Home
Gadgets

கனவிலும் நினைக்காத செம ஆஃபர்.. 55 இன்ச் சியோமி 4K டிவியை வாங்க சரியான நேரம்.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?

ஆண்டு இறுதியில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளை தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது பிளிப்கார்ட். குறிப்பாக பெரிய ஸ்மார்ட் டிவிகளை வாங்க நினைக்கும் பயனர்கள் இப்போது கம்மி விலையில் வாங்க முடியும். இந்நிலையில் சியோமி நிறுவனத்தின் 55 இன்ச் டிவி ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் சியோமி எப் ப்ரோ 55 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி 2025 மாடலுக்கு 47 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.32,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது, ஆகவே இந்த டிவியை ரூ.30,999 விலையில் வாங்கிவிட முடியும்.

கனவிலும் நினைக்காத செம ஆஃபர்.. சியோமி 4K டிவியை வாங்க சரியான நேரம்..

சியோமி எப் ப்ரோ 55 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி 2025 அம்சங்கள் (Xiaomi F Pro 55 inch 4K Smart Fire TV 2025 Specifications): அல்ட்ரா எச்டி 4கே (Ultra HD 4K) டிஸ்பிளே இந்த சியோமி டிவியில் உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), எச்டிஆர் 10 உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த உள்ளன.

அதேபோல் ப்ரீமியம் மெட்டல் பெசல் லெஸ் டிசைன் (Premium Metal Bezel-less Design) உடன் இந்த சியோமி டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

குறிப்பாக ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), 1.07 பில்லியன் கலர்ஸ், வைடு கலர் காமட் (Wide Color Gamut), பிக்சர்-இன்-பிக்சர் மோட் (Picture-in-Picture mode) உள்ளிட் பல சிறப்பான அம்சங்கள் இந்த சியோமி டிவியில் உள்ளன.

தரமான ஏ55 குவாட் கோர்(A55 Quad Core) பிராசஸர் உடன் சியோமி எப் ப்ரோ 55 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி 2025 அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் ஃபயர்டிவி ஓஸ் 8 (FireTv OS 8) மூலம் இந்த சியோமி டிவி இயங்குகிறது.

அலெக்சா, மிரகாஸ்ட் (Miracast), ஆப்பிள் ஏர் பிளே 2 உள்ளிட் பல சிறப்பான வசதிகள் சியோமி டிவியில உள்ளன. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கனவிலும் நினைக்காத செம ஆஃபர்.. சியோமி 4K டிவியை வாங்க சரியான நேரம்..

தனித்துவமான டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual: X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த சியோமி எப் ப்ரோ 55 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி 2025 மாடல். மேலும் 34W ஃபாகஸ் ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

இந்த சியோமி டிவியில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதி உள்ளது. பின்பு எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், எவி இன்புட், ஆப்டிக்கல், புளூடூத், வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டிவியில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியில் அனைத்து சிறப்பான அம்சங்களும் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi F Pro 55 inch 4K Smart Fire TV 2025 available at 47 percent discount on Flipkart: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X