என்னங்க சொல்றீங்க.. DUAL-ஆம்பிளிபயர்.. Wi-Fi ஆடியோ.. 100dB நாய்ஸ் கேன்ஷலேஷன்.. 570mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ப்ளூடூத் இயர்பட்ஸ் மாடல்களையும் தூக்கி சாப்பிடும்படி வை-பை ஆடியோ கனெக்டிவிட்டியுடன் சியோமி பட்ஸ் 5 ப்ரோ (Xiaomi Buds 5 Pro) மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. டூயல் ஆம்பிளிபயர், ஹை-ரெஸ் ஆடியோ, 100dB அல்ட்ரா கிளியர் நாய்ஸ் ரெடக்சன், 570mAh பேட்டரி போன்ற மற்ற பீச்சர்களிலும் பிரீமியம் காட்டி இருக்கிறது. இந்த சியோமி பட்ஸ் 5 ப்ரோ மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இதுவரை வெளியான இயர்பட்ஸ் மாடல்களில் இல்லாதபடி இந்த சியோமி பட்ஸ் 5 ப்ரோ மாடலில் வை-பை ஆடியோ டிரான்ஸ்மிஷன் (Wi-Fi Audio Transmission) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, ப்ளூடூத் வெர்ஷன் (Bluetooth Version) மற்றும் வை-பை வெர்ஷனில் (Wi-Fi Version) விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இப்போது, பிரீமியமாக இருக்கும் மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்வோம்.

சியோமி பட்ஸ் 5 ப்ரோ அம்சங்கள் (Xiaomi Buds 5 Pro Specifications): இந்த சியோமி மாடலில் டூயல் ஆம்பிளிபயர் டிரிபிள்-டிரைவர் அகஸ்டிக் சிஸ்டம் (Dual Amplifier Triple Driver Acoustic System) கிடைக்கிறது. ஆகவே, 11 எம்எம் டைட்டானியம் வூப்பர் (Titanium Woofer) மட்டுமல்லாமல், 10 எம்எம் செராமிக் ட்வீடர் (Ceramic Tweeter) கிடைக்கிறது. ஆடியோ டெக்னாலஜிகளில் பின்னியெடுக்கிறது.
ஏனென்றால், 2.1எம்பிபிஎஸ் ஏபிடிஎக்ஸ் லாஸ்லெஸ் டெக்னாலஜி (aptX Lossless Technology) வருகிறது. ஆகவே, பிரீமியம்-குவாலிட்டி ஆடியோ அவுட்புட் எதிர்பார்க்கலாம். ப்ரீ-செட் ஈகியூ மோட்கள் (EQ Modes) இருக்கின்றன. ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் உள்ளது. இதுபோக ஏஏசி (AAC), எஸ்பிசி (SBC) போன்ற ஆடியோ கோடக் சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த சியோமி பட்ஸ் 5 ப்ரோ மாடலில் 55dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) சப்போர்ட் கொண்ட டிரிபிள் மைக் சிஸ்டம் (Triple Mic System) கிடைக்கிறது. இதுபோக அவுட்டோர் நாய்ஸ் கேன்சலேஷன் சப்போர்ட் கொடுக்க 100dB அல்ட்ரா கிளியர் கால் நாய்ஸ் ரெடக்சன் (Ultra Clear Call Noise Reduction) கிடைக்கிறது. ஆகவே, கிரிஸ்டல் கிளியர் கால் அனுபவம் கிடைக்கும்.
ஏஐ இன்டலிஜென்ட் ஆப் மற்றும் ஏஐ பீச்சர்களையும் கொடுக்கிறது. ஆகவே, ஸ்மார்ட்போன்களை போலவே ரியல்-டைம் டிரான்ஸ்லேஷன் (Real Time Translation) செய்து கொள்ள முடியும். அதேபோல வாய்ஸ்-டூ-டெக்ஸ்ட் (Voice-to-text) அவுட்புட் கிடைக்கிறது. இந்த சியோமி பட்ஸ் 5 ப்ரோவில் ஹெட் டிராக்கிங் (Head Tracking) மற்றும் ஆன்-இயர் டிடெக்சன் (On-ear Detection) சப்போர்ட் உள்ளது.
அதேபோல ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio) வருகிறது. ஆகவே, உங்களது ஹெட் மூவ்மெண்ட்களுக்கு ஏற்ப ஆடியோ அவுட் கிடைக்கும். அதேபோல காதுகளில் வைக்கும்போது ஆடியோ ஆன் மற்றும் எடுக்கும்போது பாஸ் செய்து கொள்ளும். பிரீமியம் மாடலாக இருப்பதால், IP54 வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ப்ளூடூத் வெர்ஷனில் 570mAh பேட்டரியுடன் சார்ஜிங் கேஸ் கிடைக்கிறது.
அதேபோல டிரைவர்களில் 53mAh பேட்டரி இருக்கிறது. வை-பை வெர்ஷனில் அதே 570mAh பேட்டரியுன் சார்ஜிங் கேஸ் வருகிறது. ஆனால், டிரைவர்களில் 64mAh பேட்டரி கிடைக்கிறது. இரண்டு வெர்ஷன்களுக்கும் டைப்-சி சார்ஜிங் கிடைக்கிறது. சார்ஜிங் கேஸ் மூலம் 40 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். டிரைவர்களை பார்க்கையில், வை-பை மாடலில் 10 மணி நேரங்களுக்கு கிடைக்கும்.
ப்ளூடூத் மாடலின் டிரைவர்களில் 8 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். ஸ்னோவ் மவுண்டெய்ன் ஒயிட் (Snow Mountain White), டைட்டானியம் கோல்டு (Titanium Gold) மற்றும் மிராஜ் பிளாக் (Mirage Black) கலர்களில் கிடைக்கிறது. வை-பை வெர்ஷனின் விலை ரூ. 17,990ஆகவும், ப்ளூடூத் வெர்ஷனின் விலை ரூ.15,590ஆகவும் இருக்கிறது. சீனாவில் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications