Home
Gadgets

பிளடி ஸ்மூத்.. Xiaomi ஸ்கூட்டர் அறிமுகம்.. இண்டிகேட்டருடன் ஆட்டோமேட்டிக் லைட்.. விலை என்ன தெரியுமா?

சியோமி (Xiaomi) நிறுவனம் அதன் கேட்ஜெட்ஸ் வரிசையில் புதிதாக ஒரு இ-ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதன் பெயர் சியோமி நிறுவனம் சியோமி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 4 ப்ரோ 2வது ஜென் (Xiaomi Electric Scooter 4 Pro 2nd Gen) ஆகும்.

சைனீஸ் டெக் ஜெயிண்ட் நிறுவனமான சியோமி (Xiaomi) தனது ரசிகர்களுக்காக புதிதாக சியோமி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 4 ப்ரோ 2வது ஜென் (Xiaomi Electric Scooter 4 Pro 2nd Gen) என்ற இ-ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 2024 இல் சியோமி நிறுவனம் இந்த புதிய சியோமி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 4 ப்ரோ 2வது ஜென் சாதனத்தை சீன சந்தையில் அறிமுகம் செய்தது.

பிளடி ஸ்மூத்.. Xiaomi ஸ்கூட்டர் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா?

சியோமி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 4 ப்ரோ 2வது ஜென் (Xiaomi Electric Scooter 4 Pro 2nd Gen):

தற்போது இந்த இ-ஸ்கூட்டர் சாதனத்தை சியோமி நிறுவனம் ஜெர்மனி சந்தையிலும் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஐரோப்பா சந்தைக்குள் சியோமியின் புதிய சியோமி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 4 ப்ரோ 2வது ஜென் சாதனம் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சியோமி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 4 ப்ரோ 2வது ஜென் (Xiaomi Electric Scooter 4 Pro 2nd Gen) சாதனம் பற்றிய முழு விபரத்தை இப்போது பார்க்கலாம்.

சியோமி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 4 ப்ரோ 2வது ஜென் (Xiaomi Electric Scooter 4 Pro 2nd Gen) சாதனம் ஒரு ஸ்டாண்டிங் இ-ஸ்கூட்டர் சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சியோமி நிறுவனம் சியோமி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 4 லைட் 2வது ஜென் (Xiaomi Electric Scooter 4 Lite 2nd Gen) என்ற மாடலையும் ஐரோப்பா சந்தையில் அறிமுகம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமியின் அதிகாரப்பூர்வ குளோபல் வலைத்தள பக்கத்தில் இந்த சியோமி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 4 ப்ரோ 2வது ஜென் (Xiaomi Electric Scooter 4 Pro 2nd Gen) சாதனம் குறித்த தகவல் முதலில் வெளியானது. இந்த ஸ்கூட்டர் 1000W பீக் பவர் (peak power) மற்றும் டாப் ஸ்பீட் லிமிட்டாக (top speed limit) 25Km/h சக்தியுடன் வருகிறது.

பிளடி ஸ்மூத்.. Xiaomi ஸ்கூட்டர் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா?

ஆட்டோமேட்டிக் லைட் (Automatic lights) மற்றும் சிக்னல் இண்டிகேட்டர் (Indicator) உடன் சியோமி இ-ஸ்கூட்டர்:

இந்த சாதனத்தை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சியோமி நிறுவனம் மூன்று மாடல்களை வழங்கியுள்ளது. இந்த ஸ்கூட்டர் 468Wh பேட்டரி (Battery) உடன் சுமார் 60Km தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. இதன் ஹாண்டில்பார் மைய பகுதியில் ஒரு டிஜிட்டல் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. இது ஸ்கூட்டர் ஸ்பீட் மற்றும் பேட்டரி ஆயுளை காண்பிக்கிறது. இந்த ஸ்கூட்டர் 10" இன்ச் வைடு டையர் (Tyre) உடன் வருகிறது.

இந்த சியோமி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 4 ப்ரோ 2வது ஜென் சாதனம் ஆட்டோமேட்டிக் லைட் (Automatic lights) மற்றும் சிக்னல் இண்டிகேட்டர் (Indicator) உடன் வருகிறது. இந்த ஸ்கூட்டரை நீங்கள் இரண்டு பாதியாக மடக்கி பயன்படுத்திக்கொள்ளலாம். இது கார்பன் ஸ்டீல் ஃபிரேம் (carbon steel frame) உடன் மிகவும் வலிமையான பாடியை கொண்டுள்ளது. இதன் விலை பற்றி இப்போது பார்க்கலாம்.

சியோமி அறிமுகம் செய்துள்ள இந்த புதிய சியோமி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 4 ப்ரோ 2வது ஜென் சாதனம் ஜெர்மனி சந்தையில் $540 டாலர் மதிப்பில் சலுகை விலையுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ. 45,000 ஆகும். இதன் அசல் விலை $593 டாலர் ஆகும். இந்திய விலைபடி இதன் ரூ. 49,500 ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Electric Scooter 4 Pro 2nd Gen e-Scooter Model Goes On Sale With Automatic Light and Indicator In Germany
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X