பிளிப்கார்ட்டில் ஆர்டர் போட்ருங்க.. டால்பி ஆடியோ.. HDR 10.. ஆஃபரில் Xiaomi 4கே டிவி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் தற்போது குடியரசு தின சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை இன்று மற்றும் நாளை மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சிறப்பு விற்பனையில் சியோமி நிறுவனத்தின் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி ஒன்று தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் சியோமி எப் சீரிஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி (Xiaomi F Series 43 inch 4K Smart Fire TV) மாடலுக்கு 44 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.750 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை ரூ.20249 விலையில் வாங்கிவிட முடியும்.

சியோமி எப் சீரிஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி அம்சங்கள் (Xiaomi F Series 43 inch 4K Smart Fire TV Specifications): அல்ட்ரா எச்டி 4கே (Ultra HD 4K) டிஸ்பிளே இந்த சியோமி டிவியில் உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), எச்டிஆர் 10 உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த உள்ளன.
ப்ரீமியம் பெசல் லெஸ் டிசைன் (Premium Bezel-less Design) உடன் இந்த சியோமி டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
தனித்துவமான ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), 1.07 பில்லியன் கலர்ஸ், வைடு கலர் காமட் (Wide Color Gamut), பிக்சர்-இன்-பிக்சர் மோட் (Picture-in-Picture mode) உள்ளிட் பல சிறப்பான அம்சங்கள் இந்த சியோமி டிவியில் உள்ளன.
தரமான ஏ55 குவாட் கோர்(A55 Quad Core) பிராசஸர் உடன் சியோமி எப் சீரிஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் ஃபயர்டிவி ஓஸ் 8 (FireTv OS 8) மூலம் இந்த சியோமி டிவி இயங்குகிறது.
அலெக்சா, மிரகாஸ்ட் (Miracast), ஆப்பிள் ஏர் பிளே 2 உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் சியோமி டிவியில உள்ளன. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதி இந்த சியோமி டிவியில் உள்ளது. பின்பு எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், எவி இன்புட், ஆப்டிக்கல், புளூடூத், வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டிவியில் உள்ளன.
டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual: X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த சியோமி எப் சீரிஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி. மேலும் 24W ஃபாகஸ் ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








