Home
Gadgets

ரூ.1,999 பட்ஜெட்ல 20000mAh பேட்டரி.. 22.5W சார்ஜிங்.. 3 டிவைஸ் சார்ஜ்.. ஓவர் சார்ஜ் பாதுகாப்பு.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் இருக்கும் பவர் பேங்க் பிரியர்கள் மூக்கில் விரல் வைக்கும்படி 20000mAh பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடலாக சியோமி காம்பாக்ட் பவர் பேங்க் 20000 (Xiaomi Compact Power Bank 20000) களமிங்கி இருக்கிறது. ஒரே நேரத்தில் 3 டிவைஸ்களில் சார்ஜிங், 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓவர் சார்ஜிங் மட்டும் டெம்ப்ரேச்சர் புரொடெக்சன் போன்ற மற்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த சியோமி காம்பாக்ட் பவர் பேங்க் 20000 மாடலின் முழு விவரங்கள் இதோ.

இப்போது, 5500mAh, 6000mAh, 7300mAh பேட்டரி கேபாசிட்டி கொண்ட் ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் அதிகரித்துவிட்டது. ஏனென்றால், ஓடிடி மற்றும் கேமிங் பிரியர்களுக்கு அதிக பேக்கப் கொடுக்க ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் அதிக கேபாசிட்டி கொண்ட மாடல்களை களமிறக்க தொடங்கி இருக்கின்றன. ஆனால், பிரீமியம் மற்றும் மிட்-ரேஞ்ச் மாடல்களில் அப்படியில்லை.

ரூ.1,999 பட்ஜெட்ல 20000mAh பேட்டரி.. 22.5W சார்ஜிங்.. 3 டிவைஸ் சார்ஜ்!

இப்படி இருந்தும் பவர் பேங்க் மாடல்களுக்கான வரவேற்பு குறையவில்லை. இப்போதெல்லாமல், 10000mAh, 15000mAh கேபாசிட்டி எல்லாம் இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. அதைவிட அதிக கேபாசிட்டியை எதிர்பார்க்க ஸ்மார்ட்போன் பிரியர்கள் தொடங்கிவிட்டனர். இவர்களை மலிவான விலையில் தட்டித்தூக்கும்படி சியோமி காம்பாக்ட் பவர் பேங்க் 20000 களமிறங்கி இருக்கிறது.

சியோமி காம்பாக்ட் பவர் பேங்க் 20000 அம்சங்கள் (Xiaomi Compact Power Bank 20000 Specification): இந்த பவப் பேங்கில் 10000mAh கேபாசிட்டி கொண்ட டூயல் செல் லித்தியம்-அயன் பேட்டரி (Lithium-ion Battery) கிடைக்கிறது. ஒரே நேரத்தில் 3 டிவைஸ்களில் சார்ஜிங் செய்து கொள்ளலாம். இதில் ஆட்டோமேட்டிகலி அட்ஜஸ்ட் பவர் அவுட்புட் (Automatically Adjusts Power Output) கிடைக்கிறது.

இதன் மூலம் ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ் போன்ற டிவைஸ்களுக்கு ஏற்ப, லோவ்-கரண்ட் சார்ஜிங் கொடுக்கப்படும். 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. யுஎஸ்பி-சி (USB-C) கொண்ட டூ-வே ஃபாஸ்ட் சார்ஜிங் (Two-way Fast Charging) கேபிள் கிடைக்கிறது. அதிக பேட்டரி கேபாசிட்டி கிடைப்பதால், 12 லேயர் சர்கியூட் சிப் புரொடெக்சன் (12 Layer Circuit Chip Protection) வருகிறது.

ஆகவே, ஹீட் கன்ட்ரோலுக்காக டெம்ப்ரேச்சர் புரொடெக்சன் (Temperature Protection) மற்றும் சிப் தெர்மல் ஷட்டவுண் புரொடெக்சன் (Chip Thermal Shutdown Protection) கிடைக்கிறது. அதேபோல ஓவர் கரண்ட் ஷார்ட் சர்கியூட் புரொடெக்சன் (Overcurrent Short Circuit Protection) உள்ளது. இன்புட் & அவுட்புட் ஓவர் வோல்டேஜ் புரொடெக்சன் (Output Over-Voltage Protection) கிடைக்கிறது.

மேலும், ஓவர் சார்ஜ் மற்றும் ஓவர் டிஸ்சார்ஜ் புரொடெக்சன் (Over-Charge & Over-Discharge Protection) கிடைக்கிறது. இதுபோக மெட்டல் ஃபாரின் ஆப்ஜெக்ட் டிடெக்சன் (Metal Foreign Object Detection) மற்றும் எலக்ட்ரோஸ்டாடிக் புரொடெக்சன் (Electrostatic Protection) கிடைக்கிறது. இப்படி ஏகப்பட்ட கன்ட்ரோல்கள் மற்றும் பாதுகாப்பு பீச்சர்களை கொடுக்கிறது. யுஎஸ்பி-சி & ஏ போர்ட் வருகிறது.

இவ்வளவு பெரிய பேட்டரி கிடைத்தும் 342 கிராம் மட்டுமே எடை வருகிறது. அதேபோல 32 எம்எம் தடிமன் மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, பெயருக்கு ஏற்ப காம்பாக்ட் டிசைனில் எதிர்பார்க்கலாம். லோவ் பவர் டிஸ்சார்ஜ் மோட், டூ-வே ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களும் கிடைக்கின்றன. டார்க் கிரே (Dark Grey) மற்றும் ஐவரி கிரீன் (Ivory Green) கலர்களில் கிடைக்கிறது.

இந்த சியோமி காம்பாக்ட் பவர் பேங்க் 20000 மாடலின் விலை ரூ.1,999ஆக இருக்கிறது. எம்ஐ.காம் (mi.com), அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) ஆகிய தளங்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஜூலை 10ஆம் தேதி முதல் ஆர்டர் செய்து கொள்ளலாம். 5000mAh பேட்டரி போனை நான்கு முறை சார்ஜ் செய்துகொள்ள வேண்டுமானால், இதை வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Xiaomi Compact Power Bank With 20000mAh Battery Capacity Sale From July 10 Check Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X