பொங்கலுக்கு எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்.. சியோமி 55 இன்ச் டிவிக்கு விலை குறைப்பு.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?
சியோமி (Xiaomi) நிறுவனத்தின் 55 இன்ச் ஸ்மார்ட் டிவி ஒன்று தற்போது பிளிப்கார்ட் தளத்தில் விலை குறைப்பில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் ஆனது 32ஜிபி மெமரி, டால்பி ஆடியோ, எச்டிஆர் 10 உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் சியோமி எக்ஸ் சீரிஸ் 55 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவிக்கு (Xiaomi FX Series 55 inch 4K Smart Fire TV) விலை குறைக்கப்பட்டு ரூ.30,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பிளிப்கார்ட்டில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் கிடைக்கும். ஆகவே இந்த டிவியை ரூ.28999 விலையில் வாங்கிவிட முடியும்.

சியோமி எக்ஸ் சீரிஸ் 55 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி அம்சங்கள் (Xiaomi FX Series 55 inch 4K Smart Fire TV Specifications): அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே வசதியுடன் சியோமி எக்ஸ் சீரிஸ் 55 இன்ச் 4கே ஸ்மார்ட்ஃபயர் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், எச்டிஅர் 10, (178-degree viewing angle), 1.07 பில்லியன் கலர்ஸ் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz refresh rate), உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
குறிப்பாக பெசல்-லெஸ் டிசைன் (Bezel-Less Design) கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி. அதுவும் இந்த டிவியில் விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine), எம்ஈஎம்சி (MEMC), எச்எல்ஜி (HLG) உள்ளிட்ட தனித்துவமான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ஆனது சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
அதேபோல் டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் எச்டி (DTS HD), டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual:X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்கள் இந்த சியோமி ஸ்மார்ட் டிவியில் உள்ளன. மேலும் 30W ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளது. இதுதவிர பல ஆடியோ அம்சங்கள் இந்த சியோமி டிவியில் உள்ளன.
பிக்சர்-இன்-பிக்சர் (Picture-in-Picture) மோட், ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode) உள்ளிட்ட வசதிகளும் இந்த சியோமி எக்ஸ் சீரிஸ் 55 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி மாடலில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.
அதுவும் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசத இந்த சியோமி டிவியில் உள்ளது. குறிப்பாக ஃபயர் டிவி ஓஎஸ் மூலம் இந்த சியோமி டிவி இயங்குகிறது. ஃபயர் டிவி ஓஎஸ் இருந்தாலும், பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட அனைத்து ஓடிடி ஆப்களையும் இந்த டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குவாட் கோர் ஏ55 பிராசஸர் அடிப்படையாகக் கொண்டு இந்த சியோமி டிவி வெளிவந்தது. அதுவும் இந்த டிவிக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். வைஃபை, ஏர்பிளே, மிராகாஸ்ட், புளூடூத், எச்டிஎம்ஐ, யுஎஸ்பி, ஆடியோ ஜேக், ஈதர்நெட், ஏவி உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த சியோமி 43 இன்ச் டிவியில் உள்ளது.
மேலும் ஸ்மார்ட் ரிமோட் உடன் சியோமி எக்ஸ் சீரிஸ் 55 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








