சியோமி : சிஇஎஸ்2017-ல் நிகழ்த்திய அட்டகாசமான அறிமுகங்கள்.!

CES 2017ல் சியாமி நிறுவனம் என்னென்ன புதுப்புது பொருட்களை அறிமுகம் செய்துள்ளது என்பதை பார்ப்போம்.!

By Siva
|

ஆசிய நாடுகளின் ஆப்பிள் நிறுவனம் என்று அழைக்கப்படும் சியாமி நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் முதலே தனது புதிய தயாரிப்புகளை விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் தற்போது நடைபெற்று முடிந்துள்ள CES 2017ல் பல புதிய தயாரிப்புகளை வெளியிட்டு அனைவரையும் அசத்தியுள்ளது

விரைவில் 'போல்டபிள் டிஸ்பிளே' கொண்ட சாம்சங் கருவிகள்.!

CES 2017ல் மற்ற நிறுவனங்களை போலவே சியாமி நிறுவனமும் என்னென்ன புதுப்புது பொருட்களை அறிமுகம் செய்துள்ளது என்பதை பார்ப்போம்.

மி டிவி 4:

மி டிவி 4:

சியாமி நிறுவனத்தின் புதிய படைப்பு மி டிவி 4. இதுதான் இதுவரை வெளிவந்துள்ள மிக மெல்லிய தொலைக்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. மார்க்கெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை விட மெல்லியானது என்றால் இதன் அளவை யூகித்து கொள்ளுங்கள்.

மேலும் இந்த டிவி தான் உலகிலேயே முதல் டால்பி அட்மாஸ் ஆடியோ டெக்னாலஜியில் வெளிவந்துள்ள டிவி ஆகும். ஒரு சினிமா தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்ப்பது போன்ற பிரம்மையை இந்த டிவி நமக்கு உணர்த்தும். மேலும் இந்த டிவி பெஸல் லெஸ் தன்மை உடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுவரில் பொருத்தக்கூடிய வகையில் அமைந்துள்ள இந்த டிவி 49 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் அளவினை கொண்டது. இதில் ஆண்ட்ரய்டு ஓஎஸ்-ம் உள்ளது

மி ரெளட்டர் HD (Mi Router HD)

மி ரெளட்டர் HD (Mi Router HD)

சியாமி நிறுவனத்தின் அடுத்த அசத்தலான படைப்பு மி ரெளட்டர் HD. இது உலக தரத்தில் தயாரிக்கப்பட்ட வயர்லெஸ் சாதனம். 8 TB கெப்பாசிட்டி உள்ள ஹார்ட் டிரைவ் இதில் உள்ளதால் 2600 Mbps வேகத்தில் டிரான்ஸ்பர் செய்ய இதனால் முடியும். 1TB and 8TB.

ஆகிய இரண்டு அளவுகளில் வெளிவந்துள்ள இந்த மி ரெளட்டர் HD வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்று கூறப்படுகிறது.

மி மிக்ஸ் ஒயிட்:

மி மிக்ஸ் ஒயிட்:

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மி மிஸ் ஸ்மார்ட்போனை சியாமி நிறுவனம் வெளியிட்டு பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது CES 2017-ல் மி மிக்ஸ் ஒயிட் என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

இதில் உள்ள அம்சங்கள் அனைத்தும் மி மிக்ஸ் மாடலில் உள்ளது போலவே உள்ளது. செராமிக் பாடியுடன், 18 காரட் தங்க முலாம் பூச்சுடன், அல்ட்ராசானிக் பிங்கர்பிரிண்ட் சென்சார் உடன், அசத்தலான கேமிரா மற்றும் பெஸ்ல் லெஸ் டிஸ்ப்ளேவுடன் வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Xiaomi announced the launch of Mi TV 4, Mi Router HD, and Mi Mix White smartphone at the CES 2017. Read more...

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X