மின்னல் வேக வைஃபை.. Xiaomi-ன் முதல் WiFi 7 ரௌட்டர்.. 128 டிவைஸ் வரை இணைக்கலாமா? என்ன விலை? என்ன மாடல்?
சியோமி (Xiaomi) நிறுவனம் லேட்டஸ்ட் வைஃபை 7 அம்சத்துடன் இயங்கும் புதிய வைஃபை ரௌட்டர் (Wi-Fi router) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனத்தை நிறுவனம் சியோமி பிஇ5000 ரௌட்டர் (Xiaomi BE5000 router) என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது.
சியோமி நிறுவனம் அதன் சொந்த சந்தையான சீனாவில் புதிதாக சியோமி பிஇ5000 ரௌட்டர் (Xiaomi BE5000 router) என்ற சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனம் மெஷ் (Mesh) மற்றும் வைஃபை 7 ஆதரவுடன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வைஃபை 7 (Wi-Fi 7) அம்சத்துடன் இயங்கும் முதல் சக்தி வாய்ந்த சியோமி ரௌட்டர் (Xiaomi router) சாதனமாக இந்த டிவைஸ் விற்பனைக்கு வந்துள்ளது.

சியோமி பிஇ5000 ரௌட்டர் (Xiaomi BE5000 router):
இந்த புதிய சியோமி பிஇ5000 ரௌட்டர் (Xiaomi BE5000 router) சாதனம் 5,011 Mbps உடன் 2.4GHz மற்றும் 5GHz ஃபிரிக்வேன்சி பேண்ட் (frequency bands) இல் இங்கும் சாதனமாக வெளிவந்துள்ளது. இந்த ரௌட்டரின் சிறப்பம்சமே, இதில் வைஃபை 7 அம்சம் இருக்கிறது என்பது தான். இந்த லேட்டஸ்ட் தொழில்நுட்பம், 68% செயல்திறன் (Throughput) மற்றும் 48% ஸ்பீட் (ஸ்பீட்) அதிக வேகத்தை கொண்டுள்ளது.
சமீபத்தில் வெளியான வைஃபை 6 (Wi-Fi 6) தொழில்நுட்பத்தின் வேகத்தை விட அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மல்டி லிங்க் ஆபரேஷன் (MLO) மற்றும் இது ஒரே நேரத்தில் இரண்டு பிரிக்வேன்சியை பேண்டை பயன்படுத்தும் அம்சத்தையும் கொண்டுள்ளது. MLO டூயல் சேனல் இன்டெக்ரேஷன் அம்சம் சிறந்த வைஃபை கனெக்டிவிட்டியை வழங்குகிறது. நீண்ட துரைத்தை சிறந்த நெட்வொர்க் கனெக்டிவிட்டி உடன் வழங்குகிறது.

சியோமி பிஇ5000 ரௌட்டர் விலை:
இந்த புதிய சியோமி பிஇ5000 ரௌட்டர் (Xiaomi BE5000 router) சாதனம் எக்ஸ்ரேஞ் 2.0 (Xrange 2.0 technology) தொழில்நுட்பத்துடன் இயங்குகிறது. இது 4.5 மீட்டர் சிக்னல் கவரேஜ்ஜை வழங்குகிறது. இந்த ரௌட்டர் 4 போர்ட் உடன் வருகிறது. இதில் 2.5Gbps ஹை-ஸ்பீட் WAN/LAN நெட்வொர்க் போர்ட் உடன் மூன்று 1Gbps WAN/LAN போர்ட் உடன் வருகிறது.
6nm ஹை-பெர்பார்மென்ஸ் டூயல் வயர்லெஸ் சிப் உடன் 128 டிவைஸ் வரை இணைக்க அனுமதிக்கும் அம்சத்தை கொண்டுள்ளது. இது ஹைப்பர் ஓஎஸ் (Hyper OS) கனெக்ட் அம்சத்துடன் ஸ்மார்ட் ஹோம் சாதனமாக வெளிவந்துள்ளது. இதன் விலை பற்றி பேசுகையில், இது சீனாவில் $40 டாலர் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ஆப்பிள் இதன் விலை ரூ.3,333 ஆகும். தற்போது இது JD.com வழியாக கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








