சியோமி ஆதரவுடன் இந்தியாவில் களமிறங்கும் மலிவு விலை கேமராக்கள்.!

|

பிரபல சியோமி நிறுவனத்தின் ஆதரவு நிறுவனமான யீ டெக்னாலஜிஸ் ஆனது அதன் கோப்ரோ (GoPro) போன்ற நட்பு விலையிலான டிஜிட்டல் கேமராக்கள் மூலம் அறியப்படுகிறது. ஏற்கனவே சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஒரு தளத்தை நிறுவியுள்ள இந்த நிறுவனம், இப்போது இந்திய சந்தையை நோக்கி முன்னெடுத்துள்ளது.

சியோமி ஆதரவுடன் இந்தியாவில் களமிறங்கும் மலிவு விலை கேமராக்கள்.!

யீ டெக்னாலஜிஸ் இந்தியாவில் அதன் இரண்டு ஆக்ஷன் கேமராக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. யீ ஆக்ஷன் கேமரா மற்றும் யீ 4கே ஆக்ஷன் கேமரா என்ற பெயர் கொண்ட இரண்டும் கேமராக்களும் தற்போது அமேசானில் முறையே ரூ.6,990/- மற்றும் ரூ.17,990/- என்ற விலைக்கு விற்பனைக்கு கிடக்கின்றன.

ரூ.2,990 மற்றும் ரூ.4,990/-

ரூ.2,990 மற்றும் ரூ.4,990/-

இந்த கேமராக்களுடன் சேர்த்து இரண்டு பாதுகாப்பு கேமராக்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன யீ ஹோம் ஐபி கேமரா மற்றும் யீ டோம் ஐபி கேமரா என்று பெயர்கொண்ட இந்த சாதனங்கள் முறையே ரூ.2,990 மற்றும் ரூ.4,990/- என்ற விலை நிர்ண்யம் கொண்டுள்ளன.

யீ ஆக்ஷன் கேமரா

யீ ஆக்ஷன் கேமரா

யீ ஆக்ஷன் கேமராவை பொறுத்தமட்டில் 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்206 லென்ஸ், அம்ரேல்லே ஏ7எல்எஸ் (Amarelle A7LS) இமேஜ் ப்ராஸஸிங் சிப்செட், 60எப்பிஎஸ் வேகத்திலான 1080பி வீடியோ பதிவு திறன் ஆகிய அம்சங்களுடன் வைஃபை மற்றும் ப்ளூடூத் 4.0 போன்ற இணைப்பு விருப்பங்களுடன் வருகிறது.

யீ 4கே ஆக்ஷன் கேமரா

யீ 4கே ஆக்ஷன் கேமரா

யீ 4கே ஆக்ஷன் கேமராவின் பெயர் குறிப்பிடுவது போலவே சாதனம் 4கே திறன்களை கொண்டுள்ளது. இது 30எப்பிஎஸ் வேகத்தில் 4கே வீடியோக்களை பதிவு செய்ய அனுமதிக்கிறது.

400எம்ஏஎச் பேட்டரி

400எம்ஏஎச் பேட்டரி

உடன் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்புடன் 2.19 இன்ச் டிஸ்ப்ளே, இஐஎஸ் மற்றும் 7பி லென்ஸ் கொண்ட 12 மெகாபிக்சல் எப் / 2.8 சோனி ஐஎம்எக்ஸ்377 சென்சார், 1400எம்ஏஎச் பேட்டரி ஆகிய அம்சங்களுடன் வைஃபை, மற்றும் ப்ளூடூத் 4.0 ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் கொண்டுள்ளது.

111-டிகிரி வைட்-ஆங்கிள் லென்ஸ்

111-டிகிரி வைட்-ஆங்கிள் லென்ஸ்

வெளியாகியுள்ள பாதுகாப்பு கேமராக்களை பொறுத்தமட்டில், யீ ஹோம் கேமரா ஆனது வயர்லெஸ் ஐபி பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்புடன் இந்தியாவில் கிடைக்கக்கூடிய மலிவான சாதனமாக திகழ்கிறது. 111-டிகிரி வைட்-ஆங்கிள் லென்ஸ், மேம்பட்ட இரவு பார்வை, உயர் துல்லிய இயக்கம் கண்டறிதல், மற்றும் மைக்ரோஃபோனை உள்ளிட்ட அம்சங்களை கொண்ட 1 மெகாபிக்சல் சிஎம்ஓஎஸ் சென்சார் கொண்டுள்ளது.

10 விநாடிகள் ஸ்மார்ட் மோஷன் டிராக்கிங்

10 விநாடிகள் ஸ்மார்ட் மோஷன் டிராக்கிங்

யீ டோம் ஐபி கேமராவை பொறுத்தமட்டில் 360 டிகிரி கவரேஜ், 10 விநாடிகள் ஸ்மார்ட் மோஷன் டிராக்கிங், மற்றும் உள்ளமைக்கப்பட்ட மைக்ரோபோன் போன்ற ஆகிய அம்சங்களை ஒன்றுள்ளது. இக்கருவிகள் இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi-Backed Yi Technologies Brings Its Action and Security Cameras to India. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X