்பி, ஆடியோ ஜேக், ஈதர்நெட், ஏவி உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த சியோமி 43 இன்ச் டிவியில் உள்ளது. மேலும் குவாட் கோர் ஏ55 பிராசஸர் அடிப்படையாகக் கொண்டு இந்த சியோமி டிவி வெளிவந்தது. அதுவும் இந்த டிவிக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.


Click it and Unblock the Notifications








