Home
Gadgets

இப்படி ஒரு Xioami Buds-க்கு தானே தவம் கிடந்தோம்.. Hi-Res ஆடியோ, 38 மணிநேர பேட்டரி லைஃப், IP57.. எந்த மாடல்?

ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் - ஷாவ்மீ 17 மேக்ஸ் மற்றும் ஷாவ்மீ ஸ்மார்ட் பேண்ட் 10 ப்ரோ ஆகியவற்றுடன், ஷாவ்மீ கிளிப் ஓப்பன்-இயர் வயர்லெஸ் இயர்பட்ஸையும் சீனாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. மேற்கண்ட 3 தயாரிப்புகளுமே இந்திய சந்தைக்கு வர வாய்ப்புள்ளதால், இவைகளின் மீது நாமொரு கண் வைப்பதில் எந்த தவறும் இல்லை.

ஷாவ்மீ கிளிப் ஓப்பன்-இயர் வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை: சீனாவில் இது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.12,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அங்கே இந்த இயர்பட்ஸ், அப்சிடியன் பிளாக், பேரட் பர்ப்பிள், பேர்ல் ஒயிட் மற்றும் சாட்டின் கோல்ட் ஆகிய 4 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.

இப்படி ஒரு Xioami Buds-க்கு தானே தவம் கிடந்தோம்!

ஷாவ்மீ 17 மேக்ஸ் விலை: சீனாவில் இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.68,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 8000mAh பேட்டரி, லைக்கா தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 200 மெகாபிக்சல் ரியர் கேமரா ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

ஷாவ்மீ ஸ்மார்ட் பேண்ட் 10 ப்ரோ விலை: சாதாரண அலுமினிய மாடல் தற்போது சீனாவில், இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.6000 க்கு வாங்க கிடைக்கிறது. அதே சமயம் செராமிக் மாடலின் விலை தோராயமாக ரூ.6800 ஆகும். கடைசியாக உள்ள லெதர் ஸ்ட்ராப் எடிஷனின் விலை, இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.6500 ஆகும்.

ஷாவ்மீ கிளிப் ஓப்பன்-இயர் வயர்லெஸ் இயர்பட்ஸ் முக்கிய அம்சங்கள்:
- 20Hz முதல் 48kHz வரையிலான பிரெக்வன்சி ரேஞ்ச்சில் ஆடியோவை மீண்டும் உருவாக்க வடிவமைக்கப்பட்ட மைக்ரோகிரிஸ்டலின் மெட்டல்-கோட்டட் டயாஃப்ரம்-ஐ பயன்படுத்தும் 11மிமீ டைனமிக் டிரைவர் யூனிட்
- LHDC 5.0 உடன் ஹை-ரெசல்யூஷன் ஆடியோ டிகோடிங்கை ஆதரிக்கின்றன
- Hi-Res ஆடியோ வயர்லெஸ் சான்றிதழ்
- VPU போன்-கண்டக்ஷன் மைக்ரோஃபோனுடன் த்ரீ மைக்ரோஃபோன் சீரீஸ்

- XiaoAI உடன் தொடர்ச்சியான வாய்ஸ் கான்வர்ஷேஷன்களை ஆதரிக்கிறது. இதனால் செய்திகள், வானிலை மற்றும் அன்றாட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும்.
- இந்த இயர்பட்ஸ்களில் XiaoAI கம்பேனியன் மோடும் உள்ளது, இது மிகவும் இயல்பானதாகவும் சூழலுக்கு ஏற்றதாகவும் உணரக்கூடிய உரையாடல் தொடர்புகளை செயல்படுத்துகிறது.

- செயலியில் பல செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் ப்ரொடெக்டிவிட்டி டூல்களை சேர்த்துள்ளது.
- சார்ஜிங் கேஸை கண்டறிய ஆப்பிளின் 'ஃபைண்ட் மை' (Find My) ஆப்பை ஆதரிக்கின்றன; ஒவ்வொரு இயர்பட்ஸையும் சார்ஜிங் கேஸையும் தனித்தனியாக கண்டறிய முடியும் என்றும் சியோமி கூறுகிறது

- சியோமி ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) டிவைஸ் நெட்வொர்க்குகள் மூலம் லாங் டிஸ்டன்ஸ் பொசிஷனிங் மற்றும் இயர்பட்ஸ் மற்றும் சார்ஜிங் கேஸ் இரண்டிலிருந்தும் ஒலிகளை எழுப்பக்கூடிய நியர்பை ரிங்டோன்
- ப்ளூடூத் 5.4, AAC, SBC மற்றும் LHDC 5.0 கோடெக்குகள்
- டூயல் டிவைஸ் ஸ்மார்ட் இணைப்பு; இது இயர்பட்ஸை ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களுடன் கனெக்ட் செய்ய அனுமதிக்கிறது.
- கெஸ்ச்சர் கண்ட்ரோல்களையும் ஆதரிக்கிறது. இதன் கீழ் பயனர்கள் ஆடியோவை இயக்க அல்லது இடைநிறுத்த இருமுறை டேப் செய்யலாம மற்றும் பாடல்களை தவிர்க்க மும்முறை டேப் செய்யலாம்

- இயர்பட்களில் ஒவ்வொன்றிலும் 60mAh பேட்டரி
- USB டைப்-சி போர்ட்டை கொண்ட சார்ஜிங் கேஸில் 510mAh பேட்டரி
- இந்த இயர்பட்கள் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன; 10 நிமிட சார்ஜில் நான்கு மணிநேரம் வரை இசையை கேட்கலாம்
- AAC பயன்முறையில், இந்த இயர்பட்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒன்பது மணிநேரம் வரையிலும், சார்ஜிங் கேஸுடன் சேர்த்து மொத்தம் 38 மணிநேரம் வரையிலும் பேட்டரி லைஃப்பை வழங்கும்

- ஒவ்வொரு சியோமி கிளிப் இயர்பட்டும் சுமார் 5.5 கிராம் எடை கொண்டது
- 28.15×18.98×24.98 மிமீ அளவுடையது
- சார்ஜிங் கேஸ் சுமார் 41.42 கிராம் எடை கொண்டது
- 51.13×51.13×30.07 மிமீ அளவுடையது
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP57 ரேட்டிங்

Best Mobiles in India

English summary
Xiaomi Clip open ear wireless earbuds With 38 Hours Battery Life IP57 Launched Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X