ஆர்டர் போட்ருங்க.. டால்பி ஆடியோ.. 32ஜிபி மெமரி.. ஆஃபரில் Xiaomi 4கே டிவி.. எந்த மாடல்?
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஷாவ்மீ எப் சீரிஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி (Xiaomi F Series 43 inch 4K Smart Fire TV) மாடல் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த ஸ்மார்ட் டிவி ஆனது மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட்டில் ஷாவ்மீ எப் சீரிஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி மாடலுக்கு 37 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.23,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.3500 தள்ளுபடியும் கிடைக்கும். ஆகவே இந்த டிவியை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ஷாவ்மீ எப் சீரிஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி அம்சங்கள் (Xiaomi F Series 43 inch 4K Smart Fire TV Specifications): இந்த ஷாவ்மீ 43 இன்ச் டிவியில் அல்ட்ரா எச்டி 4கே (Ultra HD 4K) டிஸ்பிளே உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), எச்டிஆர் 10 உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த உள்ளன.
ப்ரீமியம் பெசல் லெஸ் டிசைன் (Premium Bezel-less Design) உடன் இந்த ஷாவ்மீ டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஷாவ்மீ நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), 1.07 பில்லியன் கலர்ஸ், வைடு கலர் காமட் (Wide Color Gamut), பிக்சர்-இன்-பிக்சர் மோட் (Picture-in-Picture mode) உள்ளிட் பல சிறப்பான அம்சங்கள் இந்த ஷாவ்மீ டிவியில் உள்ளன.
ஏ55 குவாட் கோர்(A55 Quad Core) பிராசஸர் உடன் ஷாவ்மீ எப் சீரிஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் ஃபயர்டிவி ஓஸ் 8 (FireTv OS 8) மூலம் இந்த ஷாவ்மீ டிவி இயங்குகிறது.
அலெக்சா, மிரகாஸ்ட் (Miracast), ஆப்பிள் ஏர் பிளே 2 உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் ஷாவ்மீ டிவியில் உள்ளன. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதி இந்த ஷாவ்மீ டிவியில் உள்ளது. பின்பு எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், எவி இன்புட், ஆப்டிக்கல், புளூடூத், வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டிவியில் உள்ளன.
டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual: X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஷாவ்மீ எப் சீரிஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி. மேலும் 24W ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஷாவ்மீ டிவி தற்போது கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications