Home
Gadgets

Xiaomi-யின் மாஸ் மினி ட்ரொன்.. சோனி கேமராவுடன் அட்டகாசமான பட்ஜெட் Drone இதான்.. பறக்கவிட லைசன்ஸ் தேவையில்லையா?

சியோமி (Xiaomi) நிறுவனம் யாரும் எதிர்பார்த்திடாத வகையில் புதிதாக ஒரு பறக்கும் மினி ட்ரொன் கேமராவை அறிமுகம் செய்துள்ளது. இது சியோமி ஃபிமி மினி 3 ட்ரொன் (Xiaomi Fimi MINI 3 Drone) என்ற பெயருடன் வருகிறது. சியோமி தயாரிப்பு பட்டியலில் இல்லாத விஷயங்களே இல்லை என்பது போல, நிறுவனம் தொடர்ந்து பல சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. கையிலிருக்கும் ஸ்மார்ட்போன் முதல், தரையில் ஓடும் எலெக்ட்ரிக் பைக் மற்றும் கார் போன்ற தயாரிப்புகளை தொடர்ந்து இப்போது வானில் பறக்கும் மினி ட்ரொன் வரை எல்லாவற்றையும் தயாரிக்கிறது சியோமி.

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமாக திகழும் ஃபிமி (Fimi) பிராண்ட் கீழ் சியோமி தனது மினி ட்ரொன் (Mini drone) சாதனத்தை ஃபிமி மினி 3 ட்ரொன் (Fimi MINI 3 Drone) என்ற பெயருடன் 4K ரெசொலூஷன் ரெக்கார்டிங் அம்சத்துடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த மினி ட்ரொன் சிங்கிள் சார்ஜில் 32 நிமிடங்கள் வரை பறக்கும் நேரம் (Flight time) கொண்டது.

Xiaomi-யின் மாஸ் மினி ட்ரொன்.. சோனி கேமராவுடன் பட்ஜெட் Drone இதான்..

சியோமி ஃபிமி மினி 3 ட்ரொன் (Xiaomi Fimi MINI 3 Drone):

இதை சியோமி எளிமையான எடுத்துச் செல்லும் வகையில், மினி ஸைஸில் உருவாக்கியுள்ளது. இந்த புதிய ஃபிமி மினி 3 ட்ரொன் (Fimi MINI 3 Drone) சாதனம் டூயல் பேட்டரி மோட் அம்சத்துடனும் வருகிறது. இந்த மினி ட்ரொனில் உள்ள கேமரா சோனி (SONY) நிறுவனத்திடமிருந்து வருகிறது. இது சோனி ½ இன்ச் அளவு கொண்ட 48MP CMOS சென்சாரை கொண்டுள்ளது.

இது 60fps இல் 4K ரெக்கார்டிங்கையும், 8K டைம் லேப்ஸ் வீடியோவை ரெக்கார்ட் செய்ய கூடியது. மிகவும் துல்லியமான வீடியோ கிளாரிட்டிக்காக இதில் 12 டிஜிட்டல் ஜூம் அம்சமும் உள்ளது. இந்த ட்ரொனில் சோ-லிங்க் ஹை-டெபினிஷன் டிஜிட்டல் இமேஜ் டிரான்ஸ்மிஷன் (SoLink high-definition digital image transmission technology) அம்சமும் உள்ளது. இதன் மூலம் 9 கிலோமீட்டர் தூரம் வரை ரியல் டைம் வீடியோ ட்ரான்ஸ்மிஷனை உங்களால் அனுபவிக்க முடியும்.

இது 2.4G மற்றும் 5.2G டூயல் பேண்ட் உடன் 120ms டிலேவுடன் வேலை செய்கிறது. இதில் AI சூப்பர் நைட் ஸீன் (AI super night scene) மற்றும் 400% மேம்படுத்தப்பட்ட சிக்னல் நாய்ஸ் ரேட்ஸியோவுடன் வருகிறது. இந்த ட்ரொன் மிகவும் கைக்கு அடக்கமாக இருக்கிறது. இது வெறும் 250 கிராம் எடையுடன் வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது. இதனால், பல இடங்களில் இதற்கு பிலைட் பெர்மிட் (flight permit) தேவைப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

சோனி கேமராவுடன் சியோமி ஃபிமி மினி 3 ட்ரொன் விலை(Xiaomi Fimi MINI 3 Drone With SONY Price):

இந்த புதிய சியோமி ஃபிமி மினி 3 ட்ரொன் (Xiaomi Fimi MINI 3 Drone) சாதனம் ப்ரொஃபெஷனல் இமேஜிங் மற்றும் பிலைட் கண்ட்ரோல் ஆதரவை கொண்டுள்ளது. இதில் உள்ள ஆட்டோமேட்டிக் கிம்பால் (Gimbal) பல கோணங்களில் பல ஆங்கிள்களில் வீடியோக்களை பதிவு செய்கிறது. இந்த ட்ரொனின் பாதுகாப்பிற்காக, இதில் ஆட்டோமேட்டிக் RTH ஆட்டோமேட்டிக் ரிட்டர்ன் அம்சம், GPS ரியல் டைம் மானிட்டரிங் (GPS real time monitoring) போன்றவை உள்ளது.

கூடுதலாக இதில் ஆட்டோஹோவரிங் ஆன் நோ-ஃபிலை ஜோன் (auto-hovering on a No-Fly zone), ஸ்ட்ராங் விண்ட் வார்னிங் (strong wind warning) மற்றும் லோ-பேட்டரி ரிட்டன் அம்சம் (low battery return) போன்ற பல அம்சங்கள் அடக்கப்பட்டுள்ளது. இதன் விலை பற்றி பேசுகையில், சிங்கிள் பேட்டரி மாடல் இந்திய மதிப்பில் ரூ.23,000 விலையில் வருகிறது. டூயல் பேட்டரி மாடல் ரூ. 27,000 விலையில் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Fimi MINI 3 Drone With Sony 48MP CMOS Sensor Launched Check Price and Specifications Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X