எல்லோரும் வாங்க நினைத்த Xiaomi Book Air 13 லேப்டாப் அறிமுகம்.! விலை என்ன தெரியுமா?

|

உலக தரத்தில் ஒரு பெஸ்டான லேப்டாப் டிவைஸை சுட்டிக்காட்டுங்கள் என்று கூறினால், பெரும்பாலானோர் கண்களை மூடிக்கொண்டு ஆப்பிள் மேக்புக் மாடல்களை சுட்டிக்காட்டுவார்கள்.

காரணம், அது ஆப்பிள் தயாரிப்பு என்ற காரணத்தைத் தவிர்த்து, இவை மிகவும் ஸ்லிம் ஆகவும், வெயிட்லெஸ் ஆகவும், சிறந்த திறனுடன் செயல்படுவதினாலும் இதற்கு உலகளவில் ரசிகர்கள் குவிந்துள்ளனர். இப்போது, இந்த கவனம் Xiaomi Book Air 13 மீது மாறியுள்ளது.

Xiaomi Book Air 13 லேப்டாப் அறிமுகம்

Xiaomi Book Air 13 லேப்டாப் அறிமுகம்

ஆம், சியோமி நிறுவனம் சைலெண்டாக ஒரு புதிய லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதை நிறுவனம் Xiaomi Book Air 13 என்ற பெயரில் அழைக்கிறது.

சமீபத்தில், Xiaomi இன் துணை பிராண்டான Redmi நிறுவனம் Redmi Note 12 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து, இந்த லேப்டாப் சாதனத்தை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

புதிய ஸ்மார்ட்போன்களுக்கு கூடுதலாக Xiaomi Book Air 13 லேப்டாப்பை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மக்களின் கவனத்தை ஈர்த்த சியோமி புக் ஏர் 13 லேப்டாப்

மக்களின் கவனத்தை ஈர்த்த சியோமி புக் ஏர் 13 லேப்டாப்

இந்த லேப்டாப் அறிமுகமாவதற்கு முன்னரே, இதன் மீது மக்களின் கவனம் பாய்ந்தது. காரணம், இந்த புதிய லேப்டாப் மிகவும் ஸ்லிம் ஆனா வடிவமைப்புடன், மெல்லிய பேசல்களுடன் டீஸ் செய்யப்பட்டிருந்தது.

ஆப்பிள் நிறுவனத்தின், மேக்புக் ஏர் லேப்டாப் மாடல்கள் போல இல்லாமல், இது டச் டிஸ்பிளேவுடன் 360 டிகிரி போல்ட் அம்சத்துடன் மிகவும் தனித்துவமான டிசைனில் காட்சியளிப்பதனால், மக்களின் கவனத்தை இந்த லேப்டாப் ஈர்த்துள்ளது.

வீடியோ கால் வர சொன்னாங்க.! டக்குனு அந்த பொண்ணு ரெக்கார்ட் செஞ்சுட்டு.! உஷார் மக்களே.!வீடியோ கால் வர சொன்னாங்க.! டக்குனு அந்த பொண்ணு ரெக்கார்ட் செஞ்சுட்டு.! உஷார் மக்களே.!

Xiaomi Book Air 13 லேப்டாப் பற்றிய சிறப்பம்ச விபரங்கள்

Xiaomi Book Air 13 லேப்டாப் பற்றிய சிறப்பம்ச விபரங்கள்

சியோமி நிறுவனத்தின் வரவிருக்கும் லேப்டாப் மாடல் பட்ஜெட் விவரக்குறிப்புகளைக் கொண்டிருக்கிறது.

இதன் வடிவமைப்பு மீது நிறுவனம் அதிக கவனம் செலுத்தியுள்ளது தெளிவாக தெரிகிறது.

இந்த Xiaomi Book Air 13 லேப்டாப் பற்றிய சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம்.

இந்த Xiaomi Book Air 13 லேப்டாப் 2880 x 1800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 13.3' இன்ச் OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இது 60 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் வீதம் உடன் 16:10 விகிதத்துடன் வருகிறது. இது ஸ்டைலஸ் உடன் வருகிறது.

இதில் என்ன பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது?

இதில் என்ன பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது?

இந்த லேப்டாப் 12வது ஜெனரல் இன்டெல் கோர் யு சீரிஸ் சிப்செட் உடன் வருகிறது. இது Core i7-1250U CPU உடன் வெளிவந்துள்ளது.

இது பட்ஜெட் செக்மென்ட்டில் கிடைக்கும் சக்தி வாய்ந்த பிராசஸர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த Xiaomi Book Air 13 லேப்டாப் 512 GB SSD ஸ்டோரேஜ் உடன் 16 GB LPDDR5-5200 RAM சிப்செட்களுடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த லேப்டாப் 12 மிமீ தடிமன் மற்றும் 1.2 கிலோ எடையுடன் வருகிறது.

Xiaomi Book Air 13 லேப்டாப் விலை என்ன?

Xiaomi Book Air 13 லேப்டாப் விலை என்ன?

இந்த Xiaomi Book Air 13 லேப்டாப் டிவைஸ் 65 W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 58.3 Wh பேட்டரியை உள்ளடக்கி வெளிவந்துள்ளது.

கடைசியாக, இந்த லேப்டாப் பட்ஜெட் விலையில் Wi-Fi 6E இணைப்பு, இரண்டு தண்டர்போல்ட் இணைப்புகள் மற்றும் உள்ளமைக்கப்பட்ட புளூடூத் 5.2 போன்றவற்றைக் கொண்டிருக்கும்.

இந்தியாவில் இந்த லேப்டாப் ரூ. 68,224 என்ற விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த Xiaomi Book Air 13 நல்ல வரவேற்பை பெரும் என்று நம்பப்படுகிறது.

ரூ.74,999 போனை வெறும் ரூ.17,400 விலைக்கு வாங்க முடியுமா? இப்படி செஞ்சா முடியும்.!ரூ.74,999 போனை வெறும் ரூ.17,400 விலைக்கு வாங்க முடியுமா? இப்படி செஞ்சா முடியும்.!

இந்தியாவில் கிடைக்கும் மிகவும் குறைந்த விலை லேப்டாப் இப்போது இது தான்.!

இந்தியாவில் கிடைக்கும் மிகவும் குறைந்த விலை லேப்டாப் இப்போது இது தான்.!

சமீபத்தில், இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ஜியோபுக் லேப்டாப் சாதனத்தை அறிமுகம் செய்தது.

முதற்கட்டமாக இந்த லேப்டாப் இந்தியாவின் அரசாங்க தளத்தில் விற்பனை செய்யப்பட்ட போது, அனைத்து யூனிட்களும் விற்றுத் தீர்ந்தது.

இப்போது இந்த லேப்டாப் சாதனம் ரிலையன்ஸ் டிஜிட்டல் தளத்தில் ரூ. 18,000 என்ற விலை வரம்பில் வாங்க கிடைக்கிறது.

இது வெளியில் வெறும் எங்கும் வாங்கக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Xiaomi Book Air 13 Laptop With Touchscreen Display And Stylus Launched

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X